AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் பிப்ரவரி மாத ராசி பலன் 2022 | February Matha Simmam Rasi Palan 2022

dateJanuary 21, 2022

சிம்மம் பிப்ரவரி 2022 பொதுப்பலன்:

சிம்ம ராசிக்காரர்கள் பிப்ரவரி 2022 இல் கலவையான பலன்களைப் பெறலாம். உடல்நலம் மற்றும் தொழில் சம்பந்தமான சில ஏமாற்றங்கள் அவர்களுக்கு சற்று மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். உங்கள் முயற்சிகளில் திட்டமிடல் இல்லாமை அல்லது பணிகளைச் சரியாக நிறைவேற்ற இயலாமை போன்றவையும் இருக்கலாம். இருப்பினும், தொழில் அல்லது வியாபாரத்தில் லாபம் இருக்கலாம்.  ஆனால் பிப்ரவரி 2022 இல் வேலை அல்லது வியாபாரத்தில் தொழில் வளர்ச்சி மெதுவாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் காதல் மற்றும் உறவுகளில் சில நிலையான போராட்டங்கள் இருக்கக்கூடும் என்பதால் சில கஷ்டங்களும் துக்கங்களும் இருக்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்ப உறவு : 

பிப்ரவரி 2022 இல் உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது உங்கள் துணை  உங்கள் இதயத்தை உடைக்க வாய்ப்புகள் உள்ளன. தவிர, திருமணம் ஆகாத இளம் சிம்ம ராசிக்காரர்கள் ஒரு குறுகிய காலத்திற்கு சாதாரண காதல் விவகாரங்களில் ஈடுபடலாம். இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கையில் தனிமை மற்றும் சோகம் இருக்கலாம். உங்கள் காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது செழிப்பாகவோ இருக்காது. எனவே, கவனமுடன் இருக்க வேண்டும். 

திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணை  விசுவாசமாகவும், அக்கறையுடனும், ஆதரவாகவும் இருக்கலாம். உங்களில் சிலர் உங்கள் வாழ்க்கைத் துணையுடன்      சில கவர்ச்சியான இடங்களுக்கு சுற்றுப்பயணத்திற்குச் செல்லலாம், ஒரு சிலர் குறுகிய பயணத்திற்காக வெளிநாடு செல்லலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் அமைதியும் திருப்தியும் இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதி நிலை:

பிப்ரவரி 2022 இல் பண வரவு மந்தமாக இருக்கலாம்,. அதுமட்டுமின்றி, இந்த மாதத்தில் நிதியும் சிறிது காலம் முடங்கலாம். இருப்பினும், மாத இறுதியில் உங்கள் நிதி நிலையில் மெதுவான முன்னேற்றம் அல்லது வளர்ச்சி இருக்கலாம். சிலர் கடன் அல்லது வட்டி செலுத்துதல் ஆகியவற்றின் சுமையை சந்திக்க நேரிடும். அதிக செலவுகள் காரணமாக  ஒரு சிலர் தங்கள் வரி அல்லது வாடகையை கூட செலுத்த முடியாமல் போகலாம். சேமிக்க இயலாது போகலாம். இந்த மாதம் பல சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் வளமான மாதமாக  இருக்காது.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் & புதன் பூஜை 

வேலை:

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் தொழில் வளர்ச்சியின் வேகம் மெதுவாக இருக்கும். சுறுசுறுப்பாக செயலாற்றி உங்களால் பணிகளை  குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். இதன் விளைவாக, உங்கள் அத்தியாவசிய நடவடிக்கைகளில் சில தாமதங்கள் ஏற்படலாம். எனவே, பிப்ரவரி 2022ல் உங்கள் செயல்திறனில் உங்கள் மேல்  அதிகாரிகளும் எஜமானர்களும்  மகிழ்ச்சியடையாமல் போகலாம்.

கூடுதலாக, சிலர் பணியிடத்தில் முக்கியமான பதவிகள் அல்லது மரியாதையை இழக்க நேரிடும். உங்கள் வேலையில் நீங்கள் திறமையானவராக இருந்தாலும், உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். எனவே, பணியிடத்தில், குறிப்பாக அரசாங்க வேலையில் நீங்கள் மோதல்கள் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இரையாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கவனமாக இருங்கள்!

உத்தியோகத்தில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை 

தொழில் :

பல சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் வியாபாரத்திலும், சுயதொழில் மூலம் சில லாபங்களும் ஆதாயங்களும் இருக்கலாம், ஆனால் உங்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது. தொழிலதிபர்கள் விரும்பிய முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், இந்த பிப்ரவரி புதிதாக தொழில் எதையும் தொடங்க நல்ல மாதமாக இருக்காது. இருப்பினும், ஊக வணிகங்கள்  மற்றும் முதலீடுகள் மாத இறுதியில் உங்களுக்கு சில ஆதாயங்களைப் பெற்றத் தரலாம்.  தவிர, பங்கு மற்றும் பங்குச் சந்தை மூலம் சில லாபங்களைப் பெறலாம், அதே நேரத்தில் ரியல் எஸ்டேட், உணவு மற்றும் விவசாய வணிகங்கள் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு கணிசமான முன்னேற்றத்தை அடையலாம். பால் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி வணிகங்களில்  நஷ்டம்  ஏற்படலாம்.

தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில் வல்லுனர்கள் :

உங்களின் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு  பிப்ரவரியில் தடைபடலாம். அன்புள்ள சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இருக்காது. கிரியேட்டிவ் மற்றும் சமூக சேவை தொழிலில் இருப்பவர்கள் தோல்விகளையும் சோகத்தையும் சந்திக்க நேரிடும், அதே சமயம் ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்கள் விரும்பிய முடிவைப் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

இருப்பினும், கலைத் துறை, எழுத்து மற்றும் ஜோதிடத் துறைகள்  பிப்ரவரி 2022 இல் உங்களுக்கு மெதுவான முன்னேற்றத்தையும் மிதமான வருமானத்தையும் தரக்கூடும். சிலருக்கு மிகுந்த போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பிறகு அரசாங்க வேலை கிடைக்கலாம். சிலர் அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறலாம்.

உங்கள் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

பிப்ரவரி 2022 இல் மாணவர்களால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். சில மாணவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் காதல் விவகாரங்கள் காரணமாக கவனச்சிதறல்கள் ஏற்படலாம். இருப்பினும், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு முழுமையான கவனம் மிகவும் முக்கியமானது. இருப்பினும், சிம்ம ராசி மாணவர்கள் தங்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் நியாயமான முறையில் சிறப்பாக செயல்படுவார்கள். ஒரு சிலர் விரும்பிய கல்லூரி சேர்க்கை வேலை வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் சிலர் உயர் படிப்புக்கான சேர்க்கை, உதவித்தொகை மற்றும் அவர்களின் கனவு வேலைகளைப் பெறலாம்., நீங்கள் விளையாட்டு போட்டிகள் அல்லது விவாதங்களில் வெற்றி பெறலாம், மேலும் ஆசிரியர்களும் ஆதரவாக இருக்கலாம்.  

கல்வியில் மேன்மை பெற : கணபதி பூஜை 

ஆரோக்கியம் :

பிப்ரவரி 2022 இல் சிம்ம ராசிக்காரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலர் நுரையீரல் அல்லது இதயப் பிரச்சனைகளாலும், இன்னும் சிலர் காய்ச்சல் மற்றும் இரத்த அணுக்கள் குறைபாடுகளாலும்  பாதிக்கப்படலாம். தவிர, சில இரத்த சம்பந்தமான பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் அல்லது செரிமான கோளாறுகள் இப்போது உங்கள் அமைதி மற்றும் வாழ்க்கை தரத்திற்கு தீங்கு விளைவிக்கும். விபத்துகள் அல்லது சண்டைகள் காரணமாக ஒரு சிலருக்கு சிறு காயங்களும் ஏற்படலாம். கூடுதலாக, குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சீராக இல்லாமல் இருக்கலாம், மேலும் சிலர் வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

சுப நாட்கள்:- 3, 4, 6, 7, 10, 15, 20, 24, 25, 
அசுப நாட்கள் :- 2, 5, 11, 13, 14, 18, 19, 22, 23, 26, 


banner

Leave a Reply