தனுசு ராசி பொதுப்பலன்கள்
தனுசு ராசி அன்பர்களே! வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்தி கொள்ள மிகச் சரியான நேரம் இது. உங்கள் திட்டங்கள் அதிவேகத்துடன் செயல்படத் தொடங்கும். வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளையும் பெறுவீர்கள். சிலர், தங்கள் விருப்பப்படி சொத்து ஒன்றை வாங்கும் வாய்ப்பு உள்ளது. அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். இந்த மாதம், பொதுவாக, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களிடமிருந்தும், ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்
.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
தனுசு ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். இது மனநிறைவான இல்வாழ்க்கையை உங்களுக்குத் தரும். முறையான தகவல் பரிமாற்றம் காரணமாக, காலம் மகிழ்ச்சியாகக் கழியும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட, எல்லாச் செயல்களுக்கும் உரிய, சரியான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
தனுசு ராசி நிதி
பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். எனவே பணம் தொடர்பான எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பும், பலமுறை யோசிப்பது நல்லது. அன்றாடத் தேவைகளால் வீண் செலவும் ஏற்படலாம். எனினும், சேமிப்பு, உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
தனுசு ராசி வேலை
வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்தப் பணியையும் உங்களுக்குச் சாதகமாக முடித்து கொள்ள, உங்கள் தன்னம்பிக்கை உதவும். இதன் மூலம் உங்கள் தனித்திறனும் வெளிப்படும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.
தனுசு ராசி தொழில்
வியாபாரத்தில் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். எனினும், தொழில் தொடர்பாக எந்த வித முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்தே செயலாற்ற வேண்டும். முன்னேற்றங்களும் தாமதமாகவே வந்து சேரலாம்.
தனுசு ராசி தொழில் வல்லுநர்கள்
உங்கள் நடவடிக்கைகள் முன்னேற்றமானதாக அமையும். வேலையில் ஏற்படும் தாமதங்களைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். தன்னம்பிக்கையுடன் பணியாற்றினால், உங்கள் திறமைகள் வெளிப்படும். செயலாற்றலும் சிறப்பாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
தனுசு ராசி ஆரோக்கியம்
தனுசு ராசி அன்பர்களின் உடல்நிலை நன்றாகவே இருக்கும். மன அழுத்தம் இல்லாத, அமைதியான வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் சிறக்கச் செய்யும். இந்தக் கால கட்டத்தில், இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பது, நன்மை தரும்.
தனுசு ராசி மாணவர்கள்
மாணவர்கள், ஆர்வத்துடன் நன்றாகப் படிப்பார்கள். எனினும், வெளியே செல்வதில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாக, கூடுதல் நேரம் எடுத்துப் படிப்பது உங்கள் கல்வி முன்னேற்றத்திற்கு நல்லது. சிலர் சமூக நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புவீர்கள். உங்கள் நட்பு வட்டாரமும், புதிய நபர்களின் வருகையால் களை கட்டும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப தினங்கள் : 1,2,3,10,11,14,15,29
அசுப தினங்கள் : 4,5,8,9,16,17,18
தனுசு ராசி பரிகாரம்
திருச்செந்தூர் முருகப்பெருமான் மற்றும் குரு பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
குரு, சனி, ராகு, கேது போன்ற நவக்கிரக தேவதைகளுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
அனாதை, ஏழை, எளியோருக்கு தேவையான உதவி மற்றும் அன்னதானம் செய்தல்.

Leave a Reply