மீன ராசி பொதுப்பலன்கள்
இந்த மாதம், மீன ராசி அன்பர்களுக்கு முன்னேற்றமான காலம் ஆகும். நீங்கள், உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம். ஊதிய உயர்வு உங்களுக்கு திருப்தி அளிக்கும் சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். இவை லாபகரமாகவும் அமையும். விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்க ஆர்வம் அதிகரிக்கும். சிலர் ஆன்மீகப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். அங்கு குருமார்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டுதலை பெற்றுத் தரும். அவர்களது ஆசிகள், திறம்பட பணியாற்றுவதற்கான ஆற்றலையும் உங்களுக்கு அளிக்கும். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது நன்மை தரும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மீன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில காதல் உறவுகள், திருமணத்தில் முடியும். மணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பும் உள்ளது. சிலர், திருமணத்திற்கு ஏற்ற வரன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மேற்கொள்ளும் பயணங்கள், உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கும்.
மீன ராசி நிதி
பொருளாதார விவகாரங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பணத்தை நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் வகையில் நீங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். பணத்தைச் சேமிப்பதற்காக நீங்கள் இப்பொழுது செய்யும் ஒவ்வொரு முயற்சியும் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
மீன ராசி வேலை
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாக செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்குப் பெரும் நன்மைகளைத் தரும். புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்ளத் தகுந்த காலம் இது. இவை, உங்கள் பணிச் சூழலை மேம்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்கும்.
மீன ராசி தொழில்
உங்கள் தைரியமான அணுகுமுறை, தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எனினும், வியாபாரத்தில் எந்தவித முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்தே செயலாற்றுவது அவசியம். வியாபாரத்தில் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
மீன ராசி தொழில் வல்லுநர்
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவும். உங்கள் விடா முயற்சி எதிர்பார்த்த பலன்களையும், பல நன்மைகளையும் பெற்றுத் தரும்.
மீன ராசி ஆரோக்கியம்
இந்த மாதம், அதிக வேலைகள் காரணமாக உடல் நலத்திற்கு நீங்கள் உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகலாம். சத்தான உணவை உட்கொள்வது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மருத்துவரின் அறிவுரைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவது போன்றவை, நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெற உதவும்.
மீன ராசி மாணவர்கள்
மீன ராசி மாணவர்களுக்கு, இந்த மாதம் சுமாராகத்தான் இருக்கும் எனலாம். சில நேரங்களில் உங்களது அதீத நம்பிக்கை காரணமாக, பாடங்களில் நீங்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடும். இதனால் படிப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் எல்லாம் மனமுடைந்து போகாமல், தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்தால், கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் அறிவுரையை ஏற்பதும், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும்.
சுப தினங்கள்: 8,9,16,17,18,21,22,23
அசுப தினங்கள்: 10,11,14,15,24,25.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
மீன ராசி பரிகாரம்
ஸ்ரீ திருச்செந்தூர் முருகப்பெருமான் மற்றும் குரு பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
ஸ்ரீ குருபகவான், ராகு, கேதுவிற்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
பெற்றோர்களிடம் அன்புடன் இருத்தல். அவர்களிடம் ஆசி பெறுதல். கோவில்களில் அன்னதானம் செய்தல்.

Leave a Reply