கும்ப ராசி பொதுப்பலன்கள் :
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். என்ற போதிலும் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். உங்கள் கவனமின்மை காரணமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் உங்களுக்கு கிட்டாமல் போகலாம். உங்கள் நிதி நிலை இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதம் முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓங்கி இருக்கும். நீங்கள் புதிய தொழில்களில் முதலீடுகளை செய்வீர்கள். தொழில் தொடர்பான உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாகவும் சாதகமாகவும் இருக்கும். இந்த மாதம் நீங்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். தொலை தூரப் பிரதேசங்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும்.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கும்ப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
காதலர்களைப் பொறுத்தவரை இந்த மாதம் காதல் உறவு சுமாராக இருக்கும். உங்கள் காதல் தொடர்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். திருமானமானவர்கள் குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
கும்ப ராசி நிதி :
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் என்று கூறலாம். இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வருமானம் உயரும். உங்கள் சேமிப்பும் உயரும். உங்கள் பொறுப்புக்ளை நிறைவேற்றக் கூடிய அளவில் உங்கள் வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்ப ராசி வேலை :
வேலை செய்யும் கும்ப ராசி அன்பர்களே. இந்த மாதம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். சக ஊழியர்கள் தங்களின் சிறந்த ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவார்கள். மேலதிகாரிகள் உங்களிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நெங்கள் சிறப்பாக பணியாற்றி உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
கும்ப ராசி தொழில் :
இந்த மாதம் நீங்கள் தொழிலில் முதலீடுகளைச் செய்வீர்கள். உங்கள் தொழிலில் சிறந்த கவனம் செலுத்துவீர்கள். சிறப்பாக செயலாற்றி தொழிலில் முன்னேற்றம் காண பாடுபடுவீர்கள். மேலதிகாரிக்ளுடன் நீங்கள் நல்லுறவைப் பராமரிப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கும்ப ராசி தொழில் வல்லுநர் :
கும்ப ராசி தொழில் வல்லுனர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் கடினமாக உழைத்து முன்னேற்றம் பெற விரும்புவீர்கள். உங்கள் அறிவுத் திறன் இந்த மாதம் சிர்பாக செயல்படும். நீங்கள் கடினமான பணிகளையும் மிகவும் எளிதாக செய்வீர்கள்.
கும்ப ராசி ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக ஆக்கிக் கொள்ள நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வருமுன் காப்பது நல்லது என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தியானம் மற்றும் யோக செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும்.
கும்ப ராசி மாணவர்கள் :
கும்ப ராசி மாணவர்கள் இந்த மாதம் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். தேக அசௌகரியம் காரணமாக உங்கள் பதிப்பு பாதிக்கப்படலாம். நீர் சம்பந்தமான வியாதிகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப நாட்கள் : 6,7,14,15,19,20.
அசுப நாட்கள் : 8,9,12,13,21,22,23.
கும்ப ராசி பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
ஸ்ரீ சனிபகவான், ராகு, கேதுவிற்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
பறவை மற்றும் நாய்களுக்கு உணவு அளித்தல். ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் உதவி செய்தல்.

Leave a Reply