Rama Navami Ceremonies & Grand Ram Lalla Statue Installation On Ram’s Birthday Powertime JOIN NOW

சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி பாதிப்பு நீங்க! நள சரித்திரம்

December 10, 2019 | Total Views : 1,189
Zoom In Zoom Out Print

"கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய

சரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம்"
 

பொருள்:

கார்கோடகன் என்னும் பெயருடைய நாகம், மாகாராணி தமயந்தி, மகாராஜா நளன் மற்றும் ராஜரிஷியாகிய ரிதுபர்ணன், இவர்களுடைய சரித்திரத்தை படிப்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் சனியின் கடுமை குறையும்.

திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 24, 2020 அன்று சனி பகவான் தனுசு ராசியில் இருந்து தனது சொந்த வீடு மற்றும் இரண்டு ஆட்சி வீடுகளில் ஒன்றாகிய மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த மகர ராசியானது ராசிக் கட்டத்தில் தொழிலைக் குறிக்கும் பத்தாவது வீடாகும். அதே சமயத்தில் சனி பகவான் தொழிலைக் குறிக்கும் கிரகம் ஆவார். இங்கிருக்கும் சனி பகவான் தான் இருக்கும் இடம் மற்றும் தனது பார்வை மூலம் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்ம வினைப்படி சாதக மற்றும் பாதக பலன்களை அளிப்பார். சனியின் காரணமாக ஏற்படும் தீய பலன்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சனி பகவானை வணங்கி வழிபடுதல் சிறப்பான ஒன்றாகும். 

நள சரித்திரம்:

ஒரு வேடுவத் தம்பதியினர் காட்டில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்தனர். அத்தம்பதியரின் பெயர் ஆகுகன், ஆகுகி என்பதாகும். ஒரு நாள் இவர்கள் இருந்த குகைக்கு அருகில் ஒரு துறவியைக் கண்டனர்.  நேரம் இரவாகி விட்டது.  அதனால் அந்த வேடுவத் தலைவன் தன் குடிசைக்குள் துறவியை தாங்குமாறு வேண்டிக் கொண்டான். அவருக்கு அமுது படைத்து விட்டு உறங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்கள். இருவர் தங்கும் அளவிற்கு அந்த குகை இருந்த காரணத்தால் ஆகுகன் குகைக்கு வெளியில் தங்கினான்.  இரவில் காட்டு மிருகம் தாக்கி ஆகுகன் இறந்து விட்டான்  அதனைத் தாங்க முடியாத அவன் மனைவியும் உயிர் துறந்து விட்டாள். தன்னால் தானே இருவரும் உயிர் துறக்க நேர்ந்தது என்று துறவியும் தனது இன்னுயிரை நீத்து விட்டார்.

இந்த வேடுவன், நளனாக நிடத நாட்டிலும், அவன் மனைவி தமயந்தியாக விதர்ப நாட்டிலும், துறவி அன்னப்பறவையாகவும் மறுபிறவி எடுத்தனர். அன்னப்பறவை தூது செல்ல நளன் தமயந்தி காதல் அரும்பாகி மலர ஆரம்பித்தது.

இதனிடையே தேவர்கள் பலரும் தமயந்தியின் அழகில் மயங்கி அவளை விரும்பினர். அவளின்சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். உண்மையான நளனை அடையாளம் கண்டு தமயந்தி அவனுக்கு மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. "இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?" என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான்.  விதி வசத்தால் தான் மனைவி குழந்தைகளைப் பிரிந்தான்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. கார்கோடன் பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். தேரோட்டியாக இருந்த நளனை, தமயந்தி அடையாளம் கண்டடு அவனை அடைந்தாள்.

நளன் சனி பகவானிடம் வாங்கிய வரம்:

நளன் சனீஸ்வரரிடம், "சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது" என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நள சரித்திரம் தரும் நன்மைகள்:

இந்த நளன் தமயந்தி கதை படிப்பவர்கள், சொல்பவர்கள் மற்றும் கேட்பவர்கள் நேர்மையான முறையில் தங்கள் கடமைகளை சரிவர செய்தால்  சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம். மேலும் வாழ்க்கையில் தங்கள் உழைப்பின் மூலம் உயர்ந்த பதவி, செல்வம் மற்றும் வளங்களைப் பெறலாம். எனவே சனிபெயர்ச்சி நேரத்தில் இந்த கதையைப் பாராயணம் செய்து சனி பகவானை வேண்டி வழிபட்டால் வாழ்வில் இன்னல்கள் யாவும் நீங்கும்.

 

banner

Leave a Reply

Submit Comment