துர்கை என்ற சொல்லுக்கு வெல்ல முடியாதவள், தீய செயல்களை அழிப்பவள் என்று பொருள். துர்கை அம்மனை வழிபடுவதன் மூலம் திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பணத்தட்டுப்பாடு ஏற்படாது. நினைத்த காரியங்கள் நடக்கும்.
ராகு பகவானின் அதிபதியாக துர்கா தேவி விளங்குகிறாள் எனவே ராகு நேரத்தில் துர்கா தேவியை வழிபடுவது சிறப்பானது. அதிலும் துர்க்கைக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று துர்கா தேவியை ராகு நேரத்தில் வணங்கி வழிபடுவதன் மூலம் கை மேல் பலன் கிட்டும்.
எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் அவை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
முறையான வழிபாட்டின் மூலம் கிட்டும் அற்புதமான பலன்கள்;
செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3 மணிமுதல் 4.30 வரை இருக்கும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபமேற்றலாம். நூல் திரி போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிட்டும். ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்குகளாக ஏற்ற வேண்டும். நல்லெண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும். தீப ஒளி துர்கையை நோக்கி இருக்க வேண்டும். நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக ஒளிர்வதன் காரணமாக துர்கா தேவியை ஜோதிதேவி என்றும் கூறுகின்றனர்.
எலுமிச்சை தீபம் ஏற்றும் போது பழத்தைப் பிழியும் போது அதன் சாற்றை ஒரு தூய கிண்ணத்தில் பிழிந்து கொள்ள வேண்டும். அதனுடன் தேனைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் துர்கையை நோக்கி இருக்குமாறு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்னர் பூஜை அர்ச்சனை செய்யும் போது அர்ச்சகரிடம் சொல்லி அதனை நெய்வேத்யம் செய்து தருமாறு கொடுக்க வேண்டும். அந்த நெய்வேத்திய சாற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று சர்பத் செய்யும் அளவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி பிரசதாமாக அனைவரும் குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக தீரும். திருமண காரியங்கள் நடக்கும். துர்கை அம்மனின் அனுக்கிரகத்தால் அஷ்ட ஐவர்யங்கள் சேரும்.

Leave a Reply