பொதுப்பலன்:
உங்கள் ராசியிலிருந்து ஏழாம் வீட்டில் அதாவது மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நிகழும். இந்த பெயர்ச்சி மே 15, 2025 முதல் ஜூன் 2, 2026 வரை இருக்கும். அதிகாலை 2:30 மணிக்கு நிகழும். இந்த பெயர்ச்சியின் போது குருவின் பார்வை உங்கள் ராசி 11 வது வீடு, மற்றும் 3 வது வீட்டில் இருக்கும்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த காலகட்டத்தில், நீங்கள் பல தடைகளை சந்திக்க நேரலாம். பணியிடச் சூழலில் நீங்கள் சில அசௌகரியங்களை சந்திப்பீர்கள். எனவே நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும்.மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் பதவி உயர்வுக்கு உதவிகரமாக இருக்கும். மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட நோக்கங்களை நிறுவனத்தின் இலக்குகளுடன் சீரமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு உங்கள் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இருவரிடமும் ஒத்த கருத்துகள் காணப்படும். இது உங்கள் உறவின் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும். பரஸ்பரம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், உங்கள் கனவுகளைப் பற்றி விவாதிப்பதும் நிச்சயமாக உறவில் நெருக்கத்தை மேம்படுத்தும். குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்களுடன் மகிழ்ச்சியான தொடர்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகள் இன்னும் இறுக்கமாக வளரும். இது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும். நிதி நிலைமையைப் பொறுத்தவரை, உங்களின் புத்திசாலித்தனம் மூலம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள்.
மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பு. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படலாம். கல்வியில் வெற்றிபெற இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவி மற்றும் வழிகாட்டல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
உத்தியோகம்
உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் சில சிரமங்கள் மற்றும் சவால்களை சந்திக்க நேரும். இவை பணியிடத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த கட்டத்தை கடக்கும் போது நீங்கள் அதிக பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த உறவு உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. பயனுள்ள தகவல்தொடர்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காதல் / குடும்ப உறவு
உங்கள் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த உறுப்பினர்களுடன் நல்லுறவை மேற்கொள்வீர்கள். உங்கள் உறவில் நீங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் அணுகுமுறை அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். இந்த உறவுகளின் மூலம் நீங்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆதரவையும் ஆறுதலையும் காண்பீர்கள். காதலர்கள் வாழ்வில் இனிமை இருக்கும். நிறைவான உணர்வு காணப்படும். பரஸ்பரம் ஒருவரின் துணையை ஒருவர் விரும்புவீர்கள். மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த அழகான தருணங்களைப் போற்றுவீர்கள்.
திருமண வாழ்க்கை
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் ஒற்றுமை மகிழ்ச்சி மேம்படும்.
நிதிநிலை
உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். லாபகரமான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் செல்வத்தை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் சில சமயங்களில் பிற உறவினர்கள் அல்லது நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.அவர்களின் ஆலோசனை நிதி சம்பந்தமான பாதுகாப்பான முடிவுகளை எடுக்க உதவும்.
மாணவர்கள்
ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு லட்சியத்துடன் செயல்படுவார்கள். இளங்கலை மாணவர்களிடமும் இந்த அணுகுமுறை இருக்கும். பட்டதாரி மாணவர்கள் சாதனை புரிய முயற்சி மேற்கொள்வார்கள். வெளிநாடு செல்லும் மாணவர்கள் விசா பெறுவதற்கு இது உகந்த காலக்கட்டம் ஆகும். அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை முடிக்க கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். தற்காலிக தலைவலி அல்லது ஜலதோஷம் போன்ற உபாதைகள் இருக்கும். இவை தீவிரமாக இருக்காது. இருப்பினும், எரிச்சலூட்டும். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.

Leave a Reply