Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Dhanusu Rasi Palan 2020

November 10, 2020 | Total Views : 699
Zoom In Zoom Out Print

தனுசு டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:

சுக்கிர கிரகம், தனுசு ராசி அன்பர்களின் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இது அவர்களுக்கு, பொதுவாக, ஒரு நல்ல மாதமாக இருக்கக் கூடும். கிரக அமைப்புக்கள் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாகத் தென்படுவதால், கல்வி, குடும்பம், காதல் வாழ்க்கை, பண விஷயங்கள் போன்றவை உங்களுக்கு அதிர்ஷ்டகரமாக அமையக் கூடும். இப்பொழுது உங்களது முக்கிய கவனம், உங்களது தோற்றம், ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வதில் இருக்கும் எனலாம். புதன் கிரகம், சூரியனுடனும், குருவுடனும் இணைந்து இருப்பதால், உங்கள் மனம் தெளிவுடனும், ஊக்கத்துடனும் இருக்கக் கூடும். இந்த முக்கிய கிரகங்கள், உங்களை, குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரை குறித்தும், மகான்கள், முனிவர்களின் போதனைகள் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் எனலாம். இது, ஆன்மிக நாட்டம் உள்ளவர்களுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ஒரு பண்பட்ட, பூரண மனிதராக நீங்கள் விளங்க உதவக்கூடும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

     

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

பணியிடம் அல்லது நண்பர்கள் வட்டம் மூலம், சிலரது வாழ்க்கையில் காதல் மலரக் கூடும். உங்களுக்கு மிகவும் உகந்த வாழ்க்கைத் துணையைத் தேடும் முயற்சியில் நீங்களும் இறங்கக்கூடும். சுக்கிர கிரகம், பிறரைக் கவரும் வகையில், உங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்யலாம். ஆனால், உங்களுக்கு மிகவும் ஏற்ற வாழ்க்கைத் துணையைக் கண்டறிய விரும்பினால், பேச்சு, செயல் என இரண்டிலும், நீங்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்வது, உறவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என்பதை இப்பொழுது நீங்கள் உணரக்கூடும்.    

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை

நிதி:

இப்பொழுது, பணவரவு தாராளமாக இருக்கும் எனலாம். சிலர், அவர்களது பழைய வாகனங்கள், வீடு, மனை போன்ற சொத்துக்கள் போன்றவற்றை விற்பதன் மூலமும் வருமானம் ஈட்டக்கூடும். உங்களது பண விவகாரங்கள், அதாவது உங்களுக்கு உள்ள கடன்கள், நிதி தொடர்பான பொறுப்புகள், மற்றும் செலவுகள், குறித்து அறிந்து கொள்ள, உங்கள் வாழ்க்கைத் துணைவர் விரும்பக்கூடும். இதன் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது போன்ற விஷயங்களில், உங்கள் துணைவரிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது. இதன் மூலம், பின்னர் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.  

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை   

வேலை:

பணியில் உள்ளவர்கள் கடுமையாக உழைக்கக்கூடும். இருப்பினும், உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரமோ, பலனோ கிடைக்காமல் போகலாம். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவற்றுக்காக, நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று உயரதிகாரிகள் உங்களிடம் தெரிவிக்கக்கூடும். இது உங்களை விரக்தி அடையச் செய்யலாம். நீங்கள் பொறுமை இழக்கவும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட்டு, வேலையில் சில பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். எனவே, எச்சரிக்கையாக இருக்கவும்.

தொழில்:

கூட்டுத் தொழிலுக்கு இது நல்ல காலம் எனலாம். விமானப் பயணத்தின் பொழுது, உங்களில் சிலர், வருங்கால தொழில் கூட்டாளிகளை சந்திக்கக் கூடும். சில நேரங்களில், சக பயணியுடன் விமானத்தில் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரக்கூடும். எனினும், இந்த நேரத்தில் தேவைப்பட்டால் மட்டுமே பயணம் செய்யுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். 

தொழில் வல்லுநர்கள்:

தனுசு ராசி தொழில் வல்லுநர்கள், இயற்கையாகவே திறமை வாய்ந்தவர்களாகவும், அறிவாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களை, அவர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக நினைத்து, தாராளமாகப் புகழக் கூடும். இதனால், வருங்காலத்தை, நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை   

ஆரோக்கியம்:

சிலருக்கு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்; இதனால் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள நேரலாம். அதிகக் கொழுப்பு சத்து, ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் சிலர் பாதிக்கப்படலாம். தவறாமல் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யவும்; சத்தான உணவையும் உட்கொள்ளவும். மருந்து, மாத்திரைகளை விட, ஆன்மீக ரீதியிலான பரிகாரங்கள் நீடித்த பலன் தரும் என்பதை, நீங்கள் இப்பொழுது உணரக்கூடும். 
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: தன்வந்த்ரி பகவான் பூஜை     

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இது நல்ல காலம் எனலாம். இப்பொழுது அவர்களின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களின் அங்கீகாரம் கிடைக்கக்கூடும். ஆனால் அதிகப் படிப்பு அவர்களை சலிப்படையச் செய்யலாம். இதனால் வேலை அனுபவம் பெற அவர்கள் விரும்பக்கூடும். பள்ளி மாணவர்களும் சரி, கல்லூரி மாணவர்களும் சரி, இரவு பகலாக கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தரக்கூடும். தியானம் செய்வது, இந்த நிலையிலிருந்து விடுபட்டு, தங்கள் பாடங்களின் மீது அவர்கள் கவனம் செலுத்த உதவும்.    

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை  

சுப தினங்கள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 21, 30, 31
அசுப தினங்கள்: 17, 18, 19, 20, 22, 23 24, 25, 26, 27, 28, 29

banner

Leave a Reply

Submit Comment