AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Simmam Rasi Palan 2022

dateNovember 10, 2022

சிம்மம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

சிம்ம ராசி அன்பர்களே! குடும்ப ஒற்றுமையில் சில இடையூறுகள் இருக்கலாம். குறிப்பாக மூத்த உடன் பிறப்புகளுடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.  பிறருடன் பேசும் போது உங்கள் வாக்கில் கவனம் தேவை. உங்கள் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும். இந்த மாதம் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்களுக்காக தன விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

காதல் / குடும்பம்:

சிம்ம ராசி காதலர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொண்டு மகிழ்வார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் அகன்று புரிந்துணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

குடும்பத்தில் அமைதி உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

பொருளாதார ரீதியாக இந்த மாதம் நீங்கள் ஏற்றம் காண்பீர்கள். பங்கு வர்த்தகம் மற்றும் பொருள் வர்த்தகத்தில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். அதன் மூலம் தன லாபம் ஏற்படும். வீட்டில் வண்ணம் பூசுதல் மற்றும் மராமத்து பணிக்காக செலவுகளை செய்வீர்கள்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் சக ஊழியர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகம் சம்மந்தப்பட்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரலாம்.  வெளியூர் சம்மந்தப்பட்ட பணிகள் காரணமாக அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் உங்களால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அதிக நேரத்தை ஒதுக்க இயலாது. 

தொழில்:

தொழிலைப் பொறுத்த வரை சிறந்த பலன்கள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.கடின உழைப்பின் மூலம் நீங்கள் அதிக லாபம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.   நீங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர் என்றால் உங்கள் தொழில் மூலம் சிறந்த வருமானம் காண்பீர்கள். லாபத்தையும் காண்பீர்கள். நிதி மேலான்மை சம்மந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் மத்திம வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்கள் சிறிது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பேச்சு வார்த்தைகளில் கவனம் அவசியம் தேவை. தொழில் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. உங்கள் உரையாடலில் கவனம் தேவை. அரசுத் துறையில் உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். வெளிநாடுகளில் வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு  இந்த மாதம் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து போகும். அஜீரண கோளாறு மற்றும் பெருங்குடல் சம்மந்தப்பட்ட பிரச்கனைகள் வரலாம். சிறு உபாதைகள் என்றாலும் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.தந்தைக்கு உடல் நல குறைவு ஏற்படலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்களின் மனதில் அதிக தன்னம்பிக்கை இருக்கும். அது அவர்களை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வி உதவிப் பணம் கிடைக்கும். ஆராய்ச்சி கல்வியை வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற இந்த மாதம் அதிக வாய்ப்புகள் உள்ளன்.

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்:

4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 19, 20.

அசுப நாட்கள்:

1, 2, 3, 7, 9, 12, 16, 17, 22, 23.


banner

Leave a Reply