மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Mesham Rasi Palan 2020

மேஷம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பீர்கள். இந்த ஏற்றத் தாழ்வுகள் மூலம் நீங்கள் சில முக்கிய மாற்றங்களையும் சந்திப்பீர்கள். சென்ற மாதத்தை விட இந்த மாதத்தின் கிரக நிலைகளின் தாக்கத்தை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள் உங்கள் குடியிருப்பு அல்லது வசிப்பிடத்தில் இட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக உங்கள் மனதில் ஆன்மீக மேன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. பக்குவப்பட்ட அறிவை நீங்கள் பெறுவதற்கு இந்த மாதம் குரு பகவானின் பங்களிப்பு அதிகம் இருக்கும். உங்களின் ஆன்மீக நாட்டத்திற்கு சூரியனின் நிலை காரணமாக இருக்கும். உலகியல் விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ளவும் சூரியன் உற்ற துணையாக இருப்பார். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உங்கள் காதல் கை கூட காலமும் நேரமும் ஏற்றதாக உள்ளது. உங்கள் பேச்சுத் திறன் மூலம் நீங்கள் காதலில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் ஆற்றல் அதிகம் இருக்கும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியன் இந்த மாதத்தின் இடைப் பகுதியில் ராசிக்கு ஒன்பதில் சஞ்சரிப்பதால் காதலில் அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஐந்தாம் வீடு குழந்தைகளைக் குறிக்கும் என்பதால் குழந்தைகளுடனான உங்கள் உறவு இந்த மாதம் மேம்படும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
நிதி:
உங்கள் நிதி நிலையிலும் இந்த மாதம் பெரும் மாற்றம் நிகழும். உங்கள் பொருளாதார நிலையில் நீங்கள் படிப்படியாக முன்னேறுவீர்கள். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் சில முதலீடுகளை செய்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். என்றாலும் சில கிரக நிலைகள் காரணமாக நீங்கள் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி பணம் சம்பந்தமான பொறுப்புகளை அல்லது பொருளாதாரம் சம்பந்தமான முடிவெடுக்கும் பொறுப்புகளை அளிக்காதீர்கள். பண விசயங்களில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதமாக இந்த மாதம் இருக்கும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: லக்ஷ்மி தேவி பூஜை
வேலை:
இந்த மாதம் பணியில் நீங்கள் அதிக லாபகரமான பலன்களை எதிர் பார்த்து நின்றாலும் அதில் வெற்றி என்பது எட்டாக் கனியாகத் தான் இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற பலன் கிட்டுவது கடினம். உங்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லாமல் போகலாம். வேலை நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் கூட, நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களைத் தராமல் போகலாம். எனவே, காலம் கனிந்து வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது போல உங்கள் பொறுமைக்கான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். எனவே உங்கள் லட்சியத்தில் நீங்கள் கண்ணாக இருங்கள் வேலை, தொழில் போன்றவற்றைக் குறிக்கும் 10 ஆம் வீட்டில், குரு, சனி கிரகங்கள் இருப்பது, உங்களுக்கு ஓரளவு துணை புரியும். குறிக்கோள்களின் மீது நீங்கள் கவனம் செலுத்தவும் உதவும். இப்பொழுது நீங்கள் செய்யும் கடின முயற்சிகளின் நற்பலன்களை, வரும் மாதங்களிலும், வருடங்களிலும் நீங்கள் அனுபவிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.
தொழில்:
தொழில் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பும், நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில், கூட்டுத் தொழில் பயனுள்ளதாக அமைவது கடினம். வெற்றியும் தாமதமாகவே கிடைக்கக் கூடும். எனினும், விரைவிலேயே நீங்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும். உங்கள் 10 மற்றும் 11 ஆம் வீடுகளின் அதிபதியான சனி கிரகமும், 9 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதியான குரு கிரகமும், உங்களில் சிலருக்கு, வெளிநாடுகளிலிருந்து கூட்டுத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தொழில் கூட்டாளிகளுடன் எந்தவித ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு முன்பும், அவர்களைக் குறித்து, முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
தொழில் வல்லுநர்கள்:
மேஷ ராசி தொழில் வல்லுநர்கள், இயற்கையாகவே, கடினமாக உழைப்பவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் கடின முயற்சிகளுக்கு, இந்த மாதம், உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். ஆயினும், தன்னம்பிக்கையுடன் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். இது, நீங்கள் திறமையாகச் செயல்பட்டு, எதிர்பார்த்த பலன்களை, வரும்காலத்தில் அடைய உதவும். சிலருக்குப், பயணங்கள் காரணமாக, சில பின்னடைவுகள் ஏற்படலாம். துணிச்சலைக் குறிக்கும் செவ்வாய் கிரகம், நஷ்டத்தைக் குறிக்கும், உங்கள் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். எனவே, இந்த மாதம் நீங்கள் சற்றே பணிந்து நடக்கக்கூடும். உங்களுக்குள் இயற்கையாக அமைந்திருக்கும் பலம் குறித்து யோசித்து, அதை வெளிப்படுத்துவதற்கு உகந்த நேரம் இது, எனலாம்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
ஆரோக்கியம்:
இந்த நேரத்தில், பெரிய நோய், நொடிகள் எதுவும் இன்றி, உங்கள் உடல்நிலை நன்றாகவே காணப்படுகிறது. இருப்பினும் உடல்நிலையில் உரிய கவனம் செலுத்துவது அவசியம். சத்தான உணவு உட்கொள்வது, தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்வது போன்றவை, நீங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். உங்கள் ராசிநாதனான செவ்வாய், இந்த மாதக் கடைசி வாரம் வரை, 12 ஆம் வீட்டில் இருக்கிறார். இதன் காரணமாக, தலைவலி, தலைக்குடைச்சல், மன அழுத்தம், ஜுரம் போன்ற சில சாதாரணப் பிரச்சனைகளை நீங்கள் எதிகொள்ள வேண்டியிருக்கலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு, இந்தக் காலகட்டம், மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று கூறமுடியாது. சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, சுணக்கம் போன்றவை காரணமாக, சிலர், தங்கள் பாடங்களில் உரிய கவனம் செலுத்தாமல் போகலாம். இதனால் உங்கள் கல்வி முயற்சிகள் பாதிக்கப்படலாம். ஆனால், டிசம்பர் மாத மத்திய காலத்திற்குப் பிறகு, பள்ளி மாணவர்களின் நிலை மேம்படக்கூடும். அதே நேரம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு, உயர் கல்விக்குரிய கிரகமான குருவின் வழிகாட்டுதல், மாதம் முழுவதும் கிடைக்கக்கூடும். ஆனால், செயல்களைக் குறிக்கும் செவ்வாய் கிரகம், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், சில தாற்காலிகப் பின்னடைவுகள் ஏற்படலாம். மேலும், சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருப்பதாலும், படிப்பு, வருங்கால வேலை குறித்த ஆசைகள் போன்றவை குறித்தும், சில பிரச்சனைகள் எழலாம்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: ஹயக்ரீவர் பூஜை
சுப தினங்கள்: 4, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31
அசுப தினங்கள்: 1,2, 3, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30
