மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Mesham Rasi Palan 2022

மேஷம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள் 2022
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள உறவில் கவனம் தேவை. அசையாச் சொத்துகளை இந்த மாதம் வாங்குவதன் மூலம் உங்கள் எதிர்கால நலனை காத்துக் கொள்ள இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் வருமானத்தில் ஏற்றம் காணப்படும். தொழில் சார்ந்த வெளிநாட்டுப் பயணம் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் விடா முயற்சியுடன் கடினமாக உழைத்து படிப்பதன் மூலம் வெற்றி காண இயலும்.
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் காணப்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுடன் தேவையற்ற பேச்சு அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். மேலும் உங்களது பேச்சில் கவனம் தேவை. இந்த மாதம் நண்பர்களிடம் நட்பையும் நல்லுறவையும் வளர்த்துக் கொள்வீர்கள். நண்பர்களால் அனைத்து வகையிலும் ஆதாயம் உண்டு.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அசையாச் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் சொத்துக்களை விற்று அதிக பண லாபங்களைக் காண்பார்கள். யூக வணிகங்களான பிட் காயின் மற்றும் போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். வெளியூர்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று வருவதால் இந்த மாதம் செலவுகள் அதிகரித்துக் காணப்படும்.
நிதி நிலையில் ஏற்றம் காண ராகு பூஜை
வேலை:
பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர்பதவி போன்ற ஆதாயங்களைப் பெறுவீர்கள். தனியார் துறையைப் பொறுத்தவரை தகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிபவர்களுக்கு இந்த மாதம் தன நிலையில் ஏற்றத்தை கொடுக்கும் சிறந்த மாதமாக இருக்கும்.
தொழில்:
இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வெளிநாட்டில் தொழில் செய்யும் வாய்ப்பு கிட்டும். தரகுத் தொழில் சார்ந்த முதலீடுகள் தன நிலையில் ஏற்றத்தை கொடுக்கும். தனியார் விமான சேவையில் ஈடுபடும் தொழில் அதிபர்கள் புதிய விமானங்களை வாங்குவதன் மூலம் அதிக லாபங்களை ஈட்டும் வாய்ப்பு உள்ளது.
தொழில் வல்லுனர்கள்:
மின்னணுத் துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாடு சென்று உத்தியோகம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். மின் துறையில் உத்தியோகத்தில் உள்ள பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். அறிவியல் துறை பேராசிரியர்களுக்கு வெளியூர் சென்று வேலை செய்யும் அமைப்பு உள்ளது.
உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள்மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் இருக்கும். ஒற்றைத்தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். ஆழ்நிலை தியானம் மற்றும் துரிதமான நடைபயிற்சி மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய் வராமல் தடுக்கும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
விடா முயற்சி விச்வரூப வெற்றி என்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் விடா முயற்சியுடன் கடுமையாக உழைத்து படிப்பதன் மூலம் முதல் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் கிட்டும்.மாதமாக இருக்கும். பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் படிக்கும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் கல்வி பயின்று தேர்வில் அபார வெற்றி காண்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
10, 11, 13, 14, 15, 18, 19, 20.
அசுப நாட்கள்:
7, 9, 12, 16, 17, 21, 22, 23,
