AstroVed Menu
AstroVed
search
search

மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Meenam Rasi Palan 2022

dateNovember 9, 2022

மீனம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் திருமணமான தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்யோன்யம் கூடும் குடும்ப உறவுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்கள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி நிலையை பொறுத்த விஷயங்களில் உங்கள் வீட்டில்  உள்ள மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நன்மை பயக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைப்பதுடன் லாபமும் அதிகரித்து காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.

காதல் / குடும்பம்:

காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். இருவருக்கும் இடையே காதல் அதிகரித்து அன்னியோன்யம் கூடும். இந்த மாதம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தங்கள்  மனதிற்கு பிடித்த வரன் அமையும்.  கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையும் அந்நியோன்யமும் இருக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும். இந்த மாதம் பங்கு மற்றும் கிரிப்டோ கரன்சி வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் ஏற்றதாக உள்ளது. புதிய வண்டி வாங்குவது அல்லது பழைய வண்டியை பழுது பார்ப்பது போன்ற வகைகளில் செலவுகள் ஏற்படலாம். விருந்து மற்றும் திருமண வைபவங்களுக்காக பயணம் செய்யும் வகையில்  நீங்கள் செலவுகளை சந்திக்க நேரும்.;

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்த வரை சாதாரண பலன்களே கிட்டும். ஒரு சிலர் வேலை மாற்றம் விரும்புவீர்கள். என்றாலும் அது குறித்த முடிவுகளை எடுக்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒரு சிலர் தங்கள் அவசர முடிவால்  வேலையை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே கவனம் அவசியம்.  நீங்கள் விற்பனை பிரதிநிதியாகவோ சந்தைபடுத்தும் துறையில் வேலை செய்பவராக இருந்தால் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த மாத இலக்கை எளிதாக அடைவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் மூலம் லாபம் கிட்டும். குறிப்பாக ஆபரணம் சம்மந்தப்பட்ட கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படுவதுடன் வருமானமும் அதிகரிக்கும். பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் பெரிய அளவிலான லாபம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலருக்கு  வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் நாடி வரும், அதன் மூலம் ஆதாயமும் வெற்றியும் கிட்டும்.  

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் தனியார் துறை சார்ந்த தொழில் வல்லுநர் எனில் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் புரியும் தொழில் வல்லுனர்களுக்கு  இந்த மாதம் சிறந்த லாபங்களை அளிக்கும் மாதமாக அமைகிறது.

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் உண்டாக சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் அல்லது சிறுநீரக குழாயில் நோய் கிருமி தொற்று போன்ற சிறுநீரகம் சார்ந்த உடல் நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான அளவு நீர் உட்கொண்டு இந்த பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். வயது மூத்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரித்து காணப்படும். கலை மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் விடா முயற்சியினால் படிப்பில் வெற்றிக்கொடி கட்டமுடியும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்:

2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 18, 25, 27, 28, 29.

அசுப நாட்கள்:

1, 7, 9, 12, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 26, 30, 31.


banner

Leave a Reply