கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Kanni Rasi Palan 2022

கன்னி டிசம்பர் மாத பொதுப்பலன்கள் 2022
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் ஏதும் இன்றி ஒற்றுமை நிலவும். அதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்திய வாழ்வு சிறக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றமுடன் இருக்கும். கையில் பணபுழக்கம் தாரளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். புதிய நண்பர்களின் மூலம் ஆதாயங்கள் கிட்டும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இது ஏற்ற மாதம் அல்ல. காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் உண்டாகலாம். கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் இணக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் மேம்பட்ட சுமுகமான உறவு நிலை காணப்படும். இந்த மாதம் நீங்கள் உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டியதிருக்கும். அவரின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் கையில் பணப்புழக்கமும் அதிகரிக்கும். அதே சமயத்தில் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பங்கு மற்றும் பொருள் வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு வண்ணம் அடித்தல் மற்றும் நீர் கசிவுகளை சரி செய்தல் போன்ற வகைகளில் செலவுகள் ஏற்படும்.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் பணியிடத்தில் உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். புதிய பொறுப்புகளை நீங்கள் ஏற்க வேண்டிவரும். கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். என்றாலும் நீங்கள் கால நேரம் பார்க்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் தனியார் துறையில் பணியில் இருப்பவர் என்றால் உங்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருப்பார்கள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பீர்கள்.
தொழில்:
சொந்தத் தொழில் புரியும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம். அதன் மூலம் வியாபாரத்தில் தன லாபம் அதிகரிக்கலாம். உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். இந்த மாதம் கூட்டுத் தொழிலும் உங்களுக்கு கை கொடுக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தரகுத் தொழிலில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் உயர் நிலையை அடைவார்கள். காப்பீடு சம்மந்தப்பட்ட தொழிலில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். இறக்குமதி தொழிலில் நீங்கள் எதிர்பார்த்தை விட அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியும்.
தொழில் வல்லுனர்கள்:
கன்னி ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதம் என்று கூறலாம் குறிப்பாக மருத்துவத் தொழில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்து காணப்படும். உத்தியோகத்தில் இருக்கும் தொழில் வல்லுனர்களுக்கு பதவி உயர்வு மற்றும் தன நிலையில் ஏற்றம் ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் உங்களால் செயல்பட இயலும். இந்த மாதம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றாலும். படிப்பில் தடுமாற்றம், கவனக்குறைவு போன்ற தடைகளை தாண்ட வேண்டிய தருணங்களை எதிர்கொள்ள நேரும். என்றாலும் மாணவர்கள் சமாளித்து முன்னேறுவார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். கனிணி அறிவியலில் பட்டய கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முதன்மை பெறுவார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை
சுப நாட்கள்:
8, 10, 11, 13, 14, 15, 18, 19, 20, 21.
அசுப நாட்கள்:
5, 6, 7, 9, 12, 16, 17, 22.
