கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Kadagam Rasi Palan 2022

கடகம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள் 2022
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகள் சீராக இருக்கும். அனைவரிடமும் நீங்கள் சுமுகமான உறவை மேற்கொள்வீர்கள். திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் எழும். நீங்கள் குடும்பத்துடன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கனிணி அறிவியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு ஏற்ற மாதமாக இந்த மாதம் இருக்கும். கணவன் மனைவி கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் உறவு நிலையில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் இருக்கும் மூத்த உறுப்பினர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஏற்றத்துடன் இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். கடந்த கால பரஸ்பர நிதி சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலமாக அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். தங்களின் வீட்டில் வண்ணம் அடித்தல் அல்லது வீடு மராமத்து போன்ற வகையில் வீடு சம்மந்தப்பட்ட செலவுகள் அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகம் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன் தரும் மாதமாக இருக்கும். பணியிடச் சூழல் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். அதனை நீங்கள் சரிவர நிறைவேற்றுவீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். தனியார் துறைகளில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
தொழில்:
சொந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். அதன் மூலம் லாபங்கள் பெருகும். இந்த மாதம் ஒரு சிலர் தங்கள் தொழிலை விரிவு படுத்த புதிய தொழில் தொடங்கலாம். அதன் மூலம் லாபம் கிட்டும். கூட்டுத் தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே கூட்டுத் தொழில் எண்ணங்களை சிறிது காலத்திற்கு ஒத்தி வையுங்கள்.
தொழில் வல்லுனர்கள்:
கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் மாற்றம் குறித்த எண்ணங்கள் இந்த மாதம் ஈடேறாது என்பதால் அந்த எண்ணத்தை கைவிடுவது நல்லது. சூழ்நிலையை சமாளித்து தற்பொழுது வேலை பார்த்து கொண்டு இருக்கும் இடத்தில் இருப்பது நல்லது. வேலையை விடுவது மற்றும் உத்தியோகம் மாறுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள். தனியார் உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களின் திறமை பணியிடத்தில் உள்ள அதிகாரிகளால் பாராட்டப்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சனி பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பதை கருத்தில் கொண்டு இந்த மாதம் கடக ராசி அன்பர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். வயிற்று உப்பசம் மற்றும் குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வரலாம். ஆரோக்கிய உணவு மூலமாக ஜீரணம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் காத்துக் கொள்ள முடியும். உங்களது தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் இந்த மாதம் சாதகமான பலன்களைக் காண்பார்கள். பள்ளியில் பயிலும் மாணவர்கள் நன்றாக படிப்பதோடு பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வார்கள். அதன் மூலம் முன்னேறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி தேர்வில் வெற்றி பெறுவார்கள். கனிணி அறிவியலில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13.
அசுப நாட்கள்:
1, 26, 27, 28, 29, 30.
