சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Simmam Rasi Palan 2020

சிம்மம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கக் காண்பார்கள். தோற்றம் கூட மாற்றம் காணும் என்று கூறலாம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும் மாதம் என்று கூறலாம். முதலீடு செய்வது, கடன் வாங்குவது, கடன் அடைப்பது போன்ற உங்களின் சிந்தனைகள் நேர்மறை பலன்களை அளிக்கும். சேமிப்பின் முக்கியத்துவத்தை இந்த மாதம் நீங்கள் அதிகமாக உணர்வீர்கள். சேமிப்பது மட்டுமல்ல சேமித்த பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி எவ்வளவு தேவை என்பதை இந்த மாதம் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
இளம் வயது சிம்ம ராசியினர்களின் மனதில் காதல் அரும்பு மொட்டுவிட்டு மலரக் கூடும். உங்கள் காதலில் காமத்திற்கு இடம் இருக்காது. உங்கள் காதல் சுயநலமின்றி, தெய்வீக உணர்வுடன் கூடிய காதலாக இருக்கும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் மனம் கோணாத வகையில் நடந்து கொள்வதன் மூலம் நல்லிணக்க உறவை பராமரிக்க இயலும். கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு அதிகரிக்கும். முக்கியமாக கடுமையான சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
நிதி:
இந்த மாதம் உங்கள் குடும்ப செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்காக நீங்கள் மனமுவந்து செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் இளைய உடன் பிறப்பு உங்களிடம் பொருளாதார உதவியை எதிர் பார்க்கலாம். நீங்கள் அவர்களுக்கு உதவுவதும், அவர்கள் நிதிநிலையை சீர்செய்யும் நோக்கில் அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கொடுப்பதும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: லக்ஷ்மி பூஜை
வேலை:
பணி செய்யும் சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மனதில் நம்பிக்கை ஊற்றெடுக்கும் காலமாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரமும் பெறுவீர்கள். இதனால் உங்கள் மனதில் தன்னம்பிக்கை பெருகும். பணி நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலமும் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் பணியில் சிறந்து விளங்கினாலும். “நான் எனும் உணர்வும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற உணர்வும் உங்கள் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் உங்களுக்கு அடக்கம் மிகவும் அவசியம் தேவை. இந்த மாதம் சுக்கிரன் அமைந்துள்ள நிலை, உங்களில் சிலருக்கு வீட்டில் இருந்தே பணியைத் தொடரும் வாய்ப்புகளை வழங்கக் கூடும்.
தொழில்:
இந்த மாதம் கூட்டுத் தொழில் மேற்கொள்ளும் எண்ணம் இருந்தால் அதனைக் கை விட்டு விடுங்கள். அதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. தொலை தூரம் அல்லது வெளி நாட்டு தொழில் எதையும் இந்த மாதம் மேற்கொள்வது உசிதமல்ல. உங்கள் சொந்த ஊரில் அல்லது சொந்த நகரத்திலேயே தொழிலை மேற்கொள்ளுங்கள். தொழில் சம்பந்தமான பயணங்களையும் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள்.
தொழில் வல்லுநர்கள்:
தொழிலில் உங்கள் ஆதிக்கம் ஓங்கி இருக்கும். நீங்கள் கம்பீரமாக வலம் வருவீர்கள். கடினமாக உழைப்பீர்கள். என்றாலும் இந்த மாதம் உங்களின் இந்த இயல்புகள் மூலம் நீங்கள் சாதகமான பலன்களை பெற இயலாது. தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களே உங்களை போட்டியாளராகக் கருதலாம். தொழில் நிமித்தமான பயணங்கள் மூலமாகவும் நீங்கள் எதிர்பார்க்கும் சாதகமான பலன்களை அடைய இயலாது. வெளிநாடு சென்று தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் உங்கள் எண்ணங்களை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் அல்லது காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கூரான அல்லது அபாயகரமான பொருட்களை பயன்படுத்துவது, முரட்டுத் தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம். சத்தான உணவை உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது போன்றவை, உங்களை ஆரோக்கியமாகவும், சுறுருசுறுப்பாகவும் வைக்க உதவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை
மாணவர்கள்:
சிம்ம ராசி மாணவர்கள் இந்த மாதம் சில சவால்களை சந்திக்க நேரும். உங்கள் ஆசைகளும் கனவுகளும் நிறைவேற நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கல்வியில் உங்கள் ஆர்வம் குறையும். நீங்கள் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்பதை விட கிடைத்தன் மீது உங்கள் ஆசையையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை அப்போதைக்கு அப்போதே முடிக்க முயலுங்கள்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
சுப தினங்கள்: 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 24, 25, 31
அசுப தினங்கள்: 4, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30
