நாம் வாழும் வீட்டை ஆலயமாகக் கருத வேண்டும். அதனை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். நாம் எவ்வளவு தான் தூய்மையாக வைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் நாம் எதிர்மறை ஆற்றலை உணர்வோம். இதற்கு சில தீய ச்கதிக்ளே காரணம். நாம் வெளியில் சென்று வீடு வரும் போது சில தீய சக்திகளும் நம்முடன் வந்து விடும். எனவே தான் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் முதலில் கை கால்களை கழுவிக் கொண்டு வீட்டில் நுழைய வேண்டும். வெளியே செல்வதற்கு உடுத்திய ஆடைகளை நனைத்து விட்டு வீட்டில் வேறு ஆடை உடுத்த வேண்டும் என்று நமது வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். இன்றைய அவசர காலக்கட்டத்தில் நாம் இவற்றை எல்லாம் பின்பற்றுவதே இல்லை என்று தான் கூற வேண்டும். இதனால் தான் நாம் சில சமயங்களில் நேர்மறை ஆற்றல் இன்றி வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பது போல உணர்வோம். இந்த எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றல் பெற ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருள் பஞ்சகவ்யம். இதனை நாம் ஆலயங்களில் இருந்து பெறலாம். அல்லது நாமாகவும் தயாரித்துக் கொள்ளலாம்.
பஞ்சகவ்யம் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்து சமய நம்பிக்கைப்படி பசு என்பது முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழுகின்ற உயிராகும். அதனால் பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களை தெய்வீகமாக கருதுகின்றார்கள். பசுவிலிருந்து கிடைக்கும் பால், சாணம், கோமியம் இவற்றோடு பாலிருந்து கிடைக்கும் தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. இதனை அபிசேகப் பொருள்களில் ஒன்றாக தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்கின்றார்கள். அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றார்கள். இதனை பக்தர்கள் உட்கொள்கிறார்கள்.
சுவாமி சிலைக்கு பஞ்சகவியத்தால் அபிசேகம் செய்யப்படும் போது வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மனநோயைப் போக்கும் என இந்துக்கள் நம்புகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்தது பஞ்சகவ்யம்.
இந்த பஞ்ச கவ்யத்தை வாங்கி வந்து வாரம் ஒரு முறை வீட்டில் தெளித்து விட வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கும். தீய சக்திகளும் தோஷங்களும் நீங்கும். லட்சுமி கடாட்சம் பெருகும். அதற்கு முதலில் வீட்டை நன்றாக பெருக்கி துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு பஞ்சகவ்யத்தை கரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனை ஆலயத்தில் அளிக்கும் தீர்த்தம் போல உட்கொள்ளவும் செய்யலாம். அதன் மூலம் சகல தோஷங்களும் நீங்கும். வாரம் ஒரு முறை முடியாவிட்டால் கூட பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது இதனை செய்வதன் மூலம் படிப்படியாக நன்மைகள் நடப்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.

Leave a Reply