AstroVed Menu
AstroVed
search
search

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி 2025 கிரிவலம் தேதி மற்றும் ஆன்மிகத்தின் முக்கியத்துவம்

dateMay 9, 2025

ஐந்தொழில் புரியும் சிவபெருமானுக்கு உரிய பஞ்ச பூதஸ்தலங்கள்  பற்றி நாம் அறிவோம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. ஈசன் அடி முடி காணாத நெருப்பாக நின்று, மலையாகக் குளிர்ந்த தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம்; தனது துணைவியான உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராகத் திகழும் தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருவண்ணாமலை.         திருவண்ணாமலையில் அண்ணாமலையாரையும்  உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை வலம் வந்து வணங்குவது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.

சித்ரா பௌர்ணமி

ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. நமது கர்மவினைகளைப் பதிவு செய்யும் பிரபஞ்சக் கணக்காளரான சித்ரகுப்தர், பிரம்மாவால் படைக்கப்பட்ட நாளாக சித்ர பௌர்ணமி நம்பப்படுகிறது. கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு நீதியின் பாதையில் நடக்க வேண்டிய நேரம் இது. நமது பாவங்கள் நீங்க  சித்திர குப்தரை வழிபடுவதுடன் அன்றைய தினம் சிவபெருமானையும் வணங்குவது சிறப்பு.

சித்ரா பௌர்ணமி  கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. அதிலும் பௌர்ணமி கிரிவலம் செய்வது பாவங்களை நீக்கி, முக்தி அளிக்கும் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில்  சித்ரா பௌர்ணமியின் போது,  ஒளிரும் அண்ணாமலையார் கோயில் மற்றும் அருணாச்சல மலை பின்னணியில், முழு நிலவில் கிரிவலம் செய்யும் பக்தர்கள், பாவங்கள் நீங்கப் பெற்று தூய்மை அடைகிறார்கள். துன்பங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி 2025: தேதி, முக்கியத்துவம்

சித்ரா பௌர்ணமி, மே 12, 2025 திங்கட்கிழமை அன்று அனுசரிக்கப்படும், மேலும் இது திருவண்ணாமலையில், குறிப்பாக அருணாசல பக்தர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கிரிவலம் வருவதன் மூலம் நமது பிராரத்தனைகள் யாவும் நிறைவேறும்.

பௌர்ணமி திதி ஆரம்பம் :  மே 11, 2025 இரவு 8:01

பௌர்ணமி திதி முடிவு : மே 12, 2025 இரவு 10:25

திருவண்ணாமலையில் ஆன்மீக முக்கியத்துவம்

திருவண்ணாமலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித அருணாச்சல மலையைச் சுற்றி கிரிவலம் செய்ய ஒன்றுகூடி, சந்திரனின் சக்தியையும், இந்தப் புனித பூமியின் ஆன்மீக அதிர்வுகளையும் உள்வாங்கிக் கொள்வதால், இந்த நாள் கூடுதல் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.

பிரமாண்டமான கிரிவல அனுபவம்

அண்ணாமலையார் கோயிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ கிரிவலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாதையில் சன்னதிகள், லிங்கங்கள் மற்றும் தியான மண்டபங்கள்  உள்ளன.

பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து, பிரார்த்தனைகளை சமர்பித்து, கர்ம பந்தங்களிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.

 

திருவண்ணாமலை வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிவன் மற்றும் சித்ரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள்.

நகரம் முழுவதும் அன்னதானம் (இலவச உணவு) மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள்.

பல பக்தர்கள் விரதம் இருந்து, பிரசாதம் வழங்கி,  நன்கொடை அளித்து தான தர்மங்களை மேற்கொள்வார்கள்.

 


banner

Leave a Reply