AstroVed Menu
AstroVed
search
search

சித்ரா பௌர்ணமி 2025 சித்திரை மாதப் பௌர்ணமியின் சிறப்புகள், தேதி, நேரம்

dateMay 9, 2025

பௌர்ணமி என்பது முழு நிலவு நாள் ஆகும். அன்றைய தினம் நிலவின் ஒளி பூமியின் மீது அபரிமிதமாக காணப்படும். அன்றைய தின இறை வழிபாடு பல நல்ல பலன்களை பெற்றுத் தரும். பௌர்ணமி அன்று செய்யப்படும் அம்மன் வழிபாடு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்தால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சித்திரை மாதப் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி என அழைக்கப்படுகிறது. இது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி ஆகும், மேலும் இது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து, சித்ரகுப்தரை வழிபட்டு நற்கர்மங்கள் பெருகவும், பாவங்கள் நீங்கவும் வேண்டிக் கொள்ளப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட நினைத்தது நிறைவேறும். சித்ரா பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து, மன அமைதி மற்றும் நல்ல பலன்களைப் பெறலாம். சிவபெருமான் சந்திரனை தலையில் சூடி சந்திரசூடேசவரர் என அழைக்கப் பெறுகிறார். எனவே  சித்ரா பௌர்ணமியில் சிவனை வழிபடுவது சிறப்பானது. மேலும் இந்த வருடம் சித்ரா பௌர்ணமி திங்கட்கிழமை அன்று வருகிறது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சித்திரை மாதம் 2025: சித்ரா பௌர்ணமி தேதி மற்றும் நேரம்

மே மாதம் வரும் சித்திரை மாதப் பௌர்ணமி, மே 12, 2025 அன்று வருகிறது.

சித்திரை மாதம் 2025 பௌர்ணமி திதி நேரம்: மே 11, 2025 ஞாயிறு இரவு 08.45  முதல் மே, 12, 2025 திங்கள் இரவு, 10.48  வரை இருக்கிறது.

உதய நாழிகை என்று கூறப்படும், சூரியன் உதயமாகும் போது இருக்கும் திதியின் அடிப்படையில், 2025 சித்ரா பௌர்ணமி மே 12ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று வருகிறது. திங்கட்கிழமை அன்று வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது.

 


banner

Leave a Reply