Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

பகவத் கீதை கற்றுத் தரும் நேர்மறை சிந்தனை

March 6, 2023 | Total Views : 1,261
Zoom In Zoom Out Print

பகவான் கிருஷ்ணனுக்கும், அர்ஜூனனுக்கும் இடையே நடந்த உரையாடலே கீதையாகும். இதனை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றும் கூறலாம். கிர்ஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் எல்லா காலத்திற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.  காலத்தை வென்ற மறை  நூல் பகவத் கீதை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வேதத்திற்கு நிகரான  நூல். இந்த பிரபஞ்சத்தின் அத்துனை ஞானமும் அதில் அடங்கியள்ளது என்று கூறினால் மிகை ஆகாது. ஒருவரின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த உபதேசம் அமைந்துள்ளது. நமது அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்க்கையின் உண்மைகள் ஆகியவற்றை இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் பிரச்சினை மற்றும் அந்த நேரத்தில் அவன் மனதில் தோன்றும் சந்தேகத்திற்கு  பதிலை இந்தக் கீதையில் இருந்து நாம் பெறலாம்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதி

என்பதை சாரமாகக் கொண்ட பகவத் கீதை நமக்கு நேர்மறை சிந்தனையை உணர்த்துகிறது. பகவத் கீதை உணர்த்தும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றிக் கற்றுக்கொள்வது நேர்மறையான சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்லாமல், ஆன்மீகப் பாதையிலும் வெற்றியைக் கொண்டுவருகிறது மற்றும் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குகிறது.

நான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் நம்மை வாழ்க்கையில் போராட்டத்திற்கு உள்ளாக்குகிறது. அமைதியைத் தேடி மனம் அலைகிறது. பொருள் நிறைந்த கீதையின் பாடல்கள் அமைதியை நமக்கு அளிக்கிறது. அவற்றுள் ஒரு சில துளிகளை எடுத்து அதனை நம்வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்ப்போம். பரபரப்பான நமது வாழ்வில் அமைதி கிடைப்பதற்கான வழி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் கீதையின் சிந்தனை வரிகளைப் பற்றிக் காண்போம்

கீதை உணர்த்தும் நேர்மறை சிந்தனை வரிகள்

ஆசையே  துன்பத்திற்குக் காரணம்

ஆசையே துன்பத்திற்குக் காரணம். அதனால் எதற்கும் ஆசைப்படாமல் ஒரு துறவி போல வாழ வேண்டுமா?  இல்லை என்று கீதை உணர்த்துகிறது. ஆசையை ஒரு வரையறுக்குள் வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். நமது ஆசைகளை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். நாம் ஆசைப்படுவது அவசியம் தேவையா? அது இல்லாமலும் இருக்க முடியுமா அதனால் ஏறபடும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டால் ஏமாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது.

நமது வாழ்க்கைப் பயணம் ஏதாவது ஒரு லட்சியத்தை நோக்கித் தான் செல்கிறது.  ஆனால் கால ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் நாம் நமது லட்சியத்தை மறந்து விட்டு பாதை மாறி பயணிக்கிறோம். அதற்காக லட்சியம் இன்றி வாழ வேண்டுமா என்றால் இல்லை. இவற்றைத் தடுக்க திடமான மனம் வேண்டும். இறை பக்தி இருந்தால் உறுதியான மனம் கிட்டும்.  என்னை நம்பு நான் இருக்கிறேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது கீதையின் பாதையில் செல்ல கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்.  சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம்.  ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம். ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

கடமையைச் செய். பலனை எதிர்பாராதே

கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. ஏனெனில் எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களையே தரும். கடமையை செய்து பலனை எதிர்ப்பராமல் இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும்.

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள்

இந்த உலகில் துன்பங்கள் இல்லாமல் எவரும் இல்லை அதற்கு இரண்டு மருந்துகள் ஒன்று காலம். இன்னொன்று மௌனம். துன்பம் வரும் போது விதியின் பலன் என்று அதனை ஏற்று மவுனமாக இருந்தால்  துன்பம் பறந்தோடி விடும்.  காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. எதையும் மாற்ற வல்லது காலத்தின் ஓட்டத்தில் துன்பங்கள் கரைந்து ஓடி விடும்.

வெற்றியும் தோல்வியும் சமம்

வெற்றி வரும் போது துள்ளிக் குதிப்பதும். தோல்வியைக் கண்டு துவள்வதும் மனித இயல்பு.  ஆனால் இந்த இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதே கீதையின் மொழி. எவனொருவன் வெற்றியும் தோல்வியையும் சமமாக பாவிக்கிறானே அவனை கர்ம வினைகள் அண்டுவதில்லை.

கடமை செய்யும் போது பயம் கொள்ளுதல் கூடாது

குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுன் தன் குருவிற்கும். சகோதரர்களுக்கும்  எதிராக ஆயுதங்களை பிரயோகிக்க  பயம் கொண்டான்! கிருஷ்ணர்  அர்ஜுனிடம் தனது பயத்தை கைவிடும்படி சொல்கிறார்.  கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு மனிதனின் தலையாய பணியாகும். மேலும்  தீமைக்கு எதிராக போராட வேண்டியது கடமை ஆகும். உனது  கடமைகளைச் செய்யும்போது நீ  ஏன்  பயப்பட வேண்டும். சரியான விஷயங்களைச் செய்யும்போது, ​​​​அச்சம் ஏன் மனதில் வர வேண்டும்? என்று கிருஷ்ணன் எப்போது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கீதையின் வாயிலாக உணர்த்துகிறார்.

சரணாகதி தத்துவம்

கடந்த காலத்தை ஒருபோதும் பார்க்க வேண்டாம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! நிகழ் காலத்தை பற்றி  ஒரு போதும் கவலை வேண்டாம்  எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எதிர்காலத்தைப் பார்க்க வேண்டாம். எது நடக்குமோ அது நல்லதே நடக்கும். அனைத்தும் அவன் செயல். நீங்கள் சிந்திப்பதை விட்டுவிட்டு கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விரும்புகிறார். வெற்றி பெற இதுவே எளிதான வழி. நீங்கள் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்; நீங்கள் விதியை மாற்ற முடியாது. இது அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்ற முடியாது. நிகழ்காலத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது! எனவே அவர் மீது நம்பிக்கை வைத்து அமைதியாக இருங்கள்! அப்போது, ​​வெற்றி உங்கள் வீட்டு வாசலைத் தட்டும்!

விருப்பு வெறுப்பு அற்ற சமநிலை வேண்டும்.

எந்தவொரு நபர் அல்லது பொருளின் மீதும் நமக்கு விருப்பு  வெறுப்பு  அற்ற நிலை வேண்டும். இந்த சமநிலை நமக்கு இருந்தால் நமது உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். உணர்ச்சிகளின் சமநிலை இன்ப வாழ்விற்கு வழி வகுக்கும்.

மனதை ஒருமுகப்படுத்துதல் வேண்டும்.

மனித மனம் எளிதில் தீங்கிழைக்கும் எண்ணங்களில் ஒட்டிக்கொள்கிறது மற்றும் திரும்பத் திரும்ப அலைகிறது. காற்றை விட வேகமாக அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துவது எப்படி? தியானம் ஒன்றே வழி! மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். லௌகீக நாட்டங்களில் இலக்குகளை உருவாக்குவதை நிறுத்து  வேண்டும்.  உங்கள் சுயமரியாதையை மேம்படுத்தவும், உங்கள் தூண்டுதல்களை சீரமைத்து வாழ்க்கையில் உங்கள் இலக்குகளை மறுவடிவமைக்க வேண்டும்.

யோகியைப் போல வாழ வேண்டும்.

அப்படியானால் எதையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழும். அப்படியல்ல. ஒரு யோகி எப்படி எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறாரோ எப்படி எல்லாவாற்றிலும் கடவுளைக் காண்கிறாரோ அப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடமையைச் செய் பலனைக் கருதாதே

நீங்கள் செய்யும்  செயல்களின் பலனை எதிர்பார்க்காதீர்கள் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. காரணம் . பலனைப் பற்றிக்  கவலைப்படுபவர்கள் ஆசையால் தூண்டப்படுகிறார்கள். எனவே எந்தவொரு செயலிலும் நம்மால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு அதற்குரிய பலனை கடவுளிடம் சமர்பித்து விட வேண்டும்.

நீ எதை நம்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்

கடவுள் ஒரு மனிதனை தனது நம்பிக்கையால் உருவாக்குகிறார். அவன் எதை நம்புகிறானோ அதுவாக மாறுகிறான்! நீங்கள் ஒரு சாதனையாளர் என்று நம்புங்கள்! கடவுள் உங்களை சாதனையாளராக ஆக்குகிறார்.

எண்ணங்கள், சொல் செயல் ஒன்றாக இருக்க வேண்டும்.

உங்கள் எண்ணங்களைப் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பாருங்கள்; எண்ணங்கள் வார்த்தைகளாக மாறும்

உங்கள் வார்த்தைகளில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள், நீங்கள் பேசுவதைக் கவனியுங்கள்; வார்த்தைகள் செயல்களாக மாறும்

உங்கள் செயல்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்; செயல்கள் பழக்கமாக மாறும்

உங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றி எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள், நீங்கள் என்ன பயிற்சி செய்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்; பழக்கவழக்கங்கள் பாத்திரமாகின்றன

எண்ணங்களே உங்கள் இருப்புக்கு அடிப்படை. அவர்கள் கடவுளுக்கான பாதையை உருவாக்குகிறார்கள். உங்கள் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால், நீங்கள் நிம்மதியாக சர்வ வல்லமையை அடைவீர்கள்.

எதற்கும் ஒரு காரணம் உண்டு.எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.

நடப்பது யாவும் நன்மைக்கே. எல்லாம் அவன் செயல். நம்மால் முடிந்த அளவு கீதையின் பாதையில் பயணம் செய்வோம். வளமான வாழ்வை வாழ்வோம்.

banner

Leave a Reply

Submit Comment