AstroVed Menu
AstroVed
search
search

August Monthly Leo Rasi Palangal 2019 Tamil

dateJuly 29, 2019

சிம்மம் ராசி -​​ பொதுப்பலன்கள்

கடக ராசி அன்பர்களுக்கு, பெருமளவு நல்ல பலன்களையே அளிக்கக்கூடிய மாதம் இது. அலுவலகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும் புதிய பணிகளை வெற்றிகரமாக முடித்து, நல்ல பெயர் பெறுவீர்கள். இதனால் முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்றத் தகுந்த நபராக மதிக்கப்படுவீர்கள். இதன் காரணமாக பணியிடத்தில் உங்கள் நிலையும் உயரும். பலவிதங்களிலும், பலவேறு இடங்களிலிருந்தும் லாபமும் வந்து சேரும். சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

    

சிம்மம் ராசி -​​ காதல் / திருமணம்

காதலர்கள் தங்கள் அன்புத் துணையுடன், மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வர். கணவன் மனைவி இடையேயும், நல்லுறவு நிலவும்.  குடும்பத்திலும் இணக்கமான உறவைப் பராமரிக்க இயலும். குடும்பத்தில் ஏதாவது சிறு பிரச்சினைகள் எழுந்தாலும், தன்னம்பிக்கையுடன் அவற்றைத் தீர்த்து வைப்பீர்கள். தகுந்த திருமணத் துணை அமையவும் வாய்ப்புள்ளது. 


திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

 


சிம்மம் ராசி -​​ நிதி  

பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். உங்கள் சொந்தத் தேவைகளுக்காக பணம் செலவு செய்ய நேரிட்டாலும், இந்த மாதம் உங்கள் செலவுகள் கட்டுக்குள்ளாகவே இருக்கும். பணத் தேவை ஏற்பட்டால், நண்பர்களிடமிருந்து நிதி உதவியும் கிடைக்கும். பல நேரங்களில், உங்கள் சேமிப்பையும் பயன்படுத்தி, செலவுகளை சாமாளிப்பீர்கள். 


உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை  

சிம்மம் ராசி -​​ வேலை

இந்த மாதம் உங்கள் வேலை நன்றாகவே நடக்கும். உங்கள் பணிகள் உயரதிகாரிகளின் பாராட்டு பெறும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். இருப்பினும் யாரிடமும் அதிக உரிமை எடுத்து கொள்ளாமல், கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணியில் இது போல கவனம் செலுத்துவது, சிறந்த முன்னேற்றம் தரும்.


வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை  


 சிம்மம் ராசி -​​ தொழில்

தொழிலில் மந்த நிலை நிலவக்கூடும். வாடிக்கையாளர்களில் சிலர், உங்கள் மீது குற்றம் காணவும் வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருந்து தவறுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும், வல்லுனர்கள் போன்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.  


சிம்மம் ராசி -​​ தொழில் வல்லுனர் 

இந்த மாதம் பணிகளை விரைந்து முடிப்பதில், நீங்கள் சில தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இது போன்ற தொல்லைகள், உங்களுக்கு எரிச்சலும் தரலாம். எனினும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு இருக்கும் திறனும், சக பணியாளர்கள் உரிய நேரத்தில் அளிக்கும் ஆதரவும், சிக்கலிலிருந்து விடுபட உறுதுணையாக இருக்கும். 


சிம்மம் ராசி -​​ ஆரோக்கியம்

இந்த மாதம், சிறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். எண்ணெய் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதால், வாய்வுத் தொல்லையும்  ஏற்படலாம். எனவே உணவு முறையில் ஆழ்ந்த கவனம் தேவை. முறையான, தேவைப்படும் அளவிலான தூக்கமும், ஆரோக்கியம் மேம்பட உதவும்.  


ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

சிம்மம் ராசி -​​ மாணவர்கள்

சிம்மராசி மாணவர்களுக்கு இந்த மாதம் ஓரளவு நல்ல பலன்களே கிடைக்கும். படிப்பில் உங்கள் திறமையை நிரூபிக்க, சிறந்த பல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். மேற்படிப்புக்கான, சவாலான வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். எனினும், அவற்றில் ஒன்றிரண்டில்  மட்டுமே வெற்றி கிட்டக்கூடும். பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நன்மதிப்பு உயரும். 


கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 


சுப தினங்கள்: 2,3,5,6,7,10,11,12,13,15,17,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,14,16,18,19,20,24,25,29,30,31


banner

Leave a Reply