AstroVed Menu
AstroVed
search
search

August Monthly Cancer Rasi Palangal 2019 Tamil

dateJuly 29, 2019

கடகம் ராசி -​​ பொதுப்பலன்கள்

கடக ராசி அன்பர்களுக்கு, பல நன்மைகள் தரும் மாதமாக இது அமையும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க சிலருடன் உங்களுக்கு நல்லுறவு ஏற்படும். இதனால் சாதகமான பலன்கள் விளையும். உங்கள் முயற்சிகள் தடையின்றித் தொடரும்; சில விருப்பங்களும் நிறைவேறும். நீங்கள் சிறப்புடன் செயலாற்றி, கடமைகளை நிறைவேற்றி, வெற்றி வாகை சூடுவீர்கள். தொழிலிலும் உங்களால் சிறப்பாகப் பணியாற்றி, இலக்குகளையும் எட்ட முடியும். உங்கள் பொருளாதார நிலையும், இப்பொழுது கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. பிறருக்குத் தீங்கு நினைக்காத உங்கள் எண்ணங்களும், செயல்களும் பிறருக்குத் தூண்டுகோலாக அமையும். இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களும், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால், ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

கடகம் ராசி -​​ காதல் / திருமணம்

காதல் சிறக்கும் காலம் இது. காதலர்கள் தங்களுக்கான இலக்குகளை அமைத்துக் கொண்டு, அவற்றை எட்டத் துடிப்புடன் செயல்பட்டு, தங்கள் முயற்சிகளில் வெற்றியும் அடைவார்கள். கணவன் மனைவி உறவும் சந்தோஷமாகவே இருக்கும். சிலருக்குத் தகுந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை

கடகம் ராசி -​​ நிதி

இது, சராசரியான வருமானமும், அதிக செலவுகளும் உள்ள மாதமாக இருக்கும். நீண்ட காலமாக உங்களுக்கு வரவேண்டிய கடன் தொகைகளை, இப்பொழுது வசூலிப்பீர்கள். தேவையான நேரத்தில், நண்பர்களும் பண உதவி செய்வார்கள். செலவுகளைச் சமாளிக்கும் விதமாக, நீங்கள் சில நல்ல சேமிப்புகளைச் செய்வீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சுக்கிரன் பூஜை

 

கடகம் ராசி -​​ வேலை

பணிகள் இயல்பாக நடைபெறும். உங்கள் வேலைத்திறன், பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற உதவும். பணியிடத்தில் உங்களால் சில சாதனைகளையும் செய்ய இயலும். இது உங்களுக்கு ஆழ்ந்த மனநிறைவை அளிக்கும். இதன் மூலம், உடன் பணியாற்றுபவர்களுக்கு நீங்கள் நல்ல உதாரணமாகவும் திகழ்வீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை  

 
கடகம் ராசி -​​ தொழில்

தொழிலில் பலன்கள் கலந்து காணப்படும். சவாலான வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தாலும், அவற்றில் சிலவற்றைத்தான் உங்களால் குறித்த   நேரத்தில் முடிக்க முடியும். செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது; எனவே, அவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம். உங்கள் நிர்வாகத் திறன், தலைமைப்பண்பு போன்றவை சிறந்து விளங்கும்; இருப்பினும் அவசரப் போக்கு காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருக்கவும்.


கடகம் ராசி -​​ தொழில் வல்லுனர் 

நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் நீங்கள், தொழில் துறையில் முன்னேற்றம் தரும் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவீர்கள். இவை வெற்றியும், பாராட்டும் பெறுவதோடு, உங்களுக்கு அதிக வருமானத்தையும் பெற்றுத் தரும். அதே நேரம், நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு, தொழில் முன்னேற்றத்திற்குத் தேவையான தகவல்களை சேகரித்துக் கொள்வது நல்லது.  


கடகம் ராசி -​​ ஆரோக்கியம்

கடக ராசி அன்பர்களுக்கு, இப்பொழுது சிறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். மந்தமான உணர்வும், அமைதியின்மையும் காணப்படும். எனவே பதட்டத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்கவும். அவை தவறாகப் போகும் வாய்ப்புள்ளது. தனிமையில் இருப்பது தேவையற்ற எண்ணங்களையும், கவலையையும் ஏற்படுத்தும் என்பதால், தனிமையையும் தவிர்க்கப் பாருங்கள்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

கடகம் ராசி -​​ மாணவர்கள்

மாணவர்களுக்கு இது அதிர்ஷ்டம் தரும் நேரம் எனலாம். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்று, இலக்குகளை அடைய முடியும்.     மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமும் செயல் வடிவம் பெறும். உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்குப் பெரிதும் சாதகமாக அமையும். ஆசிரியர்களின் ஆதரவும் கிட்டும். நல்ல பலன்களை அடைவதற்கான தகுந்த நேரமாக இது இருக்கும். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 2,3,5,6,10,11,12,13,15,20,21,22,23,26,27,28

அசுப தினங்கள்: 1,4,8,9,14,16,17,18,19,24,25,29,30,31


banner

Leave a Reply