ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி (புதுக்கோட்டை பிரகதாம்பாள்)
புதுக்கோட்டை மையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் திருகோகர்ணத்தில் பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வர் திருத்தலம் அமைந்துள்ளது. பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது. அன்னை ஸ்ரீ பிரகதாம்பாளிற்கு அரைக்காசம்மன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஒருமுறை புதுக்கோட்டையை ஆண்ட விஜய நகரப் பேரரசர் ஒரு முக்கிய ஆவணம் ஒன்றை தொலைத்து விட்டார். அதைக் கண்டுபிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. அதை மீட்டெடுக்க பிரகதாம்பாள் அம்மனிடம் பிரார்த்தனை செய்தார். அம்மனும் அவரது வேண்டுதலை ஏற்று விருப்பத்தை நிறைவேற்றினார், காணாமல் போன ஆவணமும் கிடைத்து விட்டது.. மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், அரைக்காசு நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாளின் படத்தை பொறித்து, பண்டிகை சமயங்களில் அந்த நாணயங்களை குடிமக்களுக்கு விநியோகம் செய்தார். அந்நாட்களில் அரைக்காசு நாணயங்கள் அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டன. அன்றிலிருந்து அம்மன் "அரைக்காசு அம்மன்" என்று அழைக்கப்படுகிறாள்.
அந்த நிகழ்ச்சி நடந்ததில் இருந்து புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொலைந்த மற்றும் தவறவிட்ட பொருட்களை மீட்டெடுக்க அரைக்காசு அம்மனிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
அம்மனை வழிபட்டால், மறதியாக வைத்த பொருள் அல்லது தவறவிட்ட பொருள் அல்லது காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கலாம் அல்லது குடும்பத்தில் யாராவது காணாமல் போயிருந்தால் அவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இழந்த பொருள் திரும்பக் கிடைத்தவுடன், வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து அதை அம்மனாக நினைத்து பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு. பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும் உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும் கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால் நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும். நினைத்த நற்காரியங்கள் நிறைவேறவும் ஆத்மார்த்தமாக அம்மனை வழிபட்டு வந்தால் காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.

ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி
1. ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
3. ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
4. ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
5. ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
6. ஓம் அன்பிற்கினியவளே போற்றி
7. ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
8. ஓம் அலங்கார நாயகியே போற்ற
9. ஓம் அற்புத தாயே போற்றி
10. ஓம் அற்புத அழகே போற்றி
11. ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
12. ஓம் அறிவுடை தேவியே போற்றி
13. ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
14. ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
15. ஓம் வெல்லப்பிரியையே போற்றி
16. ஓம் சக்தி சொரூபமே போற்றி
17. ஓம் சாந்த சொரூபமே போற்றி
18. ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
19. ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
20. ஓம் சத்திய சொரூபமே போற்றி
21. ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
22. ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
23. ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
24. ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
25. ஓம் சர்வேஸ்வரியே போற்றி
26. ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
27. ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
28. ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
29. ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
30. ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி
31. ஓம் கேடதனை நீக்கிடுவாய் போற்றி
32. ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
33. ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
34. ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
35. ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
36. ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
37. ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
38. ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
39. ஓம் ஓம்கார சக்தியே போற்றி
40. ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி
41, ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
42. ஓம் தேவி பிரியையே போற்றி
43. ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
44. ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
45. ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
46. ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
47. ஓம் நவமணி அரசியே போற்றி
48. ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
49. ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
50. ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி
51. ஓம் உயர்வை தருவாய் போற்றி
52. ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
53. ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
54. ஓம் உயர்மணியே போற்றி
55. ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
56. ஓம் உடன் அருள்வாய் போற்றி
57. ஓம் சுகம் தருவாய் போற்றி
58. ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
59. ஓம் வரம்பல தருபவளே போற்றி
60. ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி
61. ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
62. ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
63. ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
64. ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
65. ஓம் யெளவன நாயகியே போற்றி
66. ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
67. ஓம் ஞான விளக்கே போற்றி
68. ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
69. ஓம் துயர் துடைப்பாய் போற்றி
70. ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
71. ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
72. ஓம் இன்பத்தின் இடமே போற்றி
73. ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
74. ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
75. ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
76. ஓம் மாங்கல்ய தாரிணியே போற்றி
77. ஓம் கிருபை தருவாய் போற்றி
78. ஓம் யோக நாயகியே போற்றி
79. ஓம் மோகன நாயகியே போற்றி
80. ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி
81. ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
82. ஓம் மாணிக்க நாயகியே போற்றி
83. ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
84. ஓம் மந்திர பொருளே போற்றி
85. ஓம் மரகத வடிவே போற்றி
86. ஓம் மாட்சி பொருளே போற்றி
87. ஓம் பொற்புடை நாயகியே போற்றி
88. ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
89. ஓம் புவன நாயகியே போற்றி
90. ஓம் நலந்தரும் நாயகியே போற்றி
91. ஓம் சித்திரக் கொடியே போற்றி
92. ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
93. ஓம் வியப்புடை நாயகியே போற்றி
94. ஓம் பக்குவம் தருவாய் போற்றி
95. ஓம் பண்பு தருவாய் போற்றி
96. ஓம் காக்கும் பொருளே போற்றி
97. ஓம் கருணை நிலவே போற்றி
98. ஓம் பொற்புடை சரணம் போற்றி
99. ஓம் பிறை வடிவே போற்றி
100. ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
101. ஓம் தயாபரியே போற்றி
102. ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
103. ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
104. ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
105. ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
106. ஓம் தீபச் சுடரே போற்றி
107. ஓம் தீப நாயகியே போற்றி
108. ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!
ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு
அன்பே உருவாம் பிரகதாம்பாள் போற்றி
கருந்தார்க் குழலுமை கெளரி போற்றி
மங்கள நாயகி மாமணி போற்றி
எங்கும் நிறைந்த இன்பொருள் போற்றி
இளமை நாயகி எந்தாய் போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
யாழைப் போல் மொழியாயோ போற்றி
பேழை வயிற்றினை பெற்றோய் போற்றி
பால்வள நாயகி பார்ப்பதி போற்றி
சூழ் கொண்டு லகெல்லாம் தோற்றினாய் போற்றி
அறம்வளர் நாயகி அம்மே போற்றி
மறங்கடி கடைக்கண் மனோன்மணி போற்றி
போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
பாகம் பிரியாய் பராபரை போற்றி
உலகுயிர் வளர்க்கும் ஒருத்தி போற்றி
மலர்தல் குவிதலில் மண மலர் போற்றி
கத்து கடல்வரா முத்தே போற்றி
நத்தும் அடியார் நட்பே போற்றி
கற்றவர்க் கின்பக் கடலே போற்றி
மற்றவர்க் கெட்டா வான்வெளி போற்றி
சிவகாமியம்மை செல்வி போற்றி
புவனப் பொருள்களிர்ப் பொருந்தினாய்ப் போற்றி
வலிதா யுத்தமர் வண் தாய் போற்றி
கலிசூழா வகை காப்பாய் போற்றி
வண்டுவார் குழலி மாதா போற்றி
செண்டாடும் விடைச் சிலையே போற்றி
உண்ணா முலையெம் உயர்தாய் போற்றி
கண்ணார் கழுகு கழுத்தாய் போற்றி
பெருந்துறை அரசி பெண்கனி போற்றி
முருந்தேர்முறுவல் முதல்வி போற்றி
வேற்கண் அம்மை மீன்கண் போற்றி’
நாற்பெரும் பயன்தரும் நங்காய் போற்றி
மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
மண்ணொளி பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
பச்சை நிறத்து பைங்கிளி போற்றி
இச்சை இசைந்த இன்பே போற்றி’
குவளைக் கண்மலர் கொம்பே போற்றி
துவளவன் நீற்றோன்தலைவி போற்றி
பவள வரைமேற்ப் பசுங்கொடி போற்றி
துவளிடை சிறுத்த தூயோய் போற்றி
குயில்மொழி மிழற்றும் மயிலியல் போற்றி
எயில் மூன்றெரித்த இலங்கிழை போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
வையமீன் றளிக்கும் வளத்தாய் போற்றி
மெய்யுறு தடியர் விருப்பே போற்றி
பிரகதாம்பாள் நாயகி அன்னை போற்றி
தேவிற் சிறந்த திருமகள் போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
அண்டர் அருந்தா அமிழ்தே போற்றி
பணங்காட் டூருறை பவளே போற்றி
அனங்காட்டும் நடை அழகி போற்றி
தமிழினும் இனிமை சார்ந்தோய் போற்றி
குமிழ்தா மரைமலர் கொழயிடை போற்றி
அமரி குமரி ஆனாய் போற்றி
இமவான் பெற்ற இளையாய் போற்றி
மலையத் துவசன் மகளே போற்றி
கலையாய்க் கனிந்த தலைமகள் போற்றி’
தக்கன் மகளாய்த் தனித்தாய் போற்றி
முக்கட் சுடரின் முதல்வி போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி
கலைமகள் தலைபணி கருத்தே போற்றி
திருக்கோகர்ணம் திகழ்வாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
உயிருள் ஓவிய உருவே போற்றி
செயிரில் காட்சிச் சேயிழை போற்றி
செந்தமிழ்ப் பாவின் தெளிவே போற்றி
எந்தம் மனத்தில் இருப்பாய் போற்றி
நீலி சூலி நெடுங்கனி போற்றி
மேலை வினைகடி விமலை போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி
நீல மேனி வாலிழை போற்றி
கோலக்கொண்டால் நிறத்தாய் போற்றி
மண்முதல் ஐம்பொருள் வளமே போற்றி
பெண் ஆண் அலியுருப் பெற்றோய் போற்றி
ஆப்பனூர் மேவிய ஆத்தாள் போற்றி
மூப்பிறப் பற்ற முதல்வி போற்றி
எண் குணத் தொருவன் இடத்தோய் போற்றி
பன் கனி மென் சொற் பாவாய் போற்றி
பச்சிளம் பெண்ணாய் பகர்வாய் போற்றி
எச்சம் எத்தும் இசைந்தாய் போற்றி
யாழிசைப் பண்ணா யமர்ந்தாய் போற்றி
எழிறுப் பயனாய் இருந்தாய் போற்றி
அருள்மலி கண்ணுடை அன்னையே போற்றி
மருளினர் காணர் வான்பொருள் போற்றி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை போற்றி
பற்றிலா நற்றவர் பற்றே போற்றி
இழையாய் நம்மை இழைப்பாய் போற்றி
குழையாய் அகத்தைக் குழைப்பாய் போற்றி
திருவானைக்கா மங்கைச் செல்வி போற்றி
உருவும் திருவும் உடையாய் போற்றி’
பெருந்துரை அரசி பெண்கனி போற்றி
அருந்துறைத் தமிழின் அமைப்பொருள் போற்றி
கருநிற ஒளிவளர் கடலே போற்றி’
’பருவரை மருந்தே பகவதி போற்றி
சூளா மணியே சுடரொளி போற்றி
ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி
மதுரை அரசியாய் வந்தோய் போற்றி
குதிரைச் சேவகன் கொண்டோய் போற்றி
உலகம் உவப்பற வாழ்வருள் போற்றி
பலநல்லன நீ படைத்தருள்போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
பயிர்கள் பயன்தரப் பரிந்தருள் போற்றி
செல்வம் கல்விச் சிறப்பருள் போற்றி
நல்லன் பொழுக்கம் நல்குவாய் போற்றி
போற்றி உன் பொன்னடிப் போதுபோற்றி
போற்றி புகழ்நிறை திருத்தாள் போற்றி
போற்றி பிரகதாம்பாள் நாயகியே போற்றி போற்றி
வழிபடும் முறை
தொலைந்த பொருள் கிடைக்கவும், தடைபட்டிருக்கும் காரியங்கள் கை கூடிவரவும், தினமும் ஒரு சிறு துண்டு வெல்லத்தை எடுத்து அதற்கு குங்குமம் வைத்து, பூ வைத்து அதையே அம்மனாக பாவித்து நிவேதனம் செய்யவேண்டும்.அந்த வெல்லத்தை வைத்து சர்க்கரை பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கலாம்.
தினமும் காலையில் அம்மனின் மலர் வழிபாடு ஸ்லோகத்தை (108 போற்றி) சொல்லிவர வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.











