AstroVed Menu
AstroVed
search
search
x

மணி பிளான்டை இப்படி வளர்ப்பதன் மூலம் தன ஆகர்ஷன சக்தி பெருகும்.

dateJune 29, 2023

பொதுவாகவே நமது வீட்டை சுற்றி செடிகளை வளர்ப்பது நல்லது. அதிலும் மணி பிளான்டை வளர்ப்பது மிக நல்லது.

மணி பிளான்டின் சிறப்பம்சம்

  • மணி பிளான்ட் அதிக ஆக்சிஜனை வெளிப்படுத்தக் கூடியது.அதன் மூலம் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.
  • மணி பிளான்ட் தன ஆகர்ஷன சக்தியை வளர்க்கக் கூடியது செடி வளர வளர தன ஆகர்ஷன சக்தியை அளிக்கக் கூடியது.
  • இதில் நேர்மறை சக்திகள் அதிகம்.
  • இந்த செடி இருந்தால் வீட்டில் துஷ்ட சக்திகள் நுழையாது.
  • இந்த செடி வளர வளர நமது தொழிலில் முன்னேற்றம் கிட்டும் என்று சீன வாஸ்து மூலம் அறியப்படுகிறது.
  • திருஷ்டியை நீக்கும். கடன் படிப்படியாக குறையும். .

மணி பிளான்ட்டை எப்படி எந்த திசையில் வளர்க்க வேண்டும்:

  • மணி பிளான்ட்டை வீட்டிற்கு முன்பக்கம் வைக்க வேண்டும். பின்பக்கம் அல்லது பக்க வாட்டில் வைக்கக் கூடாது.   
  •  வீட்டுக்குள் நுழையும் பொழுது உங்கள் வலது பக்கம் இருக்க வேண்டும்.
  •  தென்கிழக்கு திசையில் மட்டுமே மணி பிளாண்ட் வைக்க வேண்டும்.
  •  புதன் கிழமை மணி பிளாண்ட்டை வீட்டிற்கு வாங்கி வாங்கி வந்து நட வேண்டும்.
  • வடகிழக்கு திசையில் மணி பிளாண்ட் நடக்கூடாது.
  •  சுத்தமான தண்ணீரை விட வேண்டும்.
  •  மணி பிளான்ட்  தரையை நோக்கி படர விடாதீர்கள். இது வீண் செலவுகளைக் அதிகரிக்கும்.
  • மணி பிளான்ட் எப்போதும் மேல் நோக்கியே வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

banner

Leave a Reply