AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Viruchigam Rasi Palan 2021

dateMarch 8, 2021

ஏப்ரல் 2021 விருச்சிக ராசி பொதுப்பலன்:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சுப மற்றும் அசுப பலன்கள் இணைந்து காணப்படும். குடும்ப சூழல் மனதில் அமைதியை அளிக்கும். வீட்டில்  மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வேலை செய்யும் இடத்திலும்  சில பல பிரச்சினைகளை சந்திக்க நேரும்.  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.  ஏப்ரல் மாத பிற்பகுதியில் நீங்கள் எதிர்பாரா வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு மனை போன்ற அசையாச் சொத்துக்களை நீங்கள் வாங்க முற்படுவீர்கள். நீங்கள் எதிர் பார்க்கும் கடன் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் மூத்த நபர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் மத்திம லாபத்தைக் காண்பார்கள். நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய மாதம் இது. மாணவ மாணவியர்கள் இந்த மாதம் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

குடும்பம் / காதல் உறவு :

இந்த மாதத்தின் ஆரம்பமும் முடிவுப் பகுதியும் காலதர்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். இந்த மாத முதல் பகுதியில்  உங்களுக்கு காதல் வாழ்வு சிறக்கும். நீங்கள் உங்கள் காதலை கவனமாக வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி காண்பீர்கள். என்றாலும் இந்த மாத இடைப்  பகுதியில் சில  சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். நீங்கள் திருமணமானவர் என்றால் இந்த மாதம் நீங்கள்  குடும்பத்தை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.  குடும்பத்தின் பணத் தேவைகளை சமாளிக்க கடின உழைப்பு தேவைப் படுவதால் நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க இயலாமல் போகலாம். இதனால் கணவன் மனைவி  இடையே  பணம் சம்பந்தமான சில பிரச்சைனகள் எழும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரக பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் பணப்புழக்கம் சீராக இருக்க வாய்ப்பில்லை. இதனால் செலவுகளை நீங்கள் கட்டுபடுத்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். என்றாலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சில துறைகளில் இருப்பவர்கள் குறிப்பாக தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த வருமானம் கிட்டும்.  உங்கள் உடன் பிறந்தவர்களுடன் பண விஷயங்களில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பண முதலீடு விஷயங்களில் குடும்பத்தாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 

உங்கள் நிதிநிலை மேன்மை பெற : குபேரன் பூஜை 

வேலை :

வேலை செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவார்கள். பணியிடத்தில் பணிகள் குறித்த எந்தவொரு முடிவுகளையும் தைரியமாக எடுப்பீர்கள். சக பணியாளர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள் என்றாலும் சிற்சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளும் வரத் தான் செய்யும்.  மேலதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு இந்த மாதம் கிட்டும். இது சிலர் மனதில் பொறாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே மற்றவர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். 

தொழில் :

தொழில் சம்பந்தமான எந்தவொரு முக்கியமான  அல்லது பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்க இது ஏற்ற  மாதமல்ல. உங்கள் தொழிலை விரிவாக்க  நீங்கள் அலைந்து திரிய  வேண்டியிருக்கும். பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடம் மற்றும் புதிய நபர்கள் என்பதால் பதட்டம் காரணமாக சில தவறுகள் நேரும். எனவே தொழில் சுமாராக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் வசூல் ஆவதற்கு கால தாமதம் ஆகும். நீங்கள் யோசித்துச் செயல்பட வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள்  இந்த மாதம் பல சவால்களை சந்திக்க நேரும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.  அதற்கான நல்ல பலன்களைக் காண நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.. என்றாலும் உங்கள் முயற்சிகளைக் கைவிடாமல் சரியான நேரத்தில் உங்கள் பணிகளை முடிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய இயலும். உங்களைச் சுற்றி உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் காணப்படுவார்கள் என்பதால் நீங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை அடைய : சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்பத்தினர் அக்கறை காட்டுவார்கள். இது உங்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும். மாதத்தின் முதல் பாதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் இரண்டாம் பாதியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான உடல் பாதிப்புகள் என்றாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். சரியான உணவை உண்பது மற்றும்  உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைத்துக் கொள்ள உதவும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :சனி பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் புதிய விஷயங்களை ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள். பல சவாலான விஷயங்களை அவர்கள் சந்திக்க நேரும்.  கவனச்சிதறலுக்கு எளிதில் ஆட்படுவார்கள். கவனச் சிதறல்  அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வதன் மூலம் வெற்றியை எளிதில் அடையலாம். 

கல்வியில் மேன்மை அடைய :அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் : 1 2,3, 4, 5, 6, 7, 8, 14, 20, 23, 25, 27, 28, 29, 30, 31, 
அசுப நாட்கள் : 9, 10, 11, 12, 13 15, 16, 17, 18, 19, 21, 22, 24, 26.


banner

Leave a Reply