தனுசு ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Dhanusu Rasi Palan 2021

ஏப்ரல் 2021 தனுசு ராசி பொதுப்பலன் :
தனுசு ராசி அன்பர்களே! இது உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுவீர்கள். சேமிப்பு அல்லது முதலீடுகள் என உங்கள் பணத்தை எதிர்கால நலனுக்காக சேமிப்பீர்கள். என்ற போதிலும் நீங்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேசுங்கள். இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆரோக்கியத்தைத் தக்வைக்க, சரியான ஒய்வு, முறையான உணவு, தவறாத உடற்பயிற்சி என்று உங்களுக்கு கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும். கல்வி கற்கும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்புடன் செயல்படுவார்கள். தடைகளைத் தாண்டி சாதித்து வெற்றிகளைக் காண்பார்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
திருமணமான தம்பதிகள் இடையே அன்பும் அன்னியோன்யமும் பெருகும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் சுபச் செய்திகள் கிட்டும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் கண்டு கொள்ளும் வாய்ப்பு கிட்டும். திருமணமான புது மணத்தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் வாய்ப்பு ஏற்படும்.
திருமண வாழ்வில் நல்லிணக்க உறவு காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் நீங்கள் சிறந்த உழைப்பின் மூலம் அதிக அளவில் பணம் ஈட்டுவீர்கள். அதே சமயத்தில் அதை பாதுகாப்பதிலும் அக்கறை காட்டுவீர்கள். அசையாச் சொத்து அல்லது வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பண விஷயத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்றாலும் அவை யாவும் தற்காலிக பிரச்சினைகளே தவிர நிரந்தரமான பிரச்சினைகளாக இருக்காது.
உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை
வேலை :
அலுவலகப் பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் பணியிடத்தில் நேர்மையுடனும் கடினமாகவும் பணியாற்றுவாவீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை செவ்வனே குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் கடின முயற்சிக்கான பலனாக நீங்கள் உரிய அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். என்றாலும் அது உடனடியாகக் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களின் அர்ப்பணிப்பு உணர்வும் விடா முயற்சியும் உங்களை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்லும். சில தடைகள் மற்றும் தாமதங்களை நீங்கள் சந்தித்தாலும் பணியில் பிரகாசிப்பீர்கள்.
தொழில் :
தொழில் அல்லது வியாபாரம் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் சீரான நிலை காண இயலாது. இந்த மாதம் தொழிலில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கூட்டுத் தொழிலிலும் சரியான ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற இயலும்.
தொழில் வல்லுனர்கள் :
நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலக்கட்டமாக இந்த மாதம் இருக்கும். தொழில் புரியும் இடத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சி மூலம் கிடைக்கும் நற்பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்காது. எனவே நீங்கள் பொறுமையாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும். உங்கள் தகுதி மற்றும் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டிய காலக் கட்டம் இது. உங்களை நீங்களே குறைத்து எடை போடுவீர்கள். உங்களின் இந்தக் கருத்து நீங்கள் சிறப்பாக பணியாற்ற இயலாமல் தடுக்கும்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
ஆரோக்கியம் :
கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறிய அளவிலான உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் நீங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது சிறப்பு. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு, தேவையான ஒய்வு மற்றும் உடற்பயிற்சி மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : விஷ்ணு பூஜை
மாணவர்கள் :
தனுசு ராசி மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் சிறப்பாகக் கல்வி பயில்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். கடினமான விஷயங்களைக் கூட நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். வீட்டில் தாயாரின் ஆலோசனை மற்றும் அன்பு உங்களை வழி நடத்தும். உங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கு நீங்கள் ஆலோசனைகளை வழங்குவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 4, 5, 7, 6, 8, 20, 24, 25, 26, 27, 28, 15, 16, 17, 18, 19,
அசுப நாட்கள் : 1, 2, 3, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 29, 30, 31
