AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Thulam Rasi Palan 2021

dateMarch 8, 2021

ஏப்ரல் 2021 துலாம் ராசி பொதுப்பலன்:

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம், நீங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.  எனவே இது உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும் மாதமாக அமையும்.  குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்றாலும் குதூகலமும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். என்றாலும் உங்கள் பேச்சில் கவனம் தேவை.  அதன் காரணமாக பிரச்சினைகள் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்புகளை நீங்கள் சரிவர மேற்கொள்வீர்கள். உங்கள் செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும் மாதமாக இந்த மாதம் அமையும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமன்றி  உங்கள் வேலை மற்றும் தொழிலிலும் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். புதிய மனிதர்களின் நட்பைப் பெறுவீர்கள். அவர்களின் மூலம் சில ஆதாயங்களைக் கூடப்  பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு  இது சிறந்த மாதமாக இருக்கும்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

துலாம் ராசியைச் சார்ந்த  இளம் வயதினர் காதலுக்கு முக்கியத்துவம் அளித்து அது குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். திருமணமான தம்பதிகள் இடையே அன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம்  அதிகரிக்கும்.   குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படும். குடும்பப் பொறுப்புகளை நீங்கள் பொறுமையுடன் மேற்கொண்டு முடித்து அளிப்பதன் மூலம் உங்கள் நல்லுறவு மேலும் சிறக்கும். 

திருமண உறவில்நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :.

இந்த மாதம் நீங்கள் நிதிநிலையை திறமையுடன் கையாளுவீர்கள்.  என்றாலும் உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர் கால நலன்  கருதி நீங்கள் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். எனவே பணம் குறித்த பதட்டம் எதுவும் இருக்காது. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி குடும்ப உறுப்பினர்களை மகிழ்விப்பீர்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :

பணியிடத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படும்.  அந்தப் பணிகளை முடிக்க நீங்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான  வாய்ப்பு  உங்களுக்கு கிடைக்கும். அவர்களின்  வழிகாட்டுதல்கள் உங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அலுவலகப் பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்ல  வேண்டியிருக்கும்.  அந்தப் பயணத்தின்  மூலம்  நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அவர்கள் உறுதுணை புரிவார்கள். அதே சமயத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருப்பது  நல்லது. 

 தொழில் :

உங்கள் தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதிலும் நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் இந்த மாதம் கூட்டுத் தொழில் மூலம்  சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் தொழிலை புதிய இடத்தில் நடத்துவதன் மூலம் தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் தைரியம் மற்றும் ஈடுபாடு உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்  தரும். ;நீங்கள் உங்கள் செயலில் நேர்மையுடன் ஈடுபடுவீர்கள்.  கூட்டுத் தொழில் மேற்கொள்பவர்கள்  கூட்டாளியுடன் கவனமாக இருங்கள்  

தொழில் வல்லுனர்கள் :

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.  நீங்கள் தொழில் புரியும் இடத்தில் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.  எனவே நீங்கள் தொழில் செய்யும்  இடத்தின் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு செய்லபடுவது சிறப்பு.  

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

கடந்த மாத உடல்நலக் கோளாறுகள்  நீங்கி இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் தலைவலி போன்ற சிறு உபாதைகள் வந்து நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மனப் பதட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

மாணவர்கள் :

துலாம் ராசி மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியில்  முன்னேற்றம் காண்பார்கள். எனவே இந்த சிறப்பான நேரத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வது சிறப்பு. கலை, இசை, நாடகம், நடனம் போன்ற படைப்பு மற்றும் கலைத் திறன் தொடர்புடைய துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் சாதனைகளைப் புரிவார்கள். மாணவர்கள் தைரியத்துடனும், புத்திசாலித் தனத்துடனும் செயல்படுவார்கள்.  தவறு செய்யாத மனிதர்களே இல்லை. எனவே உங்கள் தவறுகளில் இருந்து பாடங்களை கத்தாருக் கொண்டு அந்தத் தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

கல்வியில்  மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் :  16, 17, 18, 19, 20, 21, 22, 24, 26, 27, 28, 29, 30, 31
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 13, 14, 159, 10, 11, 12, 25, 23.


banner

Leave a Reply