AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கன்னி ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Kanni Rasi Palan 2021

dateMarch 4, 2021

கன்னி ராசி பலன் ஏப்ரல் 2021 பொதுப்பலன்:  

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்வை விட உங்கள் பணி  மற்றும் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் வேலை அல்லது தொழிலை சிறப்பாகச் செய்து அதன் மூலம் உங்கள் வருமானத்தைப்பெருக்கிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.  குடும்பத்திற்காக நீங்கள் நேரம் ஒதுக்குவதைக் கடினமாக உணர்வீர்கள். இதனால் சில பிரச்சினைகள் தலை தூக்கும். பணிகள் யாவும் நிலுவையில் இருக்கும். அவற்றை முடிக்க நீங்கள் கூடுதல் நேரம் பணிகளை செய்ய வேண்டியிருக்கும். என்றாலும் குடும்பம் மற்றும்  வேலை அல்லது தொழில் என இரண்டையும் சமன் தூக்கி நடத்திச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

கணவன்மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் நிலவும் என்றாலும் இந்த மாத பிற்பகுதியில் அவை சிறிது சிறிதாக விலகும். இருவருக்கும் இடையே நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கருத்தொருமித்து வேறுபாடின்றி ஒற்றுமையாக இருப்பார்கள். காதல் உறவுகளில் சில போராட்டங்கள் இருக்கும். பதட்டமான நிலை மற்றும் உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை இருக்கும். எனவே சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

உங்கள் நிதி நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். இதனால் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணத்தேவை அல்லது பணப் பற்றாக்குறை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் சில வாக்கு வாதங்கள் எழும். இது குடும்ப அமைதியைக் கெடுக்கும்.  அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பண விஷயங்களில் குறிப்பாக வரி போன்ற விஷயங்களில் நீங்கள் கவனமாக இருங்கள்.  வரி ஏய்ப்பு போன்ற விஷயங்களில்  ஈடுபடாதீர்கள். ஆடிட்டரின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை

வேலை :

அலுவலகத்தில் பணி புரியும் கன்னி ராசி அன்பர்கள் பணியிடத்தில் ஏற்ற இறக்க நிலையைக் காண்பார்கள். உங்கள் தன்னம்பிக்கை சிறிது  குறையும். என்றாலும்  நீங்கள் ஆக்கபப் பூர்வமாகச் செயல்படுவீர்கள்.   உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை நீங்கள் உங்கள் பணியிட மேலதிகாரிகளின் மூலம் பெறுவீர்கள்.  இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். அங்கீகாரத்தை உந்து சக்தியாகக் கொண்டு நீங்கள் சிறப்பாக செயலாற்றி அதற்கான பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அலுவலகப் பணி சம்பந்தமாக நீங்கள் பயணம் செல்ல நேரும். அதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப்  பெற இயலும் என்றாலும் நீங்கள் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். 

தொழில் :

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால்  நீங்கள் படிப்படியாக வெற்றி காண்பீர்கள்.  நீடித்த நிலையான வெற்றியைக் காண்பீர்கள். புதிய தொழிலை மேற்கொள்பவர்கள் ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்களை கையொப்பமிடுமுன் ஓன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்பட வேண்டும். உங்களின் சரியான முடிவு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.  நீங்கள் படைப்புத் துறை சார்ந்த வேலை செய்பவர் என்றால் நீங்கள் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்டு சிறந்த வெற்றி காண்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :.

கன்னி ராசியில் பிறந்த, வங்கித் துறை, கல்வித்துறை, ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.  உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களை எடுத்துக்காட்டாகக் கொள்வார்கள்.  நீங்கள் சிறந்த மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளில் சிலருக்கு உங்கள் மீது பொறாமை ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும் நீங்கள் கடமை தவறாமல் பணியாற்றுவதன் மூலம்  அங்கீகாரம் பெறுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம்  நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாதத்தின்  முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் உங்கள் உடல்  நலத்தை பாதிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும்  உங்களுக்கு கவலை அளிக்கும். பதட்டம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வது நல்லது.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

கன்னி ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கவனமுடன் படித்து கல்வி உதவித் தொகை கூடப் பெறுவார்கள். இந்த மாதம் பிற்பகுதியில் சில போராட்டங்களை அவர்கள் சந்திப்பார்கள். புதிய கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள். பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். 
கல்வியில் மேன்மை பெற  : சனி பூஜை 

சுப நாட்கள் :  1, 2,3, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 19, 20, 22, 28, 29, 30, 31.
அசுப நாட்கள் : 4, 5, 6, 7, 12, 13, 14, 21, 23, 24, 25, 26, 27, 


banner

Leave a Reply