மகரம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Magaram Rasi Palan 2021

ஏப்ரல் 2021 மகரம் ராசி பொதுப்பலன் :
மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் சாதகமான முடிவுகளைக் காணும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாதகமான நேரத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நிச்சயமாக வெற்றி காண இயலும. உங்கள் அறிவுத் திறன் இந்த மாதம் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு, புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் திறன் மூலம் நீங்கள் உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மகர ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பதன் மூலம் சிறந்த முறையில் கல்வி பயில முடியும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
காதல் உறவில் இந்த மாதம் சில சவால்களை சந்திக்க நேரும். சில கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் வந்து நீங்கும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒருவரை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். தங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து புதிய வாழ்க்கை தொடங்க மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பிறருடனான உறவில் நல்லிணக்கம் மேம்பட நீங்கள் வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
பண விஷயத்தில் நீங்கள் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள உங்கள் நிதிநிலை உங்களுக்கு துணை புரியும். இதுவரை வாங்கி இருக்கும் கடன் தொகைகள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். செலவுகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பண முதலீடுகளை மேற்கொள்ளும் போது நல்லது கெட்டது ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஆபத்தான முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வது கூடாது. பண விஷயங்களில் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்காதீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
வேலை :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குஇந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றாலும் உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் காணப்படும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும். உத்தியோகம் செய்யும் இடத்தில் சில போட்டிகள் காணப்படும். நீங்கள் உங்கள் போட்டியாளர்களை வென்று பணியில் பிரகாசிப்பீகள். நீங்கள் படைப்பாற்றலுடன் செயல்பட்டு மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள்.
தொழில் :
தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் கூட்டுத் தொழில் புரிபவர் என்றால் ஒப்பந்தங்களைக் கையொப்பமிடுமுன் யோசித்து செயல்பட வேண்டும். உங்கள் தொழிலை நஷ்டமின்றி நடத்த நீங்கள் அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். நீங்கள் உங்களின் தகவல் தொடர்புத் திறன் மூலம் சிறந்த முறையில் கூட்டுத் தொழிலை நடத்தி வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
மகர ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு மேலதிகாரிகளுடன் இந்த முடிவு குறித்த நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து பின் தீர்க்கமான முடிவிற்கு வர வேண்டும். தனியார் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சில பதட்டமான சூழலுக்கு ஆளாவார்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். என்றாலும் உங்கள் மனதில் ஆரோக்கியம் குறித்த கவலை மற்றும் பயம் இருந்து கொண்டு இருக்கும். மனதை ஒருமுகப் படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள். சிறிய உடல் உபாதைகள் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள சோம்பலை ஒழித்து உடற் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை
மாணவர்கள் :
மகர ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். உயர் கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான படிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் வெற்றி காண்பார்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். தங்கள் இலட்சியங்கள் மற்றும் கனவுகள் யாவும் நிறைவேறக் காண்பார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவு கிட்டும்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 5, 6, 8, 9, 12, 14, 15, 16, 19, 20, 22, 21, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 7, 10, 11, 13, 17, 18, 23, 24, 25, 26, 27, 31.
