AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Kumbam Rasi Palan 2021

dateMarch 8, 2021

ஏப்ரல் 2021 கும்பம் ராசி பொதுப்பலன்:

கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள்.  உங்கள் மனதில் தைரியம் மிகுந்து காணப்படும்.  நீங்கள் எந்த விஷயத்திலும் ஆக்கப் பூர்வமாகச் செயல்படுவீர்கள். இந்த மாதம் நீங்கள் தனித்துச் செயல்படுவதைக் காட்டிலும் பிறரின் ஆலோசனை கேட்டு அதனைப் பின்பற்றி நடப்பதன் மூலம் சிறந்த பலன்களைக் காண இயலும். அதற்கான வாய்ப்புகளும் இந்த மாதம் உங்களுக்குக் கிட்டும். குடும்ப விவகாரங்கள் மற்றும் பண விவகாரங்களில் அறிவார்ந்த நபர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் உங்களை வழி நடத்தும். வெளி வட்டாரப் பழக்கங்களில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். நண்பர்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் பணி செய்து கொண்டு இருப்பவர் என்றால் பணியிடத்தில் சில தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள். ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவற்றில் தடைகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீங்கள் தொழில் செய்பவர் என்றால் உங்கள் தொழிலை நீங்கள் சிறப்பாக எடுத்து நடத்துவீர்கள். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் மனதில் ஒருமை நிலையை வளர்த்துக் கொள்வீர்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் /குடும்ப உறவு :

திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.  குறிப்பாக பண விசயமாக கருத்து வேறுபாடு எழும். நீங்கள் தனிமைப்படுத்தப்படுவதைப் போல உணர்வீர்கள்.  அதன் காரணமாக சிறிது பதட்ட நிலை இருக்கும்.   காதல் என்றால் கனவு காணுதலும்  எதிர்பார்ப்புகளும் தவிர்க்க இயலாதது. என்றாலும் இந்த மாதம் உங்கள்  எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் அதிக பணம் செலவு செய்வீர்கள்.  கவனம் தஹெவை. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

பணப்புழக்கம் சீராக இருக்க வாய்பில்லை. பணப்பற்றாக்குறை பற்றிய பயம் உங்கள்  மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். என்றாலும் நீங்கள் உங்கள் செலவிற்கான பணத்தை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  மூலம் பெறுவீர்கள். கடந்த மாதங்களில்  இருந்து வந்த பணப் பிரச்சினைகள் நீங்கும். பிறர் உதவியின்றி உங்கள் நிதிநிலையை  நீங்கள் சமாளிக்க மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்வர்கள்.  உங்கள் தன்னம்பிக்கை மூலம்  லட்சியங்களை நீங்கள் அடைவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை 

வேலை :

உத்தியோகம்  செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள் என்றாலும் இந்த மாத ஆரம்பத்தில் சிறிது தாமதங்கள் ஏற்படும். நீங்கள் தைரியமாக செயல்பட்டு  உத்தியோகத்தில்  பிரகாசிப்பீர்கள். உங்கள் வெற்றிக்கான பாதையில் தடைகள் இருக்கும் என்றாலும் அவற்றை ஒவ்வொன்றாகக் களைந்து முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் போட்டிகள் இருக்கும் என்றாலும் அவற்றை நீங்கள் வெல்வீர்கள். உங்கள் செயல் திறன் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். 

தொழில் :

நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் உங்கள் தொழில் இந்த மாதம் அமோகமாக நடக்கும். குறிப்பாக வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களுக்கு இது சிறந்த பலன்களை அளிக்கும் மாதம் ஆகும். நீங்கள் புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமை மூலம் உங்களது கூட்டாளிகளைக் கவர்வீர்கள்.   என்றாலும் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரும். நிதானமான ஆனால் நீடித்த வெற்றி பெறும் மாதமாக இந்த மாதம் இருக்கும். 

தொழில் வல்லுனர்கள் :

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் புதிய வாய்ப்புகளைப் பற்றி யோசிப்பீர்கள்.  என்றாலும் அது உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்காது. எனவே தற்போது இருக்கும் பணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வளர்ச்சி மந்தப்படும். உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைப்பது கடினமாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். வெளிநாடு சென்று தொழில் செய்ய விரும்புவர்கள் இந்த மாதம் வெற்றி காண்பார்கள். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிரத்தையாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள் :

கும்ப ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். வெளி நாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் வெற்றி காண்பார்கள். கல்வி உதவித் தொகை அல்லது கடன் பெற விரும்புவோர் இந்த மாதம் அதில் வெற்றி காண்பார்கள். கும்ப ராசி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைகளைக்  கேட்டு அதன் வழி நடந்தால் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை 

சுப நாட்கள் : 7, 6, 8, 9, 10, 11, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31.
அசுப நாட்கள் :  1, 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22.


banner

Leave a Reply