AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Meenam Rasi Palan 2021

dateMarch 8, 2021

ஏப்ரல் 2021 மீனம் ராசி பொதுப்பலன்:

மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம்  சில சிறப்பான பலன்கள் கிடைக்கும்  என்றாலும்  சவால்கள் பலவற்றை சந்திக்கவும்  நேரும் காலக் கட்டமாக அமையும். என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிதானமான நீடித்த வளர்ச்சி காணப்படும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். இந்த மாதம் உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சில தடைகள் மற்றும் தாமதங்கள் காணப்படும். நீங்கள் வேலைக்கு  செல்பவர் என்றால் பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் வளர்ச்சி உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது.  தொழில் செய்பவர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி கற்க இது சிறந்த நேரம். கல்வி நிமித்தமாக பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மற்றும் வழிகாட்டிகளின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.   

காதல்/ குடும்ப உறவு :

காதல் வயப்பட்டிருக்கும் இளம் வயது மீன ராசி அன்பர்களுக்கு  இந்த மாதம் மனதில்   சில சஞ்சலங்கள் தோன்றி மறையும். உங்கள் காதலை நீங்கள் வெளிப்படுத்தினாலும்   உங்கள் துணை அதனை ஏற்றுக் கொள்வதில் சில தாமதங்கள் இருக்கும். திருமணமான தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல் பட வேண்டும். 
திருமண உறவில் நல்லிணக்கம் காண : விஷ்ணு பூஜை 

நிதிநிலை :

கடந்த மாதங்களை விட இந்த மாதம் உங்களுக்கு அதிக அளவில் பண வரவு இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் நீங்கள் பிறரிடம் கடன் வாங்குவதைப் பற்றிக் கூட யோசிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருங்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.   இந்த மாதம் முதலீடுகளை மேற்கொள்ளும் என்னணம் இருந்தால் அதனை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடுங்கள். அவசியம் என்றால் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று முதலீடுகளை மேற்கொள்ளவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

வேலை :

இந்த மாதம் பணியில் வளர்ச்சி காணப்படும். முக்கியமாக வெளிநாட்டு வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். மேலதிகாரிகளுடன் இனைந்து பணியாற்றவேண்டிய சூழ்நிலை இருக்கும் என்ற காரணத்தால் மனதில் பதட்ட நிலை இருக்கும். என்றாலும் நீங்கள் தைரியமாகச் செயல்படுவீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.  சக பணியாளர்கள் நட்புணர்வுடன் பழகுவார்கள். 

தொழில் :

உங்கள் தொழிலில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால்  மனதில் சிறிது பதட்ட நிலை இருக்கும். நீங்கள் செய்யும் தொழில் வெளிநாடு சம்பந்தப்பட்டது என்றால் அதன் மூலம் இந்த மாதம் அதிக பணத்தை ஈட்டுவீர்கள். உங்களில் சிலர் இந்த மாதம் கூட்டுத் தொழிலிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் புது கூட்டாளியுடன் சந்திப்பு நிகழ்த்துவீர்கள். புதிய  முதலீட்டாளர்கள் மூலம் உங்கள் தொழில் விரிவடைவதற்கான வாய்ப்ப்பு உள்ளது. என்றாலும் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். 

தொழில் நிபுணர்கள் :

மீன ராசியைச் சார்ந்த தொழில் நிபுணர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன்  செயல்படுவார்கள். உங்கள் தன்னம்பிக்கை தொழிலில் பளிச்சிடும். உங்கள் லட்சியங்களை நீங்கள் எளிதாக அடைவீர்கள். உங்கள் செயல்திறன் கண்டு  உங்கள் மேலதிகாரிகள் மனதில் உங்கள் மீது  நல்ல அபிப்பிராயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அவற்றை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள்  வெற்றி காண்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.  ஆரோக்கியத்தில் சிறு குறைகள் காணப்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது சிறப்பு. முட்டி வலி மற்றும் இடுப்பு வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மீன ராசி மாணவர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.  வெளிநாட்டில் கல்வி  பயில விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். மேல் படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். தைரியமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.  ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் மனதில் தைரியம் கிட்டும். சிறந்த முறையில் நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள இயலும். 

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை

சுப நாட்கள் :   10, 11, 12, 13, 14, 15, 16, 21, 23, 24, 25, 26, 27, 28.
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ,17, 18, 19, 20, 22, 29, 30, 31


banner

Leave a Reply