AstroVed Menu
AstroVed
search
search

அட்சய திருதியையும் குபேர வழிபாடும்

dateApril 28, 2025

குபேரன் யார்?

குபேரன் செல்வத்தின் அதிபதி மற்றும் நிதிகளைப் பாதுகாப்பவர். இந்தப் பூ உலகின் அனைத்து செல்வங்களையும் பாதுகாப்பவர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப செல்வத்தை விநியோகிப்பவர். செல்வம் குறையாமல் பாதுகாப்பவர். குபேரன் பெரும்பாலும் பானை வயிற்றுடன் கூடிய ஒரு கருணையுள்ள கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். அவர் நகைகளை அணிந்திருப்பார். மேலும் ஒரு பணம் நிரம்பிய பானை அல்லது புதையல் பையை வைத்திருப்பார். அவர் யக்ஷர்களின் ராஜா.

பண்டைய வேதங்களின்படி, குபேரன் ஒரு காலத்தில் தனது சக்திகளைப் பெறுவதற்காக கடுமையான தவம் செய்த ஒரு மனிதனாக இருந்தான். பிரம்மா அவனை செல்வத்தின் பாதுகாவலனாகவும், வடக்கு திசையின் பாதுகாவலனாகவும் நியமித்தார். இதன் காரணமாக, செல்வம் மற்றும் வெற்றியுடன் தொடர்புடைய மிகவும் மதிக்கப்படும் தெய்வமாக அவர் ஆனார். தெய்வீகப் பொருளாளராக, இந்து புராணங்களில் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. குபேரனை வழிபடுவதன் மூலம்  செல்வத்தைப் பெற்று அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.

அட்சய திருதியை

“அட்சய” என்பது வடமொழிச் சொல் ஆகும். இந்த சொல்லிற்கு  அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். திருதியை என்பது மூன்றாம் திதி. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் மேற்கொள்ளும் ஜெபம், யாகம், பூஜை மற்றும் தானங்கள் நமக்கு பல மடங்கு நற்பலன்களைப் பெற்றுத் தரும்.எனவே இந்த நாளில் விஷ்ணுவின் திருமார்பில் உறையும் லக்ஷ்மி தேவியை வணங்கி வழிபட வேண்டும் நவ நிதியை அளிக்கும் குபேர வழிபாடும் மேற்கொள்ளலாம். அன்று மேற்கொள்ளும் குபேர வழிபாட்டின் மூலம் செல்வ வளம் பெருகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி  கிட்டும் என்பது ஐதீகம்.

குபேரரை எப்பொழுது வழிபட வேண்டும்?

எந்த நாளிலும் குபேரனை வழிபடலாம். பொதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி  என இந்த இரண்டு நாட்களும் குபேரன் மற்றும் லட்சுமி போன்ற செல்வத்துடன் தொடர்புடைய தெய்வங்களை வணங்குவதற்கு ஏற்ற நாள். மேலும் சில நாட்கள் அவரது ஆசிகளைப் பெறுவதற்கு மிகவும் மங்களகரமானவை. அந்த நாட்களுள் ஒன்று :அட்சய திருதியை ஆகும். இது நித்திய செல்வத்தின் நாள். அட்சய திருதியை குபேரனை வழிபட்டு செழிப்பு மற்றும் வெற்றியைப் பெற ஒரு சிறந்த நாள்.

குபேர பூஜையின் சிறப்புகள்

அட்சய திருதியை அன்று செய்யும் குபேர பூஜை நிதி ஸ்திரத்தன்மையையும் வணிகத்தில் வெற்றியையும் தருகிறது. பக்தர்கள் பெரும்பாலும் குபேரனை லட்சுமி தேவியுடன் சேர்த்து வழிபடுகிறார்கள். ஏனெனில் லக்ஷ்மி தேவிக்கு  நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அளிக்கும் சக்தி உள்ளது. லக்ஷ்மியுடன் சேர்த்து லக்ஷ்மி குபேரனை வணங்குவதன் மூலம்   செல்வத்தை சம்பாதித்தல்,  குவித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை சாத்தியமாகலாம்.

குபேரரை வணங்குவதன் நற்பலன்கள்.

செழிப்பும் செல்வமும்: பூமிக்குரிய அனைத்துப் பொக்கிஷங்களுக்கும் சொந்தக்காரர் குபேரர், அவருடைய ஆசீர்வாதங்கள் ஒருவர் வளமான வாழ்க்கையை அனுபவிக்க உதவும்.

செல்வத்தைப் பாதுகாத்தல்: செல்வத்தை வழங்கும் மற்ற தெய்வங்களைப் போலல்லாமல், குபேரர் உங்கள் செல்வத்தையும் பாதுகாத்தும் அளிப்பார்.  அவரது ஆசீர்வாதங்கள் செல்வ இழப்பு மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன.

குபேரரின் அருள் ஒருவர் செல்வத்தைச் சேகரிக்க உதவுகிறது. மேலும் அதை பொறுப்புடன் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. அவர் விவேகத்தை அளிக்கிறார் மற்றும் செல்வத்தை புத்திசாலித்தனமாக மதிக்கவும் நிர்வகிக்கவும் உங்களுக்கு உதவுகிறார்.

வணிகம் செய்பவர்கள் அல்லது புதிய நிதி முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நல்ல வாய்ப்புகளை உறுதி செய்ய குபேரரின் ஆசிகள் தேவை.

குபேர பூஜை செய்வது மட்டுமன்றி, பின்வருவன போன்ற சில சடங்குகள் மற்றும் நடைமுறைகளைச் செய்வதன் மூலமும் ஒருவர் குபேரனை வழிபடலாம்:

உங்கள் வீடு, அலுவலகம் அல்லது கடையில் குபேர யந்திரத்தை வைத்திருங்கள்: குபேர யந்திரம் என்பது அவரது ஆசிகளைப் பெறுவதற்கான ஒரு புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த சாதனமாகும். அவரது சக்தியை ஈர்க்கவும், செழிப்பு மற்றும் பாதுகாப்பைப் பெறவும் அதை வடக்கு திசையில் வைக்கவும்.

நாணயங்கள், பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக வழங்குங்கள்: செல்வத்தின் பாதுகாவலரான குபேரனுக்கு உங்கள் நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்த காணிக்கைகள். இது அவரை கௌரவிக்கிறது மற்றும் செல்வத்திற்கான அவரது ஆசீர்வாதங்களை ஈர்க்கிறது.

குபேர மந்திரங்களை உச்சரிக்கவும்: குபேரனின் ஆசீர்வாதத்தைப் பெற, "ஓம் யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதன்யாதி படே தன தன்ய சம்ருதிம் மே தேஹி தபய ஸ்வாஹா" போன்ற குறிப்பிட்ட குபேர மந்திரங்களை உச்சரிக்கவும். இந்த மந்திரங்கள் உங்கள் செல்வத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும்.

விளக்குகள் மற்றும் தூப தீப ஆராதனைகள் : குபேர பூஜை செய்யும் போது விளக்குகள் மற்றும் தூபங்களை ஏற்றி, சடங்கின் செயல்திறனை மேம்படுத்தும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கவும்.

செல்வத்தை குவிப்பது மட்டும் போதாது. அதை பொறுப்புடன் நிர்வகிக்கவும், வளர்க்கவும்,  பாதுகாக்கவும் நாம் தகுதி பெற வேண்டும். குபேரனை வழிபடுவதன் மூலம், நம் வாழ்வில் செழிப்பை வரவழைத்து, அது என்றென்றும் நிலைத்திருப்பதை உறுதிசெய்ய முடியும்.


banner

Leave a Reply