ஆடி அமாவாசையும் பித்ருக்கள் ஆசியும்

அமாவசை
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகின்றது. தட்சிணாயன காலத்தில் வரும் அமாவாசை நமது பித்ருக்களுக்கு உகந்த காலம் ஆகும். எனவே தான் ஆடி மாதம் பித்ருக்களுக்கு தரும் அமாவாசை தர்ப்பணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு படையலை ஏற்றுக் கொண்டு முக்தி என்னும் வீடுபேற்றை பெறுவதாக ஐதீகம். அது மட்டும் இன்றி அவர்கள் திருப்தியடைந்து நமக்கும் நம் சந்ததியருக்கும் ஆசிகளை வழங்கிச் செல்கிறார்கள்.
முன்னோர்கள் ஆசிகள் இல்லாவிடில் நமது வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது என்பது மட்டுமல்ல. அவர்கள் சாபம் கொடுத்தால் வாழ்வில் பல முக்கிய விஷயங்களில் தடங்கல்கள், தமாதங்கள், அமைதியின்மை, சண்டை சச்சரவுகள் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். நாம் அளிக்கும் தர்ப்பணம் மூலம் அவர்கள் திருப்தி அடைந்து ஆசிகள் வழங்கும் பொழுது நமது முன்னேற்றத்தில் இருக்கும் தடைகள் யாவும் அகலுகின்றன.
ஆடி அமாவாசை தர்ப்பணம் அளிப்பதன் முக்கியத்துவம்
தர்ப்பணம் அளித்தல் என்பது எளிய சடங்காக இருந்தாலும் அது நமது தலைவிதியையே மாற்றி அமைக்கக் கூடியது. நாம் அளிக்கும் நீரும் எள்ளும் அவர்களுக்கு உணவாக மாறுகிறது. இந்த தர்ப்பனமனது ஏழு தலைமுறைக்கு முந்திய நமது தந்தை மற்றும் தாய் வழி முன்னோர்களுக்கு அளிக்கக் கூடியது ஆகும். எனவே தான் அவர்களுக்கு அளிக்கும் தர்ப்பணம் எதிர்மறை ஆற்றலை நீக்கி நமது பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது.
இந்த தர்ப்பண சடங்கை நாம் ஒவ்வொரு மாதமும் நமது வீட்டில் அமாவாசை நாட்களில் செய்ய வேண்டியது அவசியம். என்றாலும் ஆடி மாதத்தில் காசி மற்றும் ராமேசுவரம் போன்ற புனித தலங்களில் இந்த சடங்குகளை செய்யும் போது நமக்கு கிடைக்கும் புண்ணியம் அதிகமாகிறது.
தர்ப்பணம் அளிக்கும் நேரத்தில் பித்ருக்களுக்கு உரிய மந்திரத்தை ஓத வேண்டியது அவசியம். இந்த சடங்கில் பித்ருக்களுக்கு (வசு, ருத்ரா, ஆதித்யா) உரிய மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் அவர்கள், நமது முன்னோர்களுக்கு 'ஸ்வாத் ' என்ற உணவை எடுத்துச் செல்வார்கள், இது அவர்களை மிகவும் மகிழ்வித்து உயர் நிலை அடைய உதவுகிறது.
ஆடி அமாவாசையின் சிறப்பசங்கள்
நமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆற்றல் நமது முன்னோர்களுக்கு உள்ளது. எனவே தான் ஆடி அமாவசை அன்று அவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் அவர்கள் ஆசிகள் மூலம் நமக்கு முன்னேற்றம் கிட்டும்.
∙ தட்சிணாயன புண்ணிய காலத்தில் மோட்ச திரிகோண ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால்,அன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் மூலம் நமது முன்னோர்களுக்கு வீடுபேறு கிட்டுவது எளிதாகிறது.
∙ சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து மோட்ச ராசியில் சஞ்சரிக்கும் நாளில் அவர்களின் ஆசிகள் நிறைந்து இருக்கும்.
∙ அவர்களின் ஆசிகளைப் பெறுவதன் மூலம் நமது வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நமது குழந்தைகளுக்கும் அவர்களது ஆசிகள் கிட்டும்.
∙ திருமண தாமதங்கள், முன்னேற்றத்தில் இருக்கும் தடைகள், அடிக்கடி வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நல்ல வேலை, வேலையில் முன்னேற்றம் பொருளாதார ஏற்றம் என அனைத்தும் நேர்மறையாக இருக்கும்.
