AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Viruchigam

dateNovember 9, 2021

2022 புத்தாண்டு விருச்சிக ராசி பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பண வரவு இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் புது வருடத்தில் உங்கள் தோற்றத்தில் வனப்பு கூடும். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்: 

நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் நீங்கள் பணியில் சிறந்த சாதனைகளைப் புரிவீர்கள். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். விருச்சிக ராசி வியாபாரிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் சிறப்பாக தொழில் புரிவீர்கள் தொழில் மூலம் சிறந்த லாபம் காண்பீர்கள். உங்களில் சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அல்லது வெளிநாட்டில் தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மைக்கு அஷ்ட லக்ஷ்மி பூஜை

காதல் / திருமணம்:

விருச்சிக ராசி இளம் வயது காதலர்களுக்கு இந்த வருடம் அனுகூலமாக இல்லை. உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். அன்னியோன்யம் கூடும். 

காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலைமை:

விருச்சிக ராசி அன்பர்கள் தங்கள் பொருளாதார நிலையில் இந்த வருடம் ஏற்றம் காண்பார்கள். உங்கள் நிதிநிலை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். வீடு புதுப்பித்தல் அல்லது வீட்டு மராமத்து வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் சேமிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வது நன்மை பயக்கும்.  பணத்தை யாருக்கும் கடனாக வழங்குவதை தவிர்த்தல் நல்லது. 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

மாணவர்கள்: 

பள்ளிக் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் ஈடுபாட்டுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். கல்லூரி மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனமுடன் படிக்க வேண்டும். அதிக நேரம் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள்  அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம்  உடையவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். 

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை

ஆரோக்கியம்: 

மாசு காரணமாக ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எளிய வகையிலான அன்றாட  உடற்பயிற்சி உங்கள் ஆரோயக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும். 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

விரலி மஞ்சள் எடுத்து சிகப்பு நூல் சுற்றி பூஜை அறையில் வைப்பது ஐஸ்வர்யங்களை அதிகப்படுத்தும். 
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்து வாழ்வில் ஏற்றம் பெறலாம். 

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

கேது பூஜை

சாதகமான மாதங்கள் : 

ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் .

சாதகமற்ற மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூலை, அக்டோபர். 


banner

Leave a Reply