2022 New Year Rasi Palangal Thulam
2022 புத்தாண்டு துலாம் ராசி பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! இந்தப் புது வருடத்தில் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை நீங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லிணக்க உறவும் அமைதியும் காணப்படும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த பிணக்குகள் நீங்கும். அவர்களுடன் உங்களின் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஆர்வம் கொள்வீர்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். உங்கள் மனதில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புனித ஸ்தலங்கள் அல்லது ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
வேலை / தொழில்:
நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவர் என்றால் புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். லாபமும் ஆதாயங்களும் கூடும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக அனுகூலமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். பிறரை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் அதனால் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காண கணேசா பூஜை
காதல் / திருமணம்:
துலாம் ராசி காதலர்கள் பரிசு மழையில் நனைவார்கள். வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் துணையின் மூலம் ஆதாயம் பெறுவார்கள். திருமணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்வார்கள். தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கமும் அந்நியோன்யமும் கூடும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலைமை:
துலாம் ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கக் காண்பார்கள். வருமானம் கணிசமாக உயரும். கையில் பணம் புரளும். தொழில் மூலமும் லாபங்கள் பெருகி அதன் மூலம் உங்கள் அந்தஸ்து உயரும். நண்பர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆன்மீகத்திற்காக நன்கொடை போன்ற தரும காரியங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். ஆன்மீக பயணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள்.
நிதி நிலையில் உயர்வு பெற ராகு பூஜை
மாணவர்கள்:
பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடையூறுகள் வந்த போதிலும் அவற்றை சமாளித்து சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். மனதை ஒருமுகப்படுத்த தியானம் மேற்கொள்வது சிறப்பு. பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைத்துறை மற்றும் விஞ்ஞானம் சம்பந்தமாக மேற்கல்வி படிக்க நினைப்பவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மட்டுமே வெற்றி காண இயலும்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
ஆரோக்கியம்:
துலாம் ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். தாயார் உடல் நலனில் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
சிகப்பு ரோஜா செடியை வீட்டு தோட்டத்தில் நட்டு தினமும் நீர் ஊற்றி வரவும்.
வியாழக்கிழமை பார்வதி தேவிக்கு பசு நெய் தீபம் ஏற்றி பூஜை செய்து வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.
சாதகமான மாதங்கள் :
ஜனவரி, மே, ஜூன், ஆகஸ்ட்,செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
சாதகமற்ற மாதங்கள் :
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூலை, டிசம்பர்.







