2022 New Year Rasi Palangal Dhanusu
2022 புத்தாண்டு தனுசு ராசி பொதுப்பலன்கள்:
குடும்ப உறவுகள் வருட ஆரம்பத்தை விட வருடத்தின் பிற்பகுதியில் சிறப்பாக இருக்கும். நீங்கள் உத்தியோகம் செய்பவர் என்றால், உங்கள் திறமை மூலம் நல்ல பெயரையும் புகழையும் பெறுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் உத்தியோகம் குறித்த ஆலோசனைகளை நீங்கள் எளிதாக கிடைக்கப் பெறுவீர்கள். அதிலும் குறிப்பாக வயதில் மூத்த நபர் ஒருவர் உங்களுக்கு உத்தியோகம் குறித்த ஆலோசனைகளை வழங்குவார். உங்கள் பொருளாதார நிலையில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். உங்கள் துணையின் வளர்ச்சிப் பாதையில் சிறு சிறு தடைகள் வந்து போகும். பயணங்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
வேலை / தொழில்:
உத்தியோகம் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் தங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தடைகள் ஏதுமின்றி முன்னேறும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கக் காண்பார்கள். வெளிநாடு தொடர்பான மற்றும் ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் கணிசமான தன லாபத்தை ஈட்டுவார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க சூரியன் பூஜை
காதல் / திருமணம்:
தனுசு ராசி காதலர்கள் இந்த வருடம் தங்கள் உறவில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கக் காண்பார்கள். உங்களில் சிலர் புதிதாக காதல் வலையில் விழும் வாய்ப்பும் உள்ளது. திருமணமானவர்களுக்கு வருட ஆரம்பத்தை விட வருடத்தின் பிற்பகுதியில் உறவில் நல்லிணக்கமும் சுமுக நிலையும் இருக்கும். வருட ஆரம்பத்தில் திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்க இயலாத காரணத்தால் உறவில் அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் இருக்கும். இந்த வருட மத்தியில் உங்கள் அழகு, கலைநயம் மற்றும் உங்கள் மனப் போக்கை உங்கள் துணை விரும்புவார்கள். வருடத்தின் பிற்பகுதியில் தம்பதிகளுக்குள் நல்லிணக்கம் காணப்படும்.
திருமண உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலைமை:
இந்த வருடம் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். இது உங்களுக்கு நீண்ட காலப் பயன் அளிக்கும் வெற்றியாக இருக்கும். உங்கள் வருமானம் பெருகுவதன் மூலம் குடுமபத்தில் வசதிகள் மற்றும் ஆடம்பரம் பெருகும். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். உங்கள் சேமிப்பைக் கொண்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி ஈடுபாட்டுடன் கல்வி பயில்வார்கள். அவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். தேர்வுகளையும் சிறந்த முறையில் எழுதி வெற்றி காண்பார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஞாபக சக்தி குறைபாடு காரணமாக தங்கள் முன்னேற்றத்தில் தடைகளை சந்திக்க நேரும் படிப்பதை ஞாபகம் வைத்துக் கொள்வதை கடினமாக உணர்வார்கள். எனவே மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
ஆரோக்கியம்:
தனுசு ராசி அன்பர்களே! இந்த வருடம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் நீங்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் உங்கள் உடல் மனம் இரண்டையும் நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உணவில் அவசியம் கவனம் தேவை.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
பதினோறு ஐந்து ரூபாய் நாணயங்களை பால் கவரில் சுற்றி மஞ்சள் கயிறை அதன் மேல் சுற்றி முடிச்சு போட்டு எப்பொழுதும் பையில் வைத்துக்கொள்ளவும்.
வியாழக்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு தீபம் ஏற்றி பூஜை செய்து வந்தால் நன்மைகள் ஏற்படும்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.
சாதகமான மாதங்கள் :
ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர்.
சாதகமற்ற மாதங்கள் :
மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.







