2022 New Year Rasi Palangal Kanni
2022 புத்தாண்டு கன்னி ராசி பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவையும், அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள இயலும். குடும்பத்தில் உள்ள வயதான நபர்களிடம் மரியாதையுடன் பழகுங்கள். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாதீர்கள். உங்கள் பொருளாதார ஏற்றத்திற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறிப்பாக அரசு உத்தியோகத்தில் உள்ள கன்னி ராசி அன்பர்கள் திறமையுடன் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலமாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். மாணவர்கள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வருமானத்தைப் பெருக்கும் புதிய வழிமுறைகளை நீங்கள் நாடுவீர்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
வேலை / தொழில்:
உத்தியோகத்தில் இருக்கும், குறிப்பாக அரசுத் துறையில் பணி புரியும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். பணியில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படும். நீங்கள் தனியார் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் உங்களுக்கு உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் வெற்றி காண இயலும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் தொழிலை சிறிது கவனமுடன் கையாள வேண்டும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்க லக்ஷ்மி பூஜை
காதல் / திருமணம்:
கன்னி ராசி அன்பர்களின் காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பு இருக்கும். இதன் காரணமாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். திருமணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நல்லுறவை மேற்கொள்ள முடியும்.
காதல் உறவில் நல்லிணக்கம் காண கோ பூஜை
நிதி நிலைமை:
இந்த வருடம் உங்கள் நிதிநிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். தொழில் மூலம் லாபம் மற்றும் பண வரவு கிடைக்கப் பெற்று உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நலம். அசையும் சொத்துக்களான வண்டி மற்றும் சொகுசு வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகம் மற்றும் கிரிப்டோ கரன்சி எனப்படும் நாணய முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கும்.
நிதி நிலை உயர பால திரிபுர சுந்தரி பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஈடுபாடு மற்றும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் தங்கள் படிப்புக்கேற்ற நல்ல வேலையில் அமர்வார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற பேராசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியமாக இருக்க மன ஆரோக்கியம் முக்கியம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். என்றாலும் மனபதட்டம் காரணமாக இனம் புரியாத உடல் உபாதைகள் ஏற்படும். யோகா, தியானம் மற்றும் இறை வழிபாடு மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சீராக தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
ஓடித் தேய்ந்த குதிரை லாடத்தை தலை வாசல் நிலையில் மாட்டி வைப்பது நன்மை பயக்கும்.
வெள்ளிக்கிழமை காமதேணுவிற்கு பூஜை செய்வது நலம்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.
சாதகமான மாதங்கள் :
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், நவம்பர்,.
சாதகமற்ற மாதங்கள் :
மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.







