AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Magaram

dateNovember 9, 2021

2022 புத்தாண்டு மகர ராசி பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்தப் புது வருடத்தில் உங்கள் நிதிநிலையில் நீங்கள் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் பணபுழக்கம் அபரிமிதமாக இருக்கும். உபரி வருமானத்தை நீங்கள் சேமிப்பதன் மூலம் எதிர்கால பாதுகாப்பைப் பெற இயலும். எனவே இந்த வருடம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அரசுத் துறையில் பணி புரிபவர்களும் தங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.  போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி காண்பார்கள். உங்கள் உடல் நலத்தில் அக்கறை அவசியம் சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நன்மை பயக்கும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

தனியார் துறையில் வேலை செய்யும்  மகர ராசி அன்பர்கள் வெளிநாட்டில் பயிற்சி வகுப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் மருத்துவத் துறையில் பணி புரிபவர் என்றால் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். காலக்கட்டமாக இந்த வருடம் உங்களுக்கு அமையும்.   புதிய தொழில் தொடங்க இது ஏற்ற காலக் கட்டம் ஆகும். அதற்கான முதலீடுகளையும் நீங்கள் தாராளமாக மேற்கொள்ளலாம். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வெளிநாடு சென்று பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க சூரியன் பூஜை

காதல் / திருமணம்:

இளம் வயது மகர ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்த வருடம்  அனுகூலமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் பொழுதுபோக்கு இடங்கள், வெளியிடங்கள் சென்று பரஸ்பரம் உங்கள் கருத்துக்களை பரிமாறி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இந்த வருடம் உங்களுக்கு துணை நிற்கும். நல்ல புரிந்துணர்வு உங்கள் உறவை பலப்படுத்தும். உறவில் நல்லிணக்கமும்  ஒற்றுமையும் நீடிக்கும். 

காதலில் வெற்றி பெற சுக்கிரன் பூஜை

நிதி நிலைமை:

இந்தப் புது வருடத்தில் உங்கள் பொருளாதார நிலை  ஏற்றம் பெறும். இதனால் உங்கள் அந்தஸ்து மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் தான தருமங்கள், ஆலயத் திருப்பணிகள் என ஆன்மீகக் காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

மாணவர்கள்: 

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டை பெறுவார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடின உழைப்பு உங்கள் முன்னேற்றத்திற்குக் கை கொடுக்கும். அது போலவே ஆராயச்சித் துறை மாணவர்களும் தங்கள் இலக்கை அடைய விடா முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி இலக்கை எளிதாக  அடைய முடியும்.

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

ஆரோக்கியம்: 

உங்கள் உடல் நலத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். தொண்டைப் பகுதி அல்லது கழுத்துப் பகுதியில் பிரச்சினை ஏற்பட வாய்புள்ளது. தியானம், உடற்பயிற்சி  மற்றும் சரிவிகித உணவு உங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும். குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் உடல்நலனில் அக்கறை தேவை. அவர்களுக்கு கால் மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சந்திர பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும். 
சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்துவரவும்.. 

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

சனி பூஜை

சாதகமான மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்.


banner

Leave a Reply