Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி | 2020 New Year Rasi Palan Simmam

December 19, 2019 | Total Views : 770
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள் 


சிம்ம ராசி அன்பர்களின் மனோரதங்கள், அதாவது அவர்கள் உள்ளத்தில் நிறைந்துள்ள ஆசைகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும், என்பது தான் 2020 வருட சிம்ம ராசி பலன்களின் சிறப்பம்சம் ஆகும். இப்பொழுது உங்களுக்கு, எதிர்பாராத ஆதாயங்களும் ஏற்படலாம். சிலருக்கு, பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது. மிகச் சரியாக திட்டமிட்ட சில முதலீடுகளையும், நீங்கள் செய்யக்கூடும். சுபச் செலவுகள் செய்யவும் நேரிடும். தான தர்மங்கள், எளியவர்களுக்கு நிதி உதவிகள் போன்றவற்றையும், நீங்கள் செய்யக்கூடும். கடின உழைப்பு, உரிய பலனைப் பெற்றுத் தரும்; பிறரிடமிருந்து உதவிகளும் தாராளமாகக் கிடைக்கும். ஆழ்ந்த மத நம்பிக்கை, ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு, பல நன்மைகள் விளையும் காலம் இது. சிலருக்கு, தெய்வீக ஞானம் பெறும் பாக்கியமும் கிடைக்கும். இந்த பலன்களெல்லாம், குறிப்பாக, வருடத்தின் முதல் பாதியில் ஏற்படும் வாய்ப்புள்ளது.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

ஆண்டின் முதல் 3 மாதங்களில் தைரியம், தொடர்பு கொள்ளும் மற்றும் பேச்சுத் திறன், இசை ஞானம், ஊடகப் பணி போன்றவை சிறந்து விளங்கும். தகவல் தொடர்பு, ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், உளவியல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு, வளம் பெருகும். அயல்நாடுகளில் குடியேறுவதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.   


வேலை


வேலை, தொழில் போன்றவை இந்த ஆண்டு முழுவதும் சுமாராகவே இருக்கும் எனலாம். எனினும், ஜூன் மாதத்தில் சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் உங்களுக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு, சாதகமான பதவிப் பொறுப்பு  போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, கடுமையாக உழைத்தால், வேலையைப் பொறுத்தவரை சுமாராக உள்ள இந்த ஆண்டும், சற்றே சாதகமாக மாறக்கூடும். எனினும், முதல் காலாண்டின் நீங்கள் மிகத் திறமையாகவே செயலாற்றுவீர்கள். முக்கிய முடிவுகள் எதையும், வருடக் கடைசியில், குறிப்பாக கடைசிக் காலாண்டில் எடுக்க வேண்டாம்.


வேலை, தொழில் மேம்பட Kala Bhairava Fire Lab (Homa)               


காதல், மணவாழ்க்கை, உறவுகள் 


வருடத்தின் முதல் மற்றும் கடைசி 3 மாதங்களில், காதலர்களும், தம்பதிகளும், தங்களுக்குள், காதல் உணர்வையும், பரிவையும், பாசத்தையும் நன்கு வெளிப்படுத்துவர். இது அவர்களது உறவை சுமுகமாக்கி, பிணைப்பை வலுப்படுத்தும். திருமணத்திற்குத் துணை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் நோக்கம் நிறைவேறும் வாய்ப்பு சுமாராகவே உள்ளது. எனவே இது குறித்து கடின முயற்சி தேவை.  


உறவுகள் சிறக்க Swayamvara Parvathi Fire Lab (Homa) 


நிதி


ஆண்டு முழுவதுமே, நிதிநிலை திருப்திகரமாகவே இருக்கும்; எனினும், முதல் 3 மாதங்களில் அது மேலும் சிறப்பாக இருக்கும் வாய்ப்புள்ளது. வருடத்தின் முதல் பாதியிலும், கடைசி காலாண்டிலும், சுபச் செலவுகள் செய்வீர்கள். முதல் மற்றும் இறுதிக் காலாண்டுகளில், இறைப் பணிகளுக்காகவும், புனிதப் பயணங்களுக்காகவும், கணிசமான பணம் செலவழிப்பிர்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக, ஊக வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வங்கிக் கணக்கு பெரிதும் உயரும் வாய்ப்புள்ளது. 


நிதிநிலை ஏற்றம் பெற Lakshmi Fire Lab (Homa)


கல்வி 


மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அயல்நாடுகளில் கல்வி கற்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு, அக்டோபர், நவம்பர் மாதங்கள் சாதகம் தரும். கல்வி முயற்சிகளுக்கு, மற்ற மாதங்கள் சுமாரான பலன்களையே தரும். ஆனால், முதல் அரையாண்டிலும், இறுதிக் காலாண்டிலும் போட்டிகள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பயன் பெறலாம். 

கல்வியில் வெற்றி பெற Ganesha Fire Lab (Homa)    

ஆரோக்கியம் 

ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என்ற 4 மாதங்களைத் தவிர, மற்ற காலங்களில், நோய் நொடிகள் ஏதுமின்றி, நீங்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பீர்கள். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது. ஏதாவது வியாதிகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவை கூட, இந்த நேரத்தில் குணமாகி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த 4 மாதங்களில் எல்லா வகையான முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றுவது நல்லது. இது உடற்கோளாறுகளைத் தடுத்து, நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ வகை செய்யும்.  

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Mrithyunjaya Fire Lab (Homa)    

பரிகாரங்கள்

•    அனைவரிடமும் அன்பு, பரிவு, மரியாதை காட்டவும். பிறரது உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்கவும் 
•    பசுக்களிடம் பரிவு காட்டவும்; அவைகளுக்கு உணவளிக்கவும். கோ பூஜையும் செய்யவும் 
•    பகவான் கணபதியை வணங்கவும் 
•    ‘ஓம் பிரம் ப்ரீம் ப்ரௌம், ஸஹ புதாய நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
•    ‘ஓம் நமோ சூர்ய நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும்  கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:  

Hanuman Fire Lab (Homa)

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர், நவம்பர்  
சாதகமற்ற மாதங்கள்: ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் 
(சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்) 

banner

Leave a Reply

Submit Comment