AstroVed Menu
AstroVed
search
search

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி | 2020 New Year Rasi Palan Mithunam

dateDecember 19, 2019

பொதுப்பலன்கள்  

2020 வருடத்தின் செப்டம்பர் மாதம், மிதுன ராசி அன்பர்கள், பொருளாதார உச்சத்தைத் தொடும் நேரமாக அமையும். அவர்கள் வருமானமும், கையிலும், வங்கியிலும் இருக்கும் பணமும் நல்ல வளர்ச்சி அடையும். நவம்பர் மாதத்தில் நோய்நொடிகள் குணமாகும்; ஆரோக்கியம் மேம்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொழில் சிறந்து விளங்கும்; கூட்டாளிகளுக்குள் உறவில் நெருக்கமும், சுமுகமும் ஏற்படும். இந்த நேரத்தில், உங்கள் விருப்பங்களும் நிறைவேறக் கூடும். சமுதாயத்தில் மதிப்பு உயரும்; சமூக வட்டம் பெருகும். புதிய நட்புகளும் கிடைக்கக் கூடும். முதல் மற்றும் கடைசி காலாண்டுகளில், திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

மேலும், ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் உங்கள் துணிச்சல், தொடர்புகள், பேச்சுத் திறன் போன்றவை பெருவளர்ச்சி அடையும். திருமண வாழ்க்கையிலும் ஆனந்தம் பெருகும். அக்கம்பக்கத்திலிருந்து, புதிய அறிமுகங்கள் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் ஏற்படும். கடைசிக் காலாண்டில், உங்களால், கடன்களை அடைத்துவிட முடியும்.     

வேலை

வேலை, தொழில் போன்றவை, கடைசி அரையாண்டில் சிறந்து விளங்கும். இந்த காலகட்டத்தின் முதல் 3 மாதங்களில், பணியில் இருப்பவர்களுக்கும், ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கும், சாதகங்கள் ஏற்படும். அடுத்த 2 மாதங்களில், வர்த்தகத் துறைக்கு நன்மைகள் விளையும்; தொழில் முனைவோரின் துணிச்சலான நடவடிக்கைகள், வெற்றி பெறும். இந்த நேரங்களில், உங்கள் முயற்சிகள் அனைத்தும் பல நன்மைகளை அளிக்கும். இந்த காலகட்டங்களைத் தவிர, ஆண்டின் பிற நேரங்களில், வேலை, தொழில் இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நேர்வது கடினம்.

வேலை, தொழில் மேம்பட Saturn Fire Lab (Homa)       

காதல், மணவாழ்க்கை, உறவுகள் 

தங்கள் திருமணத்திற்குத் தகுந்த துணை தேடிக் கொண்டிருப்பவராகளின் முயற்சிகள், முதல் மற்றும் கடைசி 3 மாதங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இதே காலத்தில், மணவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தம்பதிகளின் உறவும் நெருக்கமடையும். ஆனால் வருடத்தின் மற்ற நேரங்களில் பொதுவாக, துணைகளுக்குள் அன்புப் பரிமாற்றங்கள் குறைவாகவே இருக்கும். எனவே, வாழ்க்கை சுமுகமாகச் செல்ல, சீரிய முயற்சிகள் தேவை.    

உறவுகள் சிறக்க Uma Maheshwara Fire Lab (Homa)

நிதி

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் ஓரளவு நல்ல பலன்களைத் தரும் நிலையில், இவற்றைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் சிறந்த பொருளாதார நன்மைகளைச் செய்யும். நிதி தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கும். ஊக வர்த்தகம் லாபம் தரும். பரம்பரை சொத்து வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், வருடத்தின் மற்ற மாதங்களில், ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கப் போராட வேண்டியிருக்கும்.   

நிதிநிலை ஏற்றம் பெற Lakshmi Kubera Homa (Fire Lab)

கல்வி 

மே, ஜூன் மாதங்களில், மாணவர்கள், படிப்பில் நல்ல முன்னேற்றம் காணமுடியும். இந்த காலகட்டத்தில் எதிர்கொள்ளும் தேர்வுகளை, மிகச் சிறப்பாக எழுதி, அவற்றில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற முடியும். வெளிநாட்டுக் கல்வி பெறச் செல்வதற்காக ‘விசா’ விற்கு விண்ணப்பிக்க ஜூன் மாதம் ஏற்றது. இந்த மாதங்களில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், மாணவர்கள் தங்கள் முழுத்திறமையுடன் படித்து முன்னேறுவார்கள். ஆனால், மற்ற காலங்களில், படிப்பில் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும்.  

கல்வியில் வெற்றி பெற Saraswathi Yantra  

ஆரோக்கியம் 

கடைசி 3 மாதங்களில், உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். குறிப்பாக, நவம்பர் மாதத்தில் நோய்கள் குணமடையும் வாய்ப்பும் உள்ளது. எனினும், எந்த நேரத்திலும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, உடல்நிலையில் ஆழ்ந்த கவனம் தேவை. சுகாதாரத்தைக் கடைபிடிப்பதும் அவசியம். குறிப்பாக, உங்களைப் பொறுத்தவரை, இந்த வருடத் துவக்கமே, சில ஆரோக்கியப் பிரச்சினைகளை தன்னுடன் அழைத்து வரக்கூடும். எனவே, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக் கொள்ளவும். ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கக்கூடிய உணவு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து விடுவது, நோய்களிலிருந்து தப்பிக்க உதவும்.          

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Sharaba Homa    

பரிகாரங்கள்

•    குருமார்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்ற அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளவும் 
•    பெற்றோர், அவர்களின் பெற்றோர் ஆகியவர்களிடம், பயபக்தியுடன் நடந்து கொள்ளவும்
•    வெங்கடேசப் பெருமாளையும், ஹனுமாரையும் வழிபடவும்  
•    ‘ஓம் மகாதேவ்யை ச வித்மஹே, 
துர்க்காயை ச திமஹீ
தன்னோ தேவீ ப்ரசோதயாத்’
என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும்     
பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும்  கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:  

 Rudra Fire Lab

சாதகமான மாதங்கள்: செப்டம்பர், அக்டோபர், நவம்பர்  

சாதகமற்ற மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 

(சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்) 


banner

Leave a Reply