Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மீன ராசி | 2020 New Year Rasi Palan Meenam

December 19, 2019 | Total Views : 1,364
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள் 


மீன ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு, பண வரவைப் பொறுத்தவரை, நல்ல வருடமாகவே திகழும். உங்கள், அபாரமான அறிவாற்றல், தைரியம், பேச்சுத் திறன் போன்றவை, சமுதாயத்தில் உங்களை பிரபலமாக்கும். உங்களுக்குப் பலவகையிலும் லாபம் அல்லது ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பரம்பரை சொத்து கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. காதலர்களுக்கு இடையே நெருக்கம் உண்டாகும்; கணவன்-மனைவி உறவு இன்பம் தரும். உங்கள் வெற்றி, முன்னேற்றம் போன்றவற்றுக்குக் குறுக்கே இருக்கும் தடைகள் அனைத்தும், இந்த காலகட்டத்தில் விலகிவிடும்; உங்கள் விருப்பங்கள் பலவும் நிறைவேறும். எனவே, பொதுவாக வாழ்க்கை, மகிழ்ச்சியாகக் கழியும். ஆண்டின் தொடக்கத்திலிருந்து மே மாத மத்திய காலம் வரை நிகழும் இது போன்ற நல்ல பலன்களை, மீண்டும் நீங்கள், கடைசி இரு மாதங்களான நவம்பர், டிசம்பரின் பொழுதும் காண முடியும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மூன்றாம் காலாண்டில், வேலையில் உங்கள் செயலாற்றலும், உற்பத்தித் திறனும் மிகச் சிறந்து விளங்கக்கூடும். அதேபோல, செல்வமும், சேமிப்பும் உயரும். இதே காலத்தில், வீடு, மனை, வாகனம் வாங்குவது, விற்பது போன்ற லாபகரமான நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடும் வாய்ப்புள்ளது. எதிர்களின் மீது நீங்கள் ஆதிக்கமும் பெறுவீர்கள். 

வேலை

பொதுவாக இந்த வருடம், வேலை நிலவரம், சுமாராகவே இருக்கும். ஆனால், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உங்கள் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது; சொத்து வாங்கி, விற்கும் தொழில் நன்கு நடைபெறும் வாய்ப்பும் உள்ளது. எனினும், தொழிலைப் பொறுத்தவரை, மார்ச் முதல் மே மாத மத்தியப் பகுதி வரை, ஓரளவு சாதகமாகவே இருக்கும் எனலாம். இது போன்ற தொழில் முன்னேற்றம், லாபம் போன்றவை, வருடத்தின் கடைசி இரண்டு மாதங்களிலும் ஏற்படலாம். ஆண்டின் முதல் மற்றும் கடைசிக் காலாண்டுகளில், ஊக வர்த்தகமும் நன்மை தரக்கூடும். 

வேலை, தொழில் மேம்பட 9 Planets Fire Lab (Homa)

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

ஆண்டின் முதல் 5 மாதங்களிலும், கடைசி 3 மாதங்களிலும் துணைகளுக்கிடையே, நல்ல அன்புப் பரிமாற்றம் ஏற்படும். எனவே, இந்த வருடத்தின் பெரும் பகுதியில், உங்கள் காதல் துணை, வாழ்க்கைத் துணை போன்றவர்களுடன் நெருக்கமும், இணக்கமும் மேம்படும்; அவர்களிடம் பாசமும், பரிவும் பெருகும். மணவாழ்க்கை இன்பம் தரும். இந்த 8 மாதங்களில், திருமணத்திற்குத் தகுந்த வரன் தேடும் முயற்சிகளும் நல்ல பலன் தரும். 

உறவுகள் சிறக்க Uma Maheshwara Fire Lab (Homa) 

நிதி

முதல் 5 மற்றும் கடைசி 2 மாதங்களில், வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும், பொதுவாக, வருடம் முழுவதுமே, செல்வம், சேமிப்பு, கையிருப்பு, வங்கி இருப்பு போன்றவை சுமாராகவே இருக்கக் கூடும். ஆனால், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்த நிலை மேம்படும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தேவையற்ற செலவுகள் எதையும் நீங்கள் செய்யும் வாய்ப்பு காணப்படவில்லை; எனவே, இந்த காலத்தில் உங்கள் செலவுகள் அனைத்தும், நியாயமான காரணங்களுக்காகவே இருக்கும். ஆகவே, இந்த வருடத்தில், பொதுவாக, பணம் தொடர்பாக, நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். 

நிதிநிலை ஏற்றம் பெற Wealth Attraction Package

கல்வி 

ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களைத் தவிர, மற்ற நேரங்களில், கல்வியில், சுமாரான பலன்களே விளையும். ஆனால் இந்த 3 மாதங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், படிப்பிலும் சரி, போட்டித் தேர்வுகளிலும் சரி, மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். அயல்நாடு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்கள், இதற்காக, கடும் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, வெற்றிகாண முடியும்.

கல்வியில் வெற்றி பெற Saraswathi Fire Lab (Homa)

ஆரோக்கியம் 

மீன ராசி அன்பர்களின் உடல்நிலை, மோசமாக இருக்கும் வாய்ப்பில்லை  என்றாலும், இந்த வருடம், அது சுமாராகவே இருக்கும் எனலாம். எனவே உங்கள் ஆரோக்கியம், உணவு என்ற இரண்டையும் பொறுத்தவரை, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றைக் கண்டிப்பாகக் கடைபிடிப்பது நல்லது. குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், நோய் நொடிகளால் நீங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், அந்தக் காலகட்டங்களில் பாதுகாப்பைக் கடைபிடிப்பது மிக அவசியம். 

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Health Booster Package

பரிகாரங்கள் 

•    வெங்கடேசப் பெருமாளுக்கு, தீபாராதனை, பூஜை செய்யவும்
•    அருகிலுள்ள சிவன், விஷ்ணு, அம்மன் ஆலயங்களுக்குச் சென்று, உங்கள் நன்மை வேண்டி வழிபடவும் 
•    சக மனிதர்களிடமும், விலங்குகளிடமும் அன்பு காட்டவும்; முடிந்த உதவிகள் செய்யவும் 
•    ‘ஓம் நமோ வெங்கடேசாய’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்
•    ‘ஓம் சிவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும் 
•    ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும் 

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும்  கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:  

Total Power Package

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர்    

சாதகமற்ற மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்டு

(சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்) 
 

banner

Leave a Reply

Submit Comment