மகர ராசி – பொதுப்பலன்கள்
மகர ராசிக்காரர்களுக்கு இது சாதகமான மாதம். வீட்டிற்கு வீடு வாசற்படி என்பார்கள். அது போல் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் அவ்வவ்போது உருவாகி உங்களைத் துன்பத்தில் ஆழ்த்தும். அதிலிருந்து மீண்டு வருவதற்குப் புத்திசாலித்தனமாக செயல்படுவது தான் தீர்வைக் கொடுக்கும். எதிலும் கவனமாக இருந்து நிம்மதியைத் தேடிக்கொள்ளுங்கள். பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வேலை ரீதியாக அனைவராலும் பாராட்டப்பட போகிறீர்கள். அதற்கு உங்களது திறமையே காரணம். பாராட்டு கிடைத்தபின் அடுத்தது என்ன? ஊதிய உயர்வு தான். நீங்கள் விரும்பியபடி வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் பண விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பணத்தினால் நண்பர்களுடன் சில சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். மேலும் அவர்களுக்கு நல்ல யோசனைகளையும் வழங்கி அன்பான சூழலை உருவாக்குங்கள். கடினமான காலகட்டங்களில் உங்களுடைய சிறப்பான தொடர்பு திறன் உங்களுக்கு கை கொடுக்கும். பல வேலைகள் உங்களுக்கு இருந்தாலும் கடமையை மறந்துவிடாதீர்கள். அதில் கண்ணும் கருத்துமாக இருங்கள். குறிப்பாக வேலையில் பாக்கியுள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுங்கள். கொடுக்கப்பட்ட பொறுப்புகளைச் சரியான முறையில் செய்து முடிப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் குறைபாடு எதுவும் இருக்காது.
மகர ராசி – காதல் / திருமணம்
மகர ராசிக்காரர்களின் காதல்/திருமண உறவைப் பொறுத்தவரையில் எந்தவொரு விஷயத்திலும் அவசர முடிவுகளை எடுப்பது பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம். நீங்கள் விரும்பியதைச் செய்ய வேண்டுமென்று நினைப்பதை விட்டுவிட்டு நடைமுறைக்கு எது சாத்தியம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் பாராட்டைப் பெறும். கணவன்-மனைவியிடையே உறவு சுமூகமாக செல்லும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரையில் நீங்கள் நினைத்தால் ஒரு நல்ல சூழலை அவர்களுக்குத் தர முடியும். எல்லாப் பிரச்சனைகளையும் வாழ்க்கைத் துணையிடம் கலந்து ஆலோசித்த முடிவு செய்யுங்கள் அப்போதே பாதி சிக்கல் தீர்ந்துவிடும். நீங்களே எந்தவொரு தனிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகர ராசி – நிதி நிலைமை
மகர ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இதனால் சந்தோஷம் கூடும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள். இதனால் கணிசமான தொகை உங்கள் கைகளுக்கு வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளன. பணம் இருக்கிறது என அதிகம் செலவு செய்து விடாதீர்கள். செலவுகள் அதிகம் ஆகலாம். உண்மையான தேவை என்ன என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தாற் போல் அவற்றிற்கு முன்னுரிமை தாருங்கள். இயந்திரம் மற்றும் வாகன தொடர்பான பணிகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Leave a Reply