Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

மே மாத தனுசு ராசி பலன்கள் 2018 (May Matha Rasi Palan for Dhanusu 2018)

March 7, 2018 | Total Views : 2,409
Zoom In Zoom Out Print

தனுசு ராசி - பொதுப்பலன்கள் நீங்கள் உங்கள் செயல்களில் நிலையான முன்னேற்றம் காண்பீர்கள். எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயலாற்றும் வகையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றியை பெற்றுத் தரும். இந்த மாதம் பயணத்திற்க்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். உங்கள் கடின உழைப்பிற்கு அரசு வகையிலிருந்து ஆதாயம் பெறுவீர்கள். சமூக வாழ்வில் பல சிக்கல்களை தீர்க்கும் ஆலோசகராக செயல்படுவீர்கள். மக்கள் உங்கள் செயலால் கவரப்படுவார்கள். அவர்கள் உங்களை பின்பற்ற முயற்சிப்பார்கள். உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உங்கள் நீண்ட நாளைய விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளவும் கலை மற்றும் விஞ்ஞானத்தை கற்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனுசு ராசி - காதல் / திருமணம் காதலில் சாதாரண நிலை காணப்படும். உங்கள் துணை, தேவைப்படும் சமயத்தில் உங்களுக்கு அதரவு அளிப்பார். சிறிய விஷயங்களுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் துணையிடம் பதட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தம்பதிகள் தங்கள் பொறுப்புகளை சரிவர ஆற்றுவார்கள். உங்கள் திருமணம் பற்றி நீங்கள் முடிவெடுக்கலாம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : அங்காரக பூஜை 2018 May Matha Rasi Palan for Dhanusu தனுசு ராசி - நிதிநிலைமை நிதியைப் பொறுத்தவரை இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் கவனமாக செலவு செய்ய வேண்டும். முதலீடுகளிலிருந்து பண வரவிற்கான வாய்ப்பு உள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்க அதிகம் செலவு செய்வீர்கள். நண்பர்களுக்காக செய்யும் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சனி பூஜை தனுசு ராசி - வேலை இந்த மாதம் நீங்கள் உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும். ஏமாற்றத்தை அளிக்கும் உங்களின் அகந்தைப் போக்கை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் மூலம் கூடுதல் பணிகளை மேற்கொள்ள நேரிடும். இதனால் நீங்கள் பணி செய்யும் நேரம் அதிகரிக்கும். உங்கள் அனைத்துப் பணிகளையும் கவனமாகவும் முறையாகவும் முடிக்க வேண்டும். உங்களுக்கு உதவும் சக பணியாளர்களிடம் நட்புணர்வுடன் நடந்து கொள்ளவும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜை தனுசு ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணப்படும். கடினமான சமயங்களில் உங்கள் துணை உங்களுக்கு உதவி புரிவார். தொழில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்திற்கு நீங்கள் புதிய திட்டங்களை தீட்ட வேண்டும். ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் நீங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறலாம். கட்டண விஷயங்களில் தெளிவாக இருக்கவும். தனுசு ராசி - தொழில் வல்லுநர்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி இந்த மாதம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனுக்கு நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சுமூக உறவு கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். தனுசு ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். பதட்டம் காரணமாக நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். குறித்தநேரத்தில் உணவு உட்கொள்ளவும். தொடர்ந்து தியானம் மேற்கொள்வதன் மூலம் கவனிக்கும் திறனும் மன அமைதியும் மேம்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை தனுசு ராசி - மாணவர்கள் உங்கள் அனைத்து செயல்களிலும் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். மேற்படிப்பு குறித்த உங்கள் முன்னேற்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் நண்பர்களின் பேச்சைக் கேட்டு நடக்காமல் நீங்கள் சொந்தமாக யோசித்து உங்கள் திட்டங்களை செயலாற்ற வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 3rd, 4th, 5th, 10th, 16th, 17th, 18th, 24th, 26th, 27th and 31st அசுப தினங்கள்: 7th, 11th, 15th, 20th, 22nd, 29th and 30th banner

Leave a Reply

Submit Comment