Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 July Matha Rasi Palan for Vrishika (ஜூலை மாத விருச்சிகம் ராசி பலன்கள் 2018)

May 11, 2018 | Total Views : 1,531
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். பல்வேறு ஆதாரங்களில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுடைய சமூக வட்டாரத்தில் புதிய நட்புறவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.. 2018-july-matha-rasi-palan-for-vrishika கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் உண்மையான துணையை கண்டுகொள்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. எல்லா விதமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள் எதிரிகளைக் சமாளித்து வெற்றி பெற்று மனதிருப்தியை அடைவீர்கள். உங்களது மகிழ்ச்சியான பயணம் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும் உங்கள் முன்னேற்றத்தில் பங்களிப்பதாகவும் இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். பொதுவாக நீங்கள் இந்த மாதம் துடிப்புடன் செயல்படுவீர்கள். விருச்சிகம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு உகந்த மாதமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒருவரிடம் நீங்கள் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் வீட்டில் எப்போதும் நட்பான சூழ்நிலையை பராமரிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார். நீங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
விருச்சிகம் ராசி – நிதிநிலைமை இந்த மாதம், நிதியில் லாபம் பெற புதிய பாதை தென்படும். வளமான நிதிநிலை காணப்படும். உங்கள் முதலீடுகள் நல்ல வருவாயைப் பெற்றுத் தரும். உங்கள் எல்லா முயற்சிகளிலிருந்தும் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வீட்டின் உட்புறங்களைப் புதுப்பிப்பதற்கும் கவர்ச்சிகரமான வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்க நேரிடலாம். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை விருச்சிகம் ராசி – வேலை இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பீர்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். குறித்த நேரத்தில் உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை விருச்சிகம் ராசி – தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியிகளிலிருந்தும் உங்கள் முதலீடுகளிலிருந்தும் நீங்கள் சிறந்த லாபம் காண்பீர்கள். நீங்கள் உங்கள் விருப்பங்களை நன்கு உணர்ந்து வியாபாரத்தில் வலுவான நிலையை அடைவீர்கள். இந்த மாதம் பயனுள்ள தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழில் கூட்டாளியுடனான உங்கள் உறவு கணிசமாக மேம்படும். விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கான ஒரு அடையாளத்தையும் முன்னேற்றத்தையும் நீங்கள் காண்பீர்கள். வெற்றி மற்றும் முன்னேற்றத்தை உணர்வதற்கு உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உண்மையான முயற்சிகள் உங்கள் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றும். நீங்கள் உங்கள் பணியிடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும். உயர் அதிகாரிகளுடன் நட்பாக இருக்க வேண்டும். விருச்சிகம் ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும். எனினும், சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை புறக்கணிக்காமல் அதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வெளியே உணவு உட்கொள்வதன் காரணமாக அமிலத்தன்மை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி – மாணவர்கள் நீங்கள் புத்தி கூர்மையுடனும் விரைவாக கற்றுக் கொள்பவராகவும் இருப்பீர்கள். படிப்பின் மீதான உங்கள் ஆர்வமும் உங்கள் கிரகிப்புத்தன்மையும் ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும். பாடங்களை திறம்பட புரிந்துகொள்வதற்கும் உங்கள் கல்வி இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் உயர்ந்த அறிவாற்றல் உங்களுக்கு உதவும்.. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 8, 10, 15, 17, 18, 22, 27 அசுப தினங்கள்: 7, 9, 11, 16, 19, 23,30

Leave a Reply

Submit Comment