ரிஷபம் ராசி – பொதுப்பலன்கள்
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க இந்த மாதம் அனுகூலமாக உள்ளது. உங்களுடைய சமூக வட்டாரத்தில் உள்ளவர்களுடன் சரியான முறையில் தொடர்பாடல் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் அவமதிக்கப்படலாம் நிலுவையிலுள்ள உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் முடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சில அசாதாரணமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கண்டிப்பாக அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பீர்கள். அதிக அளவில் உணர்ச்சிவசப்படாதீர்கள். அதனால் உங்கள் ஆற்றல் குறைய வாய்ப்பள்ளது. சமூக கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் நண்பர்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் பிள்ளைகள் நன்றாகச் செயல்படுவார்கள். அவர்களுடைய வளர்ச்சி உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். இந்த மாதம் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சிறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு உகந்ததாய் இருக்கிறது. உங்கள் உடனடி நடவடிக்கைகள் உங்கள் துணையை ஈர்க்கும். உங்கள் உறவில் எதிர்மறையான தாக்கத்தை நீங்கள் நல்ல முறையில் தீர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை நன்கு அமையும். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பை பரமாரிப்பார்கள். இந்த மாதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிக்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை
ரிஷபம் ராசி – நிதிநிலைமை
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் வருவாய் குறையலாம். உங்களின் கடின முயற்சிகள் இருந்தபோதிலும், தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்கள் காரணமாக நீங்கள் குறைவான நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிதிகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவையற்ற ஆடம்பரத் தேவைகளுக்கு செய்யும் செலவுகளை குறைக்க வேண்டும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜைரிஷபம் ராசி – வேலை
இந்த மாதம், நீங்கள் தடுமாற்றமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் குறிக்கோள்களையும் மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் உற்சாகம் குறுகிய காலமே இருக்கும். மேலும் உங்கள் வேலைகளில் பெரும்பாலானவை முடிக்கப்படாமல் இருக்கலாம். உங்கள் பணிகளை நிறைவு செய்வதில் நேரத்தை உணர்ந்து செயல்படுங்கள். உங்களுடைய சகபணியாளர்களிடம் நீங்கள் நல்லுறவுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெற முடியும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜைரிஷபம் ராசி – தொழில்
இந்த மாதம், உங்கள் வியாபாரத்தில் பெரும் இலாபங்களைக் காணலாம். கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு வேலையையும் மிகச் சரியாக முடித்து நீங்கள் விரும்பிய பலன்களை பெறுவீர்கள். உங்கள் பங்காளிகள் மற்றும் கூட்டாளர்களின் செயல்திட்டங்கள் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். தொழிலில் ஒரு பெரிய வெற்றியை அடைவதற்கு அவர்கள் சிறந்த உதவிகளைச் செய்வார்கள்.
ரிஷபம் ராசி – தொழில் வல்லுநர்
உங்கள் தொழிலில் ஏற்படும் கூடுதல் வேலையால், உங்களுக்கான தனிப்பட்ட நேரம் குறையலாம். உங்கள் அர்ப்பணிப்பு தன்மையால் பாராட்டு பெறுவீர்கள். மதிப்புமிக்க வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் சூழ்நிலை உங்கள் கையில் இல்லை என்ற உணர்வு ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் அமையலாம்.
ரிஷபம் ராசி – ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கிய நிலை மந்தமாக இருக்கலாம். எனவே, இந்த மாதம் நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பராமரிக்க வேண்டும். நீங்கள் எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. எளிதில் சிக்கல்களைத் தீர்க்க உங்கள் பதட்டத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்கவும். சுறுசுறுப்பாக இருப்பதற்குப் பச்சை காய்கறிகளை உட்கொள்ளுங்கள். பெரிய சிக்கல்களை தவிர்க்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன் பூஜைரிஷபம் ராசி – மாணவர்கள்
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் தங்கள் திறமைகளை மேம்படுத்த உகந்த மாதம்.. உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் நட்புணர்வு மற்றும் தன்னிச்சையான செயல்கள் இந்த மாதத்தில் சிறந்த முடிவுகளைக் கொடுக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் : 2, 3, 4, 5, 10, 14, 21, 22 29, 30, 31
அசுப தினங்கள்: 6 , 7 , 11 , 16 , 23 , 27, 28
Tags: July month Rishabam rasi palan in tamil 2018 July rasi palan 2018 July 2018 Rishabam rasi palan July matha Rishabam rasi palan in tamil Rishabam rasi palan July 2018 intha matha rasi palan in tamil 2018 July matha palangal Rishabam Rasi ஜூலை மாத ரிஷபம் ராசி பலன்கள் 2018
Leave a Reply