Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

2018 July Matha Rasi Palan for Dhanusu (ஜூலை மாத தனுசு ராசி பலன்கள் 2018)

May 11, 2018 | Total Views : 2,139
Zoom In Zoom Out Print

தனுசு ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் நல்ல முன்னேற்றமும் பெருமையும் அடைவீர்கள். நீங்கள் ஆன்மீக ஈடுபாடு கொள்வீர்கள். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். சில முக்கியமான பணிகளுக்காக நீங்கள் ஒரு நீண்ட பயணம் அல்லது வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். நிதி ரீதியாக நிலையான முன்னேற்றம் இருக்கும். உங்கள் சமூக புகழ் அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களில் உங்கள் ஆலோசனையைப் பெற மக்கள் உங்களை நாடுவார்கள். உங்களிடம் ஒரு பயமற்ற அணுகுமுறை காணப்படும். உங்களின் மனோதிடம் எல்லா முயற்சிகளிலும் வெற்றியைப் பெற்றுத்தரும். உங்கள் வார்த்தைகள் ஒருபோதும் மற்றவர்களைக் காயப்படுத்தவோ அல்லது தூண்டவோ செய்யாது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நல்ல தொடர்பு வைத்து அவர்களுடன் நேரத்தை அற்புதமாகச் செலவிடுவீர்கள். இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். 2018-july-matha-rasi-palan-for-dhanusu தனுசு ராசி – காதல் / திருமணம் இந்த மாதம், நீங்கள் கடமைகள் மற்றும் செயல்களை தெளிவாக ஆற்றுவீர்கள். உங்கள் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து நல்ல மரியாதையைப் பெறுவீர்கள். காதலர்கள் இனிமையான அனுபவம் பெற்று மகிழலாம். மேலும் மன அமைதியைப் பெறுவதற்காக மகிழ்ச்சியான பயணத்திற்கு திட்டமிடலாம். நீங்கள் விரும்பிய துணையுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

 

தனுசு ராசி – நிதிநிலைமை இந்த மாதத்தில், உங்களுடைய கடந்தகால பிரச்சினைகளை பெரும் முயற்சிகள் மூலம் தீர்க்கலாம் உங்கள் நிதி சம்பந்தமான பொறுப்புக்கள் தொடர் முயற்சிகள் மூலம் நிறைவேறும். நீங்கள் புதிய முதலீடுகள் செய்யலாம். உங்கள் செலவினங்களை குறைக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆடம்பரத்துக்காகச் செலவழிக்க நேரிடலாம். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி பூஜை தனுசு ராசி – வேலை இந்த மாதம் பணியில் உங்கள் திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். ஆனால் உங்களது கவனக் குறைவினால் அந்த வாய்ப்புகளில் சிலவற்றை இழக்க நேரிடலாம். பொறுமையாக இருங்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். வேலையில்லாதோர் தங்கள் முயற்சிகளில் வெற்றியடையலாம். உங்கள் பணியிடத்தில் நேரம் தவறாமையைக் கடைபிடியுங்கள் வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை தனுசு ராசி – தொழில் வணிக வாய்ப்புகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக அமையும். நீங்கள் வெளிநாடுகளில் பயனுள்ள வணிக தொடர்புகளை உருவாக்கலாம். உங்கள் தைரியம் மற்றும் நம்பிக்கை உயர் நிலையில் காணப்படும். மேலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகரமாகச் செயல்படுவீர்கள். தொழிலில் சிறந்த முன்னேற்றம் காண உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் நட்புணர்வுடன் பழகுங்கள். தனுசு ராசி – தொழில் வல்லுநர் தொழிலில், உங்களுடைய உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் ஒரு நல்ல உறவை நீங்கள் பராமரிக்க வேண்டும். உங்கள் திறமை மற்றும் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் தனியாகவே செயல்பட்டு நிலுவையிலுள்ள பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனுசு ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் மாசு காரணமாக தோல் ஒவ்வாமைகள் போன்ற வியாதிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மேலும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். உடலில் உள்ள இரும்புச் சத்து குறைபாட்டைக் சரி செய்ய கால்சியம் நிறைந்த உணவு உட்கொள்வது நல்லது. அதிகபட்ச பயன் பெற எளிய உணவு குறிப்புகளை பின்பற்றவும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை தனுசு ராசி – மாணவர்கள் இந்த மாதம் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான நிர்வாகத்தன்மை உங்களிடம் காணப்படும். உங்களின் நேர்மையான குணத்தால் உங்கள் ஆசிரியர்களின் இதயங்களை வெல்வீர்கள். உங்கள் கல்விக்கான இலக்குகளுக்கு அவர்கள் சிறந்த ஆதரவை வழங்குவார்கள். உங்கள் பெற்றோரிடமிருந்து நல்ல முன்னேற்றத்திற்கான ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் வெளிப்படையான இயல்பு உங்கள் மதிப்பை மேன்மேலும் கூட்டும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2 , 3 , 10, 11, 17, 18, 21, 24, 25, 29,30 அசுப தினங்கள்: 7 , 8 , 12 , 16 , 22, 27,28

banner

Leave a Reply

Submit Comment