கன்னி ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் அனைத்து வகையிலும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. நீங்கள் உங்கள் சுய முன்னேற்றத்திற்காக அயராது உழைப்பீர்கள். மக்களை உங்கள் பக்கம் காந்தம் போல கவர்ந்திழுப்பீர்கள். உங்கள் தூய்மையான மனம் மக்களின் மனதில் நீங்காத நன்மதிப்பை உருவாக்கும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் தைரியமான இயல்பு சில சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ள உதவும். நீங்கள் உங்கள் நண்பர்களிடையே நம்பிக்கைக்குரியவராக காணப்பட்டு நற்பெயரைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் விரும்பும் முடிவுகளை அடைவீர்கள். நீங்கள் அனைவரின் மூலமும் நன்மைகள் அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
கன்னி ராசி - காதல் / திருமணம்
உங்கள் காதல் உறவு சாதாரணமாக இருக்கும். உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளச் சிறப்பான அக்கறை எடுத்துக் கொள்வதால் உங்களுடைய புரிந்து கொள்ளும் தன்மை வலுப்படும். உங்களது அர்ப்பணிப்பு உணர்வு உங்கள் துணையிடம் நல்ல மதிப்பைப் பெற்று தரும். தம்பதிகளுக்கு இது ஒரு வளமான காலம். குடும்பத்தோடு கொண்டாட்டங்கள் அனுபவிக்கலாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை
கன்னி ராசி - நிதிநிலைமை
நிதியைப் பொறுத்த வரையில் இந்த மாதம் மிதமாக இருக்கும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் இன்னும் தொலை நோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும் இல்லை என்றால் கடன்கள் ஏற்பட வழி வகுக்கும். நீங்கள் சிறந்த முயற்சிகள் எடுத்தாலும் உங்கள் வருமானம் குறைந்து காணப்படலாம். தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்கள் உண்டாகலாம். உங்களை விரக்தி அடையச் செய்யலாம்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை

Leave a Reply