July Month Mithuna Rasi Palan in Tamil 2018 ,July Matha Mithuna Rasi Palangal in Tamil 2018

Solar Eclipse 2023: Get Relief from Eclipse Afflictions Through AstroVed’s Solar Eclipse Remedial Rituals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

ஜூலை மாத மிதுனம் ராசி பலன்கள் 2018 (July Matha Rasi Palan for Mithuna 2018)

May 11, 2018 | Total Views : 1,914
Zoom In Zoom Out Print

மிதுனம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் திறன்களுக்கான சோதனை காலம் ஆகும். பண விஷயங்களைச் சமாளிக்க கூர்ந்த நுண்ணறிவு உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய உறவுகளை நீங்கள் பெறலாம், இது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். இந்த மாதம், உங்கள் தொழிலில் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்தி உங்கள் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். எனவே, சாதகமான முடிவுகளைப் பெற நம்பிக்கையுடன் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். உங்கள் நேர்மையான குணம் வேலையில் ஏமாற்றத்தை அளிக்கலாம். உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் சராசரியான லாபங்களைப் பெறலாம். நீங்கள் தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மன அமைதி தரும். நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் மிதுனம் ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையிடம் அன்பைக் காட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த மாதம் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் மிக அமைதியாகவும் அவர்கள் மனம் கோணாத படியும் நடந்த கொள்ள வேண்டும். தம்பதிகளுக்குள் இயல்பான வாழ்க்கை நிலவும். இயல்பு வாழ்க்கையில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை 2018-july-matha-rasi-palan-for-mithuna மிதுனம் ராசி – நிதிநிலைமை இந்த மாதத்தில் உங்களுடைய நிதி நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கலாம். எனவே, நீங்கள் கவனமாக உங்கள் தேவைகளைத் திட்டமிட வேண்டும். உங்கள் தேவைகள் நிறைவேறுவதற்கு ஒரு தெளிவான நிதிநிலையைத் திட்டமிடுங்கள். குறைந்த அளவிலான தொகையை தொடர் முதலீடு செய்வதன் மூலம் அது உங்களுக்கு சிறந்த லாபத்தை பெற்றுத் தரும். நிதி விஷயங்கள் மற்றும் சொத்துப் பிரச்சினைகள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: ராகு பூஜை மிதுனம் ராசி – வேலை கடின உழைப்பு மற்றும் நேர்மையால் நீங்கள் பணியில் அங்கீகாரம் பெறலாம். நீங்கள் உங்கள் முயற்சியில் சிறிது தாமதமாக வெற்றி பெறுவீர்கள். விரைவான முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். அது தேவையற்ற சிக்கல்களுக்கு காரணமாகஅமையலாம். உங்கள் கடின உழைப்பும் நேர்மையும் பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டைப் பெற்று தரும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை மிதுனம் ராசி – தொழில் தொழில் வளர்ச்சி படிப்படியாக முன்னேற்றம் அடையும். நீங்கள் ஒவ்வொரு திட்டத்திலும் ஒவ்வொரு பணியையும் கண்காணிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் திட்ட மேம்படுத்தலுக்குத் தீவிரமாக உங்களுடன் தொடர்பு கொள்ளலாம். பொறுமையாக இருங்கள். உங்கள் பணியை சரியான நேரத்தில் முடிக்கக் கூடுதலாக சில மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களின் செயல்பாட்டு திறன்கள் எல்லா நேரங்களிலும் உங்களுக்குப் உதவிகரமாக இருக்கும். மிதுனம் ராசி – தொழில்வல்லுநர்கள் உங்கள் மேலதிகாரிகளுடன் ஒரு நல்ல உறவை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்கள் வெளிப்படைத்தன்மையினால் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள் நிதி சம்பந்தமான உதவிகளையோ, ஆலோசகளையோ உங்கள் கீழ் பணியாற்றுபவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். அது உங்களுடைய தரத்தைக் குறைக்கலாம். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் உங்களுடைய மதிப்பை நன்கு உணர்வார்கள். உங்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். மிதுனம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் உங்களிடம் காணப்படும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் மருத்துவரிடம்முறையான ஆலோசனையைப் பெற வேண்டும். நோயைக் கட்டுக்குள் வைக்கச் சரியானபடி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இருப்பினும் பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பாகவே காணப்படுவீர்கள். உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் பெற யோகப் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை மிதுனம் ராசி – மாணவர்கள் இந்த மாதத்தில் உங்கள் ஆசைகள் நிறைவேறவும் படிப்பில் அடுத்த நிலையை அடைவதற்கும் சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். உங்களது விருப்பப்பாடத்தில் ஏராளமான விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். கல்வியில் தடையில்லாத ஒரு வளர்ச்சியைப் பெறுவதற்கு உங்களுடைய முயற்சியை நேர்மையாகத் தொடருங்கள். உங்கள் பேராசிரியர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ நற்பெயர் எடுக்க உங்களது பணிகளை சரியான நேரத்தில் முடியுங்கள் கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 4, 5, 8, 11, 15, 16, 22, 24, 25 அசுப தினங்கள் : 9, 12, 17, 19, 28 , 30

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos