Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

ஜூலை மாத சிம்மம் ராசி பலன்கள் 2018 (July Matha Rasi Palan for Simha 2018)

May 11, 2018 | Total Views : 2,361
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நல்ல சம்பவங்கள் நிறைந்து காணப்படும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் நட்புடன் இருப்பார்கள் உங்கள் நண்பர்களுடன் உங்களுக்குப் பரஸ்பர புரிதல் ஏற்படும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் மன உறுதி காரணமாக உங்களுடைய நட்பு வட்டாரத்தில் நம்பிக்கைக்குக் பாத்திரமானவராக நல்ல பெயர் எடுப்பீர்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் நிறைந்த ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். மக்களுடனான உங்கள் உறவு சுமூகமான மற்றும் இணக்கமானதாக மாறும். உங்கள் நிதி நிலைமையில் வலுவான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் மேன்மேலும் சமுதாயத்தில் புதிய நட்புகளை உருவாக்குவீர்கள். இந்த மாதம் உடல்நலத்தில் சிறு சிக்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. சிம்ம ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையுடன் நீங்கள் இனிமையாக உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அன்பாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வார். குடும்பத்தில் சில கொண்டாட்டங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய மாறுபடும் இயல்பு மற்றும் அமைதியின்மையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதை தவிர்க்க முயலுங்கள். உங்கள் வாழ்கைத் துணையுடன் நல்லுறவு காணப்படும். உறவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை 2018-july-matha-rasi-palan-for-simha சிம்ம ராசி – நிதிநிலைமை நிதி நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான மாதம். நீங்கள் முதலீடுகளிலிருந்து இலாபம் பெறுவீர்கள். நீங்கள் வேறு வழிகளில் இருந்தும் சில எதிர்பாராத லாபங்கள் பெறுவீர்கள். விரும்பிய இலாபம் பெற நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெறுங்கள். நீங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை சிம்ம ராசி – வேலை இந்த மாதத்தில் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மற்றும் மேல் அதிகாரிகளிடமிருந்து உதவிகள் பெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். நீங்கள் நல்ல தலைமை பண்பைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுடைய சிக்கலான நடத்தையால் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. அதை வெளிப்படுத்தும் தன்மையில் மற்றவர்களைக் கவருவீர்கள் வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை சிம்ம ராசி – தொழில் தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சில மாற்றங்களையும் அன்றாட புதுப்பித்தலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் தொழில் தேவைகளுக்கு அதிக தொலைவு பயணம் செய்ய நேரிடலாம். பெரிய பிரச்சினைகளையும் உங்கள் அறிவார்ந்த திறமையால் தீர்க்க முடியும் புதிய முன்னேற்றங்களைப் பற்றி நீங்கள் அறிய விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் வெளிப்படையான தன்மையோடு இருப்பதால் உங்களது வாடிக்கையாளர்களிடம் சுமுகமான உறவைப் பராமரிப்பீர்கள் சிம்ம ராசி – தொழில் வல்லுநர் தொழில் ரீதியாக, உங்கள் கடினமான முயற்சிகளுக்கு சாதாரண லாபங்களைப் பெறலாம். உங்களுடைய தொலைத்தொடர்பு திறமைகள் உங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். சில நேரங்களில், உங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பினால் செல்வச் செழிப்பு குறையலாம். உங்கள் தொழிலில் நீங்கள் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். தொழிற்துறையில் நல்ல வளர்ச்சி அடைய அனைவரிடமும் இணக்கத்தைப் பராமரிக்க வேண்டும். சிம்ம ராசி – ஆரோக்கியம் இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. கடுமையான வேலை காரணமாக, உடல் ரீதியிலான சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், உங்கள் மருத்துவ செலவினங்களும் அதிகரிக்கும். நீங்கள் இருமல், சளி வாயு தொல்லையினால் பாதிக்கப்படலாம். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை சிம்ம ராசி – மாணவர்கள் இந்த மாதத்தில், நீங்கள் புதிய மக்களைச் சந்திக்க நேரிடும். அவர்கள் உங்களுக்கு கல்வியில் ஆதரவும் நம்பிக்கையும் அளிப்பார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று எல்லாச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பை மாற்றிக்கொள்வது நலம். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 10, 11, 15, 16, 21, 27, 29, 30,31 அசுப தினங்கள்: 7, 9, 12, 18, 19, 22, 26, 28

banner

Leave a Reply

Submit Comment