துலாம் ராசி - பொதுப்பலன்கள்
சிறந்த மாதம் உங்களுக்காக காத்திருக்கின்றது. நீங்கள் விரும்பியவற்றை அனுபவித்து மகிழ்வீர்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதன் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்விப்பீர்கள். புதிய கூட்டுக் குடும்பத்தில் நுழைய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் அணுகுமுறை மூலம் உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் புகழ் உயரும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் உங்கள் வட்டாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தொழிலில் திருப்திகரமான நம்பிக்கை காணப்படும். உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக காணப்படும்.
துலாம் ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் காதலுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் நோக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறுவீர்கள். உங்கள் வாழ்க்கை குறித்த உங்கள் பெரும்பாலான முடிவுகள் சரியானதாக இருக்கும். உங்களுக்கு பொருத்தமான வரனை இந்த மாதம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : குரு பூஜைதுலாம் ராசி - நிதிநிலைமை
இந்த மாதம் உங்கள் பணத் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் நிதிநிலைமை மேம்படும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால செலவிற்கு இந்த மாதம் நீங்கள் திட்டமிடுவீர்கள். உங்களின் பழைய சொத்து ஒன்றை விற்று நீங்கள் விரும்பும் பணத்தை பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு ஆகலாம்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜைதுலாம் ராசி - வேலை
இந்த மாதம் உங்கள் பணியில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.உங்கள் காலந்தவறாமை மற்றும் பணியை மிகச் சரியாக முழுமையுடன் முடிக்கும் திறமைக்கு நற்பெயர் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சந்திரன் பூஜைதுலாம் ராசி - தொழில்
உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வர்த்தகத் துறையில் சிறந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். அதன் மூலம் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு அரசாங்கத்தின் மூலம் பண உதவி கிடைக்கலாம்.. உங்கள் கூட்டாளியுடன் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் காணப்படும்.
துலாம் ராசி - தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் உங்கள் செயல்திறனுக்கேற்ப பதவி உயர்வு காண வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சி மற்றும் நன்மதிப்பு உங்களை திருப்திப்படுத்தும். இந்த மாதம் எதிர்ப்பு அல்லது தொல்லைகள் விலகும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
துலாம் ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதட்டமில்லாத சூழ்நிலை காணப்படும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் வெற்றி காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் உற்சாகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைதுலாம் ராசி - மாணவர்கள்
துலாம் ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக உள்ளது. உங்கள் கற்பூர புத்தி, புதிய பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளவும், உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். தகவல் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் உங்கள் கடுமையான பேச்சு யாரையாவது புண்படுத்தலாம். நீங்கள் குழுவாக படிக்க விரும்புவீர்கள். அது உங்கள் அறிவை வளர்க்கவும் உங்கள் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.
கல்வியில் நீங்கள் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1, 2, 6, 7, 13, 14, 17, 24, 25 and 29
அசுப தினங்கள்: 4, 8, 15, 19, 22, 27 and 30
Tags: 2018 Thulam Rasi Palan April April Month Thulam Palan 2018 Matha Rasi Palan 2018 Thulam Rasi Palangal 2018 April Thulam துலாம் மாத ராசி பலன் March 2018 April Month Thulam Palan 2018 2018 Thulam Rasi Palan April Matha Rasi Palan 2018 Thulam Rasi Palangal 2018 April Thulam துலாம் மாத ராசி பலன் March 2018
Leave a Reply