மீனம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணிகளை செய்ய திட்டமிடுவீர்கள். சால்ஜாப்பு கூறாமல் அதனை முடிப்பீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். திருப்தியுடன் காணப்படுவீர்கள். பணியில் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி காண்பீர்கள். உங்களின் வெளிப்படையான செயல்கள் மூலம் உங்களின் தரம் உயரும். நீங்கள் உங்கள் பழைய நண்பர்கள் அல்லது உங்களுடன் பணி புரிந்தவர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பு உங்கள் எதிர்கால பணி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மக்கள் உங்களிடம் உதவி பெறுவார்கள். பதிலுக்கு அவர்கள் எப்பொழுதும் நல்லாதரவு அளிப்பார்கள். இந்த மாதம் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். மீனம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் காணப்படும் தவறான புரிந்துணர்வுகளைக் களைவீர்கள். உங்கள் துணை உங்கள் மீது காட்டும் அக்கறை கண்டு நீங்கள் கவலையற்று காணப்படுவீர்கள். உறவினர் வகையிலிருந்து உங்களுக்கு வரன் கிடைக்கலாம். ஆனால் நீங்கள் அதில் ஆர்வம் காட்டமாட்டீர்கள். பொருத்தமான வரன் அமைய பொறுமையுடன் இருங்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சந்திரன் பூஜை மீனம் ராசி - நிதிநிலைமை உங்கள் பணத்தேவைகள் இந்த மாதம் பூர்த்தியடையும். நிபுணர்களின் ஆலோசனை கேட்டு இந்த மாதம் முதலீடு செய்ய நீங்கள் பரிசீலிக்கலாம். வங்கியிருப்பு திருப்திகரமாக இருக்கும். இரண்டாவது வருமானம் காண இந்த மாதம் வாய்ப்புள்ளது. உங்களின் அசையாச் சொத்தை நீங்கள் விரும்பிய தொகைக்கு விற்பனை செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மீனம் ராசி- வேலை பணியில் உங்கள் திறமைகளை மேம்படுத்த இது உகந்த மாதம். உங்கள் கீழ் பணி புரிபவர்கள் நட்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நீங்கள் பல பணிகளை ஆற்றுவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் உங்கள் தன்னியல்பான செயல்களை பாராட்டுவார்கள். முறையான பலன்கள் கிடைக்க பொறுமையுடன் இருங்கள். வேலை மற்றும் தொழில் வளர்ச்சி காண பரிகாரம் : அங்காரக பூஜை மீனம் ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் தொழில் போக்கு சாதரணமாக இருக்கும். நீங்கள் உங்கள் தொழில் யுக்திகளை மாற்றியமைக்க வேண்டும். வரவேற்பு பெற புதிய பொருட்களை அமல்படுத்த வேண்டும். உங்கள் செலவுகளையும் வரவேண்டிய பணத்தையும் கண்காணிக்க வேண்டும். மீனம் ராசி - தொழில் வல்லுநர்கள் உங்களின் கடின முயற்சிக்கு இந்த மாதம் நல்ல பெயரெடுப்பீர்கள். உங்கள் பணிகளை சுதந்திரமாக எடுத்துச் செய்வீர்கள். இது உங்களுக்கு மிகவும் சிறந்தது. உங்கள் மனதில் காணப்படும் நம்பிக்கை உங்களை செயல்பட வைக்கும். நீங்கள் இந்த மாதம் உங்கள் தகவல் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மீனம் ராசி- ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான பெரிய அளவிலான பாதிப்பும் காணப்படாது. என்றாலும் நீங்கள் முறையான உணவு உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மாணவர்கள் மாணவர்களிடம் இந்த மாதம் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பரந்த மனப்பான்மை மூலம் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். நம்பிக்கையுடனும் தெளிவாகவும் இருங்கள். தேவையான சமயத்தில் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஏழை மாணவர்களுக்கு தக்க நேரத்தில் பண உதவி கிடைக்கும். அதிக மதிப்பெண் பெற இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 6, 10, 13, 14, 18, 19, 24, 25, 27 and 28 அசுப தினங்கள்: 2, 8, 11, 17, 23, 29 and 30
Leave a Reply